Saturday, September 29, 2012

அமெரிக்க ஆதரவாளர்களின் கைகளில் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்


  நபிகள் பெருமானாரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக உலகம் கொந்தளித்தது. மக்களின் கோபம் ஆத்திர அலைகளாக வெடித்தது.. சில இடங்களில் அசம்பாவிதங்களும் நடைபெற்றன.
எதிர்ப்பினை ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்துவது ஒரு போராட்ட முறை.குறுக்கு புத்தி படைத்த மூடர்கள் திருத்தப்பட முடியாத நிலையில் இருப்பவர்களை சட்டத்தின் மூலமாக கடுமையான நடவடிக்கைகளின் மூலம் திருத்துவது ஒருவகை .




அதேவேளையில் அறியாமையில் இருப்பவர்களை திருத்துவதற்கு அழகிய முறையில்அழைப்பு பணி மூலம் தெளிவடைய வைப்பது மற்றொரு வகை.
இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக தலைநகர் டெல்லியில் அமெரிக்க தூதரக அலுவலகம் நூலகம் உள்ளிட்டவை அமைந்துள்ள அமெரிக்க மையத்தின் முகப்பு வாயிலில் சமுதாய ஆர்வலர்கள் சிலர் உலக வழிகாட்டி தூயவர் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை அமெரிக்க தூதரக அதிகாரிகள் , ஊழியர்கள், மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர் அரைமணி நேரத்தில் 125 புத்தகப்பிரதிகள் அன்பளிப்பாக வழங்கியதாகஹுதை ஹித்மத்கர் அமைப்பின் நிர்வாகி பைசல் கான் தெரிவித்தார்.

Friday, September 28, 2012

வால் அருந்த பட்டம் போன இடம் தெரியாது !


வால் அருந்த பட்டம் போன இடம் தெரியாது 
இடுக்கு இல்லா சட்டம் இல்லா இடமில்லை

பொது இடத்தில  மது அருந்த முயன்றேன்
காவலர்  சட்டம் சொல்லி என்னை மடக்கினார்

'குற்றம் செத்தாய் உன்னை அழைத்து செல்ல வேண்டும்'
'நான் வெளிநாடு இது எங்கள் நாட்டில்  குற்றமில்லை'  என்றேன்
'இந்த நாட்டு சட்டம் அறிந்து இங்கு இருக்க வேணும்
சட்டம் அறியாமல் இருப்பது உன் குற்றம்தான்' என்றார்
'அறியாமல் செய்தேன் வருந்துகின்றேன்' என்றேன்
'பணத்தை கொடு விட்டு விடுகிறேன்' என்றார்.
'பணம் வாங்கி விடுவிப்பது குற்றமாகாதா?' என்றேன்
'அதைப்பற்றி நீ பேசினால் உன்னை அடைக்க வேண்டியதுதான்' என்றார்

Thursday, September 27, 2012

மூடர்கள் மௌனத்தை சோதித்தார்கள்!

  பேச வேண்டியதை பேச வேண்டிய    இடத்தில்  அவசியம்  பேச வேண்டும் . பேசாமல் இருப்பதும் தவறு. கோபமடைந்து பேசுவதும், செயல்படுவதும் மற்றும் அமைதிக்கு பாதிப்பு வகையில் பேசுவதும் தவறு. ஒரு தவறு மற்றொரு தவறு செய்வதற்கு  தூண்டுதலாக அமைந்து விடக் கூடாது.
அமைதியாக இருப்பது என்பது ஒரு செயலிலும் ஈடுபடாமல் இருப்பதல்ல . செய்யக் கூடாததை செய்யாமல் இருப்பதே அமைதியாகிவிடும்.  மௌல்விகள்  பாதிரிகள் மற்றும் ஞானிகள் சில  நேரங்களில் அமைதி காப்பதும், கோபமடைவதும் அனைவரையும் அழித்துவிடும்!
 சிலர் கோபமடையலாம் அல்லது வருத்தமடையலாம். நான் எழுதியதில் தவறு இருப்பின் சுட்டிக் காட்டுவதும் அவர்களது கடமை . அதை விடுதது நாங்களே  முற்றிலும்  அறித்தவர்கள் என்பது போன்ற முடிவுக்கு  வருவதும்,
 அமைதி காப்பதும் சிறப்பாகாது. படம் பண்ணி மற்றவர்களை அவமானப் படுத்தும்போதும் கோபமடையாமல் முறையான பதில் கொடுக்கலாம். அமைதி காக்க அது பலவித கேடுகளையும் கொண்டு வர வாய்பும் உண்டாகலாம்

Tuesday, September 25, 2012

கடுமை சொல் சொன்னாலும் கருணை சொல் சொல்வார்!

கடுமை  சொல் சொன்னாலும்
கருணை சொல் சொல்வார்

முகமதைக் கண்டோர் முகம் மலர்வர்
அகமது குளிர மனம் மகிழ்வர்

துன்பப் பட வைத்தோர்க்கும்
நன்மை பட செய்வார் நபி

காய்வழி  வந்து கனியாகி சிறப்படைய
சேய்வழி நகர்ந்து பணிவாகி பெரியோர் போற்ற

அறவழி    அறிந்து பிறவழி நாடுவார்
மறைவழி அறிந்து நபி வழி பேணுவதன்றோ சிறப்பு

கடுஞ்சொல்  சொல்வோர் நல்வழி வர நாளாகுமோ !
பெருஞ்செயல் செய்வோர் அறவழி வழி செய்யச் செய்வது சிறப்பாகுமே

அயலானை அரவணைத்து செயல்பட்டால்
கயவோனும் மறையறிந்து தூய்மையடைவான்

விவேகமில்லா   வீரம்   விரயமாகும்
பணிவில்லா  பாசம்  குறையாகும்
அறிவில்லா ஆற்றல் நாசமாகும்
நமக்கோர் பக்குவம் வந்திட
நாமெல்லாம் ஒட்றுமை அடைந்திட
எடுத்தோம் தொடுத்தோம்  என்றில்லாமல்
நல்லதோர் திட்டம் தீட்ட
செம்மையாய் செய்து முடிக்க
செழுமையாய் சேவை செய்து
பசுமையாய்  மனதில்  நிறுத்திட
இறை  வணக்கம்  இயல்பாய்  இருந்திட
இறைக்   கருணையும்  இருத்தல் வேண்டும்
நமக்கும் நற்பண்புகள் வந்திடும்
நமக்கும் நற்பயன்கள் கிடைத்திடும்

கயவோனை காய்ச்சியெடுத்தால் மாண்டு போவான்
மாக்கள் மக்களாக மாற வேண்டும்
மக்களின்றி நாமிருந்து என்ன  பயன்

கற்றதும் பெற்றதும் காயப்படுத்துவதற்கா
கற்றவை நான் நலம்பட வாழ மற்றும்

மற்றவர்க்கு போதிக்க வந்த அமானுதமே(அடமானமே) உம் கல்வி

Monday, September 24, 2012

ஏதுண்டு உம்மிடத்தில் என்பார் ?


ஏதுண்டு உம்மிடத்தில் என்பார்? 
வேதமுண்டு எம்மிடத்தில் என்போம்
வேதத்தை உம்மனத்தில் நிறுத்தினாயா என்பார்? 

பேதமை எம் மனதில்  ஊன்றியதால் பொருள் விளங்காமல் போயிற்று
சேதம் வராமல் சேர்த்து வைத்தேன்
கல்லாமை கல் நெஞ்சம் உருவாகியது
சேதமின்றி பொருளறிந்து பெற்ற வேத அறிவு விளக்கம் கொடுத்தது
கல் நெஞ்சம் கருகி மேன்மையை அடைத்த உள்ளம் ஒளி வீச உணர்கின்றேன்

ஒற்றுமையில் சிக்குண்டி நம்மில் நாமே மோதுண்டோம் கல் நெஞ்சம்
ஒற்றுமையின்  உயர்வை  வேதம் காட்ட சிக்கல் அவிழ்ந்தது
புல்லுரிவிகள் புகழ் நாடி .பணம் நாடி நம்மை பிரித்தாளும் சக்தியை முறியடித்தோம்
 வேதம் அறிந்து கல்விகற்று  களையடுக்க வேண்டும்
அயலானின் ஆற்றலால் நம்மாற்றல் வீழ்ந்திடுமோ!
 செயலானின்    ஆற்றல் ஓய்ந்த்திடுமோ !
அறிவின் ஆக்கம் அனைத்தையும் வெல்லும்
'சீன தேசம் சென்ராயினும் சீர் கல்வியை நாடு' என நபி மொழி இருக்க
நக்குள்ளே ஒளிந்திருக்கும் ஆற்றல் ஒளியாய் வீச மற்றவர் நம் வழி நாடுவார்

ஒதுவோம் பொருள் அறிந்து ஓதுவோம்
ஓதிய வழியே வாழ்ந்து மறை ஒளி மிளிரச் செய்வோம்
இறைவன் காட்டிய வழி வாழ்வின் நன்னெறி
இறைவனைத்  தொழுது  நிறைவு கொள்வோம்  

சகிப்புத் தன்மையில்லா முஸ்லிம்கள்

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக ,இன்னொஸென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் திரைப்படத்தைத்  தடை செய்யக் கோருவது நியாயமா? - கோபாலன், பொள்ளாச்சி


கருத்துச் சுதந்திரம் எதுவரை? யாருக்கு..? இந்த விஷயத்தில் இந்தியர்களான நாம் இரட்டை நிலைப்பாட்டைக் கைக்கொள்கிறோம்.

இந்தியாவில் சமீப காலமாக , ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகக் கீழ்த்தரமாக்  எதையும் செய்யலாம்  எதையும் எழுதலாம் பேசலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை இணையதள வாசகர்கள் நன்கறிவர். தமக்கு எதிராகப் பரப்பப் படும் கீழ்த்தரமான அவதூறுகளுக்கு அவர்கள் மறுப்புச் சொன்னால் "கருத்துச் சுதந்திரம் போச்சே" எனக் கூப்பாடு போடுகிறார்கள்.

வேண்டாததை வேண்டி வினையில் மாட்டினேன்


கவிதை வேண்டுமென்று கவிஞர்  வைரமுத்துவுடன் போனேன்
வைரமும் முத்துவும் இருந்தால் வா! ' தருகிறேன் என்றார்

பணம் சேர்க்க வழி சொல்லுங்கள்' என கனிமொழியைக் கேட்டேன்
கனிவாக பதில்  சொல்லாமல் நகர்ந்து போனார்

கல்  வெட்டி  பணம் சேர்த்த  செல்வந்தரிடம் 'பணம் பண்ண வழி' கேட்டேன்
'பணம் சேர்த்த பின் கடுஞ்சிறையில்  போக விருப்பமானால் சொல்கின்றேன்' என்றார் 

'புகழ் வேண்டுமென்று' கலைஞரிடன் ஆலோசனை கேட்டேன் 
அதற்கு மக்கட்பேறு வேண்டுமென்று கலையாகச் சொன்னார்

வேலை வேண்டுமென்று' முதல்வரைக் கேட்டேன்
எனக்கு  ஓய்வில்லை உனக்கு பதில் சொல்ல. வேண்டுமென்றால் இனாம் தருகிறேன் வாங்கிப் போ' என்றார்

கல்வி நாடி கல்லூரி நாடினேன்
'காசைப்  போட்டால் கல்வி கிடைக்குமென்றார்'