Showing posts with label கானா. Show all posts
Showing posts with label கானா. Show all posts

Tuesday, March 6, 2012

கானாவை கண்டு பிடித்தவர் யார்!

ஒளி கண்டேன் ஒலி கேட்டேன்
அலை கண்டேன் ஓசை கேட்டேன்
காதல் கொண்டேன் ஆசை கொண்டேன்      
கனா கண்டேன்  கண் விழித்தேன்
அங்கும் வெளிச்சம் இங்கும் வெளிச்சம்
கனா நின்று மறைந்தது நினைவு நிலையாய்  நின்றது
கற்பனை ஊரும் களைந்து போகும்
கற்பனைக்கு நங்கூரம்  இருப்பின் நிலைத்து நிற்கும்
மனோநிலை மாறி மாறி வரும் காலம் மாறுவதுபோல்
கனாவின் நிலையும் மாறி மாறி வரும் விழித்தால் களைந்து விடும்
கனா மகிழ்வையும் அச்சத்தையும் மாறி மாறி கொடுக்கும்
கனாவை நினைவாக்க முயல்வதற்கு முன் மறைந்து மறந்து போகும்.
மறந்துபோகும் கனவே மனிதனை பித்தம் பிடிக்காமல் பாதுகாக்கும்
நல்ல கனா ! கெட்ட கனா என உனக்குள் ஒரு பிரிவுண்டோ!
நடந்த நிகழ்வால் நீ கனாவாய் வந்தாயா!
நிகழப் போவதுற்கு முன் நினைவைத் தந்தாயோ !
ஆழ்மனதில்  மனதில் அடங்கியிருந்து கனாவாய் காட்சி கொடுத்தாயோ!
நடக்கமுடியாததை  கனாவாய் வந்து மகிழ  வைத்தாயோ!
மறக்கும் கனாவாய்  சில நிலைத்து நிற்கும் கனாவாய் சில வந்து விளையாடுவதேன்!
பயமுறுத்தும் கானவாகவும்  மகிழ்விக்கும் கானவாகவும்  வேடிக்கை காட்டும் விநோதத்தினை எங்கு கற்றாய்!