Wednesday, April 1, 2015

உகாண்டா

உகாண்டா


இந்த நூற்றாண்டின் முக்கிய சர்வாதிகாரி
இடி அமீனை ஈன்றவள்....

அரேபிய பாலைவனம் படராமல் இருக்க
அரணாக இருக்கும்
நைல் நதியின் நதிமூலம் நிறைந்த நீர் வளத்தின் ஊற்று...

மா பலா வாழை என்ற முக்கனிகளும் வற்றாமல்
வருடம் முழுக்க தந்திடும் தாயகம்...

கடல் இல்லாவிட்டாலும்
கடல்போல் பரந்த விக்டோரியா ஏரியை தலையில் ஏந்தி நிற்கும் தடாகத் தாய் .....
வெள்ளையர்கள் சொன்ன இருண்ட கண்டம்
நான் கண்ட பச்சை பசேலென்ற இயற்கை போர்த்திய கண்டம் திட்டமிட்டு
முத்து போல ஒளிரும்
திருநாடு.....

மாறிவரும் உலகில்
மாற்றங்களை பெரும் விலைகள் கொடுத்து வாங்கி மாறி
வந்தாரை வரவேற்று வாழ்வளிக்கும் எங்கள் தாயம்மா ....
உகாண்டா ....

கருத்த சிப்பியிலே
வெளுத்த முத்து
எங்களை காத்த முத்து
ஆப்ரிக்காவின் பச்சை முத்து

# உகாண்டா.

ராஜா வாவுபிள்ளை

 அன்புடன் வாழ்த்துகள்
 வாவுபிள்ளை ராஜா(எஸ். எஸ். அப்துல் காதர்)  அவர்களுக்கு

No comments: