ஒளி கண்டேன் ஒலி கேட்டேன்
அலை கண்டேன் ஓசை கேட்டேன்
காதல் கொண்டேன் ஆசை கொண்டேன்
கனா கண்டேன் கண் விழித்தேன்
அங்கும் வெளிச்சம் இங்கும் வெளிச்சம்
கனா நின்று மறைந்தது நினைவு நிலையாய் நின்றது
கற்பனை ஊரும் களைந்து போகும்
கற்பனைக்கு நங்கூரம் இருப்பின் நிலைத்து நிற்கும்
மனோநிலை மாறி மாறி வரும் காலம் மாறுவதுபோல்
கனாவின் நிலையும் மாறி மாறி வரும் விழித்தால் களைந்து விடும்
கனா மகிழ்வையும் அச்சத்தையும் மாறி மாறி கொடுக்கும்
கனாவை நினைவாக்க முயல்வதற்கு முன் மறைந்து மறந்து போகும்.
மறந்துபோகும் கனவே மனிதனை பித்தம் பிடிக்காமல் பாதுகாக்கும்
நல்ல கனா ! கெட்ட கனா என உனக்குள் ஒரு பிரிவுண்டோ!
நடந்த நிகழ்வால் நீ கனாவாய் வந்தாயா!
நிகழப் போவதுற்கு முன் நினைவைத் தந்தாயோ !
ஆழ்மனதில் மனதில் அடங்கியிருந்து கனாவாய் காட்சி கொடுத்தாயோ!
நடக்கமுடியாததை கனாவாய் வந்து மகிழ வைத்தாயோ!
மறக்கும் கனாவாய் சில நிலைத்து நிற்கும் கனாவாய் சில வந்து விளையாடுவதேன்!
பயமுறுத்தும் கானவாகவும் மகிழ்விக்கும் கானவாகவும் வேடிக்கை காட்டும் விநோதத்தினை எங்கு கற்றாய்!
Tuesday, March 6, 2012
Monday, March 5, 2012
பாங்காக் – தமிழ் முஸ்லிம் அசோசியேசன்+ பாங்காக்கின் அனைத்து மசூதிகளின் விபரம்
பாங்காக் – தமிழ் முஸ்லிம் அசோசியேசன் மசூதி
BANGKOK MOSQUE – Tamil Muslim Association in Thailand
பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் சங்கம்
பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க வரலாற்றுச் சுருக்கம்:
ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாட்டைத் துறந்து, உழைத்துப் பொருளீட்டும் உயர்வான எண்ணத்தில் நூற்றுக்கும் சற்று குறைவான தமிழ் பேசும் முஸ்லிம் சகோதரர்கள் அமைதி தவழும் சியாம் என்றழைக்கப்படும் தாய்லாந்தின் தலைநகரமாம் பேங்காக்கில் தொழில் செய்து வந்தார்கள்.அதுசமயம், நமது இளைநர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ள, கருத்துபரிமாறிக் கொள்ள இனிய மாலைப்பொழுதுகளை இன்புற கழிக்க ஒரு பொது இடமின்றி தவித்தனர். பெரும்பாலான சமயங்களில் ஹோட்டல் லாபிகளில் அமர்ந்து நாட்டு நடப்புகள்,தொழில் விஷயங்களை பேசிக்கொள்வார்கள்.
நாட்டுக்கு நாடு உண்ணும் உணவில் மாற்றம் !
காலை உணவின் முக்கியத்துவம் அறியாமல் இருப்பது ஏன்?
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி ...
இறைவன் தந்த அந்த அருட்கொடையான உணவை நாம் அவசர கோலத்தில் சாப்பிடுகின்றோம் . பல இறக்குமதிகளில் 'பாஸ்ட் புட்' ஒன்றாக சேர்ந்துக் கொண்டது. நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழ்வார் என்பது ஆன்றோர் மொழி . மென்று தின்றால் தேவையான உமிழ்நீர் உண்டாகி நமது உணவை நன்கு செரிக்கச் செய்கின்றது. நாமும் உணவு சாப்பிடும் போது இது இறைவனால் கொடுக்கப்பட்டது என அவனுக்கு நன்றி செலுத்தி மெதுவாக ரசித்து உண்ணும்பொழுது உடல் ஆரோக்கியம் கிட்டும் . இயற்கையின் இனிமை கண்டு ரசிப்பதும் அதனை ஆராய்ச்சி செய்வதும் நம்மை இறைவனது ஆற்றல் அறிய வழி வகுக்கின்றது. நாம் உண்ணும் உணவினை அனுபவித்து ரசித்து உண்பதில் நமது உடலுக்கு ஆரோகியதினை தருவது மட்டுமில்லாமல் நிச்சயமாக இறைவனது 'அல்லாஹ்வின்' (சிலர் இயற்கை என்று சொல்வார்கள்) ஆற்றல் அதில் அடங்கி இருப்பதனை அறிய வருகின்றோம். உண்ணும் உணவு எங்கிருந்து வந்தது என்பதனை என்றாவது சிந்தனை செய்து பார்த்தீர்களா! சோறு அரிசியிலிருந்து வந்தது .அரிசி நெல்லிருந்து வந்தது ... தொடருங்கள் ..உங்கள் சிந்தனையை . இறுதியில் உங்கள் முடிவு இறைவனது மாட்சிமை உங்கள் மனதில் அறிய வரும்.
சராசரி உடல் ஆரோக்கியத்திற்கு மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு அவசியமாகின்றது அது தேவையான உணவு எடுத்துக்கொள்ளும்போதுதான் வயதும் வாழ்கையும் முறைப்படும் .சிலர் வாழ்வதற்காக உணவு சாப்பிடுவார் .சிலர் சாப்பிடுவதற்காகவே வாழ்வர் . நாம் நல்வாழ்வு பெற ஆரோக்கியமான முறையான உணவு சாப்பிடுவதனை முறைப் படுத்திக் கொள்வோம் .
பெரும்பாலானவர்களுக்கு அலுவலக வேலைகளால் வீடுகளில் அல்லது ஹோட்டல்களில் கூட காலை டிபன் சாப்பிடுவதற்கு நேரமே இருக்காது. காலையில் எழும்போதே டென்சன், குளித்து முடித்து அலுவலகம் கிளம்புகையில் என்கேயாவது ஒரு காப்பி அல்லது சேண்ட்விச் அல்லது பிஸ்கட்டுடன் காப்பி அருந்தி விட்டு ஓடும் நிலை .பலரிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களில் காலை உணவைத் தவிர்ப்பதும் ஒன்றாகும். இதனை வெளிநாட்டிலும் பார்க்கலாம் . விடுமுறை நாட்களில் மட்டும் விரும்பிய காலை டிபன் (உணவை ) சாப்பிட வாய்ப்பு கிடைக்கும் .
Tuesday, February 28, 2012
மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்பது ஏன்!
மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்பது ஏன்!
அரசியல் வாதிகளும் இனவெறி கொண்டவர்களும் நம்மை பிரிந்து இருக்க வைத்து தன்னுடைய ஆதாயத்தினை வளர்த்து வைக்க முயற்சிகின்றனர். இப்பொழுது இருக்கும் கல்வி முறையும் இதனைச் சார்ந்ததாக இருக்க முயற்சி எடுக்கப் படுகின்றது .
நான் இஸ்லாம் வழியை விரும்பியும் அறிந்தும் பின்பற்றுபவன் .நான் பிறந்தது இறைவன் அருளால் முஸ்லிமாக. ஆனால் நான் மற்ற மார்க்கத்தினை பின்பற்றுபவரை மதிக்கின்றேன் .எனக்கு குடும்ப அளவிலும் தனிப்பட்ட முறையிலும் கணக்கிலடங்காத நண்பர்கள் உண்டு .இதில் நாத்திக கொள்கை கொண்டவர்களும் அடக்கம் . நான் யார் மனதினையும் புண்படுத்தும்படி எழுதுவதில்லை . நான் உலகக் குடிமகனாக(Citizen Of The World உலகப் பிறஜையாக) இருக்க விரும்பினாலும் இந்திய பிரஜையாக இருப்பதிலும் தமிழனாக இருப்பதிலும் பெருமையடைகின்றேன்.இஸலாம் என் வழி தமிழ் என் மொழி . உங்கள் மார்க்கம் உங்களுக்கு உயர்வாக இருக்கலாம்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
-குரான் 109:6.
-குரான் 109:6.
நான் இஸ்லாம் வழியை விரும்பியும் அறிந்தும் பின்பற்றுபவன்
நான் பேஸ் புக்கில் நல்ல நண்பர்களைப் பெற்றுள்ளேன் ஆனால் அது அதிகமாக முஸ்லிம்களாக இருக்கின்றனர்.நான் அனைவரையும் நேசிக்க மற்றும் யார் விரும்பினாலும் தடையில்லாமல் நண்பர்களாக ஏற்றுக் கொள்ள விரும்பினாலும் ஏற்றுக் கொள்கின்றேன் அதில் அதிகமாக முஸ்லிம்களாக இருக்கின்றனர். ஆனால் ட்விட்டரில் அப்படி அல்ல. ட்விட்டரில் இஸ்லாமிய நண்பர்களை விட அதிகம் இது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. இந்தியாவில்தான் மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்கின்றனர் அதில் தமிழ் நாடும் விதிவிலக்கல்ல . இது மிகவும் வருந்த வேண்டிய செய்தி.எத்தனை மதங்கள் ஜாதிகள் அவர்களுக்குள் போராட் டங்கள்!
ஒரு நபித்தோழராகிய சஹாபி நாயகத் திருமேனியை நோக்கி, ‘நம் இனத்தின் மீது
பற்றுக் கொள்வது, அதிலும் தீவிரமான பற்றுக் கொள்வது தவறா?’ என வினாத்
தொடுத்தார். இவ்வினாவுக்கு விடை கூற வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்)
அவர்கள் ‘ஒருவர் தன் இனத்தின்மீது பற்றுக்கொள்வது இயற்கை. அது பற்றாக
மட்டுமே வளர்ந்து வளமடைய வேண்டுமேயல்லாது, வெறியாக மாறிவிடக் கூடாது’
என்றார்கள்.
உங்கள் மார்க்கம் உங்களுக்கு உயர்வாக இருக்கலாம்.என் மார்க்கம் எனக்கு உயர்ந்தது. இது நல்ல கொள்கையாக இருக்கலாம் என்பதே என் கருத்து. நேசிப்பதற்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் நட்பில் எந்த காலத்திலும் மோதல் வரக்கூடாது . நாம் பெரியார் ,அண்ணா ,கலைஞர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் பலர் கொண்டிருந்த கொள்கை நம்மிடமிருந்து மாறு பட்டிருந்தாலும் அவர்களது உயரிய எழுத்துக்களை கருத்துகளை விரும்பி படிக்கின்றோம்.அதில் நமக்கு கட்டாயம் உடன்பாடு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நாம் பல சரித்திரங்களை[ப் நம்முடன் வாழும் மக்களைப் பற்றி அறியாமல் இருக்கின்றோம் என்பதுதான் உண்மை . என்னுடன் படித்த கல்லூரி நண்பர் என்னிடம் கேட்டார் . முஸ்லிம்கள் வீட்டில் சைவ உணவு சாபிடுவார்களா மற்றும் உங்கள் வீட்டில் தமிழ் பேசுவார்களா என்று! நான் பிறப்பால் தமிழன் வீட்டில் தமிழ் தவிர வேறு மொழி பேசுவதுமில்லை மற்ற மொழியும் தெரியாது . உலகத்தில் அணைத்து நாட்டிலும் முஸ்லிம்கள் உள்ளனர் அந்தந்த நாட்டில் பிறந்தோர் அந்த மொழிதான் பேசுவர் .கேரளாவில் உள்ளவர் மலையாளத்திலும் ஆந்திராவிலுல்லோர் தெலுங்கிலும் மற்ற இடங்களில் உள்ளவர் அந்த மொழிதான் அவர்களுக்கு தாய் மொழியாக இருக்கும் என்று விளக்கமளித்தேன். அவர் இத்தனை ஆண்டுகள் தெரியாமல் இருந்தேனே என வருத்தப் பட்டதுடன் .நாம் படிக்கும் பாடத்தில் இவ்வகையான பாடங்களும் அவசியம் சேர்க்கப் படவேண்டும் என சொன்னார். காஸ்மீரில் அதிகமாக வசிக்கும் மக்கள் முஸ்லிம்கள் அவர்கள் உருது பேசுகின்றனர். நம் நேரு அவர்களும் காஸ்மீர் வழியில் வந்தவர்தான்.அங்கு நடக்கும் ஒரு தீவிரவாதியும் முஸ்லிம்தான் அதற்கு பலியாவதும் முஸ்லிம்தான். தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் எல்லா மதத்திலும் உள்ளனர் . ஆனால் சில தீவரவாதி நடத்தும் செயலை இஸ்லாமிய தீவிரவாதியால் நடத்தப்பட்டது என்று பெரிதுபடுத்தி எழுதியும் பேசியும் வருவோர்தான் உண்மையான தீவிரவாத்தினை தீண்டுவோராக உள்ளனர் . இஸ்லாம் தீவிரவாத்தினை ஆதரிக்கவில்லை . ஜிஹாத் என்பது மனதினை கட்டுப்படுத்துவதுதான். உலகில் சமாதானத்தையும் அமைதியையும் நீதியையும். நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே உண்மையான ஜிஹாத்
"முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய
வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக
இருக்கலாம்;
(அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்;
இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்,
இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்! ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்!
எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்."
(அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்;
இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்,
இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்! ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்!
எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்."
-திருக்குர்ஆன் 49:11
"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத
வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு
சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை -
அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
Friends are like flowers நண்பர்கள் - நட்பு
குறள்
788: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
788: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
Monday, February 27, 2012
ஆண்ட்ராய்டு மொபைலில் மக்கா, மதீனா நேரடி ஒளிப்பரப்பு
ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் 24 மணி நேரமும் மக்கா, மதீனாவை நேரடி
ஒளிப்பரப்பு செய்யும் அப்ளிகேஷன் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கில்
கிளிக் செய்யவும்.
Makka Live 24 Hours
Madinah Live 24 Hours
Source : http://vadakaraithariq.blogspot.in/











Makka Live 24 Hours
Madinah Live 24 Hours
Source : http://vadakaraithariq.blogspot.in/
Makkah latest pictures- SUBHAN ALLAH
பொதுசேவைக்கு பாராட்டு தெரிவித்து மு.க.ஸ்டாலினுக்கு ''கென்டக்கி கர்னல்'' விருது
சென்னை : திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் ‘‘கென்டக்கி கர்னல் விருது’’ வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைமை நிலையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: முன்னாள் துணை முதல்வரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய ‘‘கென்டக்கி கர்னல் விருது’’ வழங்கப்படுகிறது என்று அந்த மாகான ஆளுநர் ஸ்டீவன் எல். பெஷேர் அறிவித்துள்ளார்.
Sunday, February 26, 2012
ஒரு கழுதையின் கதை
பண்டைய சீன தேசத்தில் ஒரு கிராமத்தில் சக்கரவர்த்திக்குக் கோயில் எழுப்ப
தீர்மானிக்கப்பட்டது. அப்பகுதியின் கவர்னர் மிகக் குறுகிய காலத்தில்
கோயிலைக் கட்டி முடிக்க கிராமத்தினருக்குக் கட்டளை இட்டார்.
கோயில் கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் தடுப்புச் சுவர் இல்லாத
கிணறு ஒன்று இருந்தது. எனவே கட்டிடப் பணி துவங்கும் முன் அக்கிணறை மூட வேண்டி வந்தது.மண்ணைப் போட்டு மூட முடிவெடுத்த கிராம மக்கள், மண்ணைச் சுமக்க ஒரு கழுதையைப் பயன்படுத்தினர். சிறிது பணி புரிந்த பின் ஒரு முறை கழுதை கிணற்றின் விளிம்பு வரை சென்று சறுக்கி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.கிணற்றுக்குள் விழுந்த கழுதையை மீட்க சில முறை முயற்சித்த மக்கள் அது முடியாமல் போகவே அது உள்ளே இருக்கையிலேயே அந்தக் கிணற்றை மூட முடிவு செய்தனர். கழுதையைக் காப்பாற்ற நேரம் எடுத்துக் கொண்டால் கவர்னர் தந்த காலக் கெடுவுக்குள் கோயில் பணியை முடிக்க முடியாது என்று அவர்கள் எண்ணினர்.
Subscribe to:
Comments (Atom)









