பேச வேண்டியதை பேச வேண்டிய இடத்தில் அவசியம்
பேச வேண்டும் . பேசாமல் இருப்பதும் தவறு. கோபமடைந்து பேசுவதும்,
செயல்படுவதும் மற்றும் அமைதிக்கு பாதிப்பு வகையில் பேசுவதும் தவறு. ஒரு தவறு மற்றொரு தவறு செய்வதற்கு தூண்டுதலாக அமைந்து
விடக் கூடாது.
அமைதியாக இருப்பது என்பது ஒரு செயலிலும் ஈடுபடாமல் இருப்பதல்ல . செய்யக்
கூடாததை செய்யாமல் இருப்பதே அமைதியாகிவிடும். மௌல்விகள் பாதிரிகள் மற்றும் ஞானிகள் சில நேரங்களில் அமைதி காப்பதும், கோபமடைவதும் அனைவரையும் அழித்துவிடும்!
சிலர் கோபமடையலாம்
அல்லது வருத்தமடையலாம். நான் எழுதியதில் தவறு இருப்பின் சுட்டிக் காட்டுவதும்
அவர்களது கடமை . அதை விடுதது நாங்களே முற்றிலும் அறித்தவர்கள் என்பது
போன்ற முடிவுக்கு வருவதும்,
அமைதி காப்பதும் சிறப்பாகாது. படம் பண்ணி மற்றவர்களை அவமானப் படுத்தும்போதும்
கோபமடையாமல் முறையான பதில் கொடுக்கலாம். அமைதி காக்க அது பலவித கேடுகளையும்
கொண்டு வர வாய்பும் உண்டாகலாம்
