உங்களுக்கு?
மேலும், பொருளீட்டுவது மட்டுமே கல்வி கற்பதன் நோக்காமாக கருதப்படுவதே தற்கால மனிதர்களிடையே காணப்படும் வேற்றுமைகளின் முக்கிய காரணமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
சாராய வியாபாரிகள் கல்வித்தந்தையாக வலம்வரும் நாட்டில் அரசாங்கமே இலக்குவைத்து சாராயம் விற்கிறது. சாராய ஆலைகளின் அதிபதிகள் ஆட்சி அதிகாரத்தை தடிகொண்டு கையிலெடுத்து தக்கவைத்துக்கொள்ள யார் பெரியவனென யாருக்கோ காட்டுவதற்கு நாட்டையும் நாட்டு மக்களின் மானத்தையும் (எண்ணெய் கொட்டிவிட்டு ) கப்பலில் ஏற்றிவிடுகின்றனர்.
எதைத்தான் கற்பிப்பது?
அவர்களாகவே ஆயிரம் துறைகளை உருவாக்கி ஊடகங்களில் கோடிகள் கொடுத்து விளம்பர உக்தியால் மதிமயங்கி பணம் பறிக்கிறார்கள்.
அங்கே 'கற்றவர்கள்' என்ன மாதிரியாக உருவாக்கப் படுகிறார்கள்? அதற்குத்தக நிற்பார்களா !
ஆம். பொருளை எவ்வாறெங்கிலும் தேடுவதில் ஒற்றைக்காலில் நிற்பார்கள்.
அறவழியில் பொருள் தேடினால் மட்டுமே எல்லாமே இன்பமயமாகும்.
எண்ண ஓட்டம் ....!
14.02.2017
No comments:
Post a Comment