Bank Customer :
நான் இன்னைக்கு பாங்க்ல Cheque டெபொசிட் பண்ணா எப்ப sir clear ஆகும்..?
பேங்க் மேனேஜர்:
3 நாள் ஆகும்.
Bank Customer :
என்னோட Cheque எதிர்ல இருக்கற Bank உடையதுதானே. ரெண்டு பேங்கும் எதிர் எதிர்லதானே இருக்கு. பின்ன எதுக்கு சார் இவ்ளோ நாள் ஆகும்..?!
Bank Manager :
சார், Procedure ன்னு ஒன்னு follow பண்ணனும் இல்ல..?!
Bank Customer :
என்னா சார் சொல்றீங்க. உங்க ஸ்டாஃப் ஒருத்தர் ஓடிப்போய் எதிர் பேங்க்ல செக் மாத்திட்டுவர அப்படி என்ன சார் மூனு நாள் பொல்லாத புரசிஜர்..?!
Bank Manager :
ம்ம்ம்... விளக்குறேன். நீங்க யோசிச்சு பாருங்க . நீங்க வெளியில போறீங்க. வழியில ஒரு சுடுகாடு வருது. சுடுகாடு முன்னாடி திடீர்ன்னு நீங்க செத்துபோயீடீங்க.
அப்டியே உங்கள எரிச்சிடுவான்களா இல்ல.... வீட்டுக்கு எடுத்து வந்து சொந்தபந்தம் ஊருலகம் எல்லாம் தெரியப்படுத்தி வரவழச்சி சாங்கியம் செஞ்சி அப்புறம் பாடையில வச்சி சுடுகாட்டுக்கு எடுத்துகிட்டு போவாங்களா ???
Bank Customer :
வேணாம்ய்யா... எனக்கு இங்கே இனி செக்கே மாத்த வேணாம்ய்யா... போங்கைய்யா... நீங்களும் உங்க வெளங்காத வெளக்கமும்...
1 comment:
நல்லவேளை... அந்த வாடிக்கையாளர்
அங்கேயே மயக்கம்போட்டு விழவில்லை!
Post a Comment