கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக ,இன்னொஸென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் திரைப்படத்தைத் தடை செய்யக் கோருவது நியாயமா? - கோபாலன், பொள்ளாச்சி
கருத்துச் சுதந்திரம் எதுவரை? யாருக்கு..? இந்த விஷயத்தில் இந்தியர்களான நாம் இரட்டை நிலைப்பாட்டைக் கைக்கொள்கிறோம்.
இந்தியாவில் சமீப காலமாக , ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகக் கீழ்த்தரமாக் எதையும் செய்யலாம் எதையும் எழுதலாம் பேசலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை இணையதள வாசகர்கள் நன்கறிவர். தமக்கு எதிராகப் பரப்பப் படும் கீழ்த்தரமான அவதூறுகளுக்கு அவர்கள் மறுப்புச் சொன்னால் "கருத்துச் சுதந்திரம் போச்சே" எனக் கூப்பாடு போடுகிறார்கள்.
Showing posts with label வணங்காமுடி பதில்கள். Show all posts
Showing posts with label வணங்காமுடி பதில்கள். Show all posts
Monday, September 24, 2012
Monday, November 21, 2011
பராக் ஒபாமா ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தால்?
என்னை நானே ஜாம்பவான்களுடன் ஒப்பிடக் கூடாது.
கருணாநிதி தம் கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாக்கப் போவதாக அறிவித்திருந்தாரே!
அதுபோல் ஜெயலலிதாவும் தம் வீட்டை மனநல மருத்துவமனையாக மாற்றிப் பொதுத் தொண்டாற்றினால் இவருக்கென்ன?
"ஸ்டாலினுக்கு அம்மருத்துவமனையில் நிச்சயமாக இடம் உண்டு" என ஜெயலலிதாவோ அல்லது அவரது அமைச்சர்களோ இன்னும் எதிர் அறிக்கை விடாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.
Saturday, August 20, 2011
இமயமலையில் பாபாவைச் சந்திக்காமல் ரஜினி ஏன் சிகிட்சைக்குச் சிங்கப்பூர் சென்றார்?
அவரைப் பகைத்துக் கொள்ள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் முனையாது; காங்கிரஸைப் பகைத்துக் கொள்ள ஜெயலலிதாவும் முனைய மாட்டார்.
ஹெல்தியாக இருந்தால் "நீண்டநாட்களாக உயிர்வாழும் பாபா" வைப் பின்னர் சந்தித்துக் கொள்ளலாமே என்பதால்தான்.
Thursday, July 21, 2011
பத்மநாப சுவாமி கோயில் சொத்துகள் கொள்ளைச் சொத்துகளா?
சாதியை அரசாங்கம் அங்கிகரிப்பது பற்றி உங்கள் கருத்து? - மாதவன்
பொது அறிவு, கதைகள், வரலாறு, பொதுக்கணக்கு, கணினி இயல் எனப் பலவிதமாகச் சொல்லிக் கொடுத்துப் பொழுது கழிவதாக எங்கள் ஊர்த் தனியார்ப் பள்ளி மாணவன் மூலம் அறிந்தேன்.
Saturday, June 25, 2011
மத்திய அரசின் உயர் பதவிகளில் கேரளத்தவர்களே கோலோச்சுவதன் காரணம் என்ன?
சிவப்பு எம் ஜி ஆரையே தேவைக்கு மட்டும் புகழும் ஜெயலலிதாவின் முன் விஜயகாந்தைக் கருப்பு எம் ஜி ஆர் எனப் புகழ்ந்தால் ஜெயலலிதாவின் ரீ ஆக்ஷனுக்கு முன் ர ரக்களின் ரீ ஆக்ஷன் தொடங்கி விடும்.
1970 வரை டெல்லியில் தமிழர்களின் ஆதிக்கம்தான் இருந்தது. மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் செயலர் இணை துணை உதவிச் செயலர்கள் எனத் தமிழர் நிரம்பி வழிந்தனர். திராவிடக் கட்சிகளின் கையில் தமிழ்நாட்டு ஆட்சி விழுந்த பின் கல்வித்தரம் குறைந்து தமிழர்கள் பின் தங்க வேண்டிய சூழல் எழுந்தது. கேரளக்காரர்கள் படித்து உயர் நிலையில் வருகின்றனர். கேரளத்தின் எம் பிக்கள் கட்சி வேறுபாடு பாராது டெல்லியில் லாபி செய்து தம் மாநிலத்தவரையே அனைத்து உயர் இடங்களிலும் நிரப்புகின்றனர். இதனால்தான் நீங்கள் வினவியுள்ளது நிகழ்கிறது.
பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி வயிற்றில் அடித்துக் கொண்ட கதிதான் தமிழ்நாட்டுக் கதை.
இதை மாற்ற நம்மால் முடியும்.
வளரும் தமிழ் இளைஞர்களை நன்கு பயிற்றுவித்து ஆட்சிப் பணித்தேர்வுகளில் முதலிடம் பெறச்செய்வதோடு டெல்லியில் பிடியை இறுக்கினால் நம்மாலும் முடியும்.
Saturday, June 18, 2011
செக்ஸ் கல்விக்காகவே தனிக்கல்லூரி நிறுவினால் என்ன?
ராசா அரசியல் கைதி அல்லர். முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் இப்போது விசாரணைக் கைதி; குற்றம் நிரூபிக்கப்பட்ட தண்டனைக் கைதி அல்லர்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியில் முதல் வகுப்பில் அவர் இவ்வசதிகளைப் பெறுகிறார். முதல் வகுப்புத் தகுதி பெற்ற கைதிகளுக்கு இவ்வசதி சட்டப்படி கிடைக்கும். ஆனால் பீகார் போன்ற மாநிலங்களில் கொலைக் குற்றத்துக்குத் தண்டனை பெற்ற கைதிகளும் தாதாக்களும் ராசா பெறுவதை விட அதிக வசதிகளைப் பெறுகின்றனரே... இதற்கு என்ன சொல்ல?.
உங்கள் வினாவிலேயே "பாடத்தில் செக்ஸ் கல்வி" என்றுதான் வினவியுள்ளீர்கள். கலைக்கல்லூரியில் பட்டப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கும் பொருளியல், வணிகவியல், வேதியியல், இயற்பியல், கணிதவியல் போன்ற சிறப்புப் பாடத்துக்கே தனிக்கல்லூரி நிறுவுவதில்லை. மற்ற பாடங்களுடனே அதைக் கற்பிப்பர். அதுபோல்தான் செக்ஸ் கல்வியும். மருத்துவம், பொறியியல் போன்ற வருவாய் ஈட்டும் தொழிற்கல்விகளுக்கே தனிக்கல்லூரி..
செக்ஸ் என்ன வருவாய் ஈட்டும் தொழிலா?.
Tuesday, June 7, 2011
ராஜாத்தி காலில் விழுந்த ராசாவைப் பகுத்தறிவுக் கலைஞர் கண்டிக்காததன் மர்மம் என்ன?
வணங்காமுடியின் முப்பத்தேழாண்டு காலப் பொது வாழ்வில், சக தன்னார்வலர்களால் கைவிடப் பட்டுத் தன்னந்தனியாக நின்றதால் பல முறை அயர்ச்சி ஏற்பட்டதுண்டு; எனினும் அதைப் போக்க அடுத்த சேவையைப் புதியவர்களுடன் சேர்ந்து தொடங்கியதும் உண்டு.
நீங்களும் இதைப் பின்பற்றலாமே.
அமைச்சர்களான பின் ஆண்டுக்கொருமுறை மக்களுக்குத் தெரியும்படி தம் சொத்துக் கணக்கை வெளியிட முதல்வர் ஜெயலலிதா கட்டளையிட வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)

