நடந்தது உண்மை .
எனது ஆத்ம நண்பர் ஒருவர் உடல்நலம் குன்றி இருந்தார். அவரால் சரியாக உணவு
சாப்பிட முடியவில்ல . நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கு மிகவும் வேண்டிய
மிகவும் பிரபலமான Gastroenterologist
M.D.,. D.M.,வயிறு சம்பந்தமாக பார்க்கும் மருத்துவர் உள்ளார் அவரைப் பார்த்து
ஆலோசனைப் பெறலாம்' என்ற என் வேண்டுதலுக்கு உடன்பட்டார். நாங்கள் இருவரும்
அந்த மருத்துவரை சந்தித்தோம். நண்பர் தான் முதலில் காட்டிய மருத்துவரின்
ஆலோசனைக் குறிப்புகளும் மற்றும் அந்த வியாதிக்கு தேவையான மருத்துவ
டெஸ்டுகளும் மற்றும் எக்ஸ்ரே போன்றவைகளை எடுத்து வந்திருந்தார். ஆனால்
அவருக்கு என்ன வியாதி உள்ளது என்று அந்த மருத்துவர் நண்பரிடம் சொல்லாமல் மருந்துகள்
மட்டும் எழுதி கொடுத்திருந்தார். அவருக்கு வந்துள்ள வியாதியை
.உண்மையிலேயே அவரது குடும்பத்தார் எனது நண்பருக்கும் தெரியாமல்
வைத்துவிட்டனர்.நானும் அதனைப் பற்றி அறியாத நிலை.
மருத்துவரிடம் நாங்கள் ஆலோசனைக் கேட்க அதற்கு தேவையான மருத்துவ
விபரங்களைக் காட்டினோம். மருத்துவர் அனைத்தையும் பார்த்த பின்பு எனது
நண்பரை சில நேரங்கள் வெளியே இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் அதிர்ச்சியான செய்தியை டாக்டர் சொன்னார்.
'அவருக்கு வந்துள்ளது கேன்சர் மற்றும் மிகவும் முற்றி விட்டது இனி எந்த
வைத்தியமும் உதவாது. அதிகமாக அவர் இன்னும் மூன்று மாதங்கள் உயிருடன்
இருப்பதே அதிசியம் , அதனால் இந்த உண்மையை அவரிடம் சொல்லிவிட்டால் அவர்
செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து விடுவார் பிறகு இறை பக்தியில் அதிகம்
ஈடுபட்டு அமைதி காண்பார் . இதனை நீங்கள் சொல்கின்றீர்களா அல்லது நான்
சொல்லவா இல்லையென்றால் தேவை இல்லாமல் பல மருத்துவர்களை நாடுவார் என
வினவினார்!; வேண்டாம் டாக்டர் அவரிடம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக ஏதாவது
சொல்லி அனுப்புங்கள் என்றேன். மனமுடைந்தேன்,என்னை அறியாமல் என்னை நானே
கட்டுபடுத்த முடியாமல் போனதால் கண்களிலிருந்து நீர் கொட்டியது, மனதை
அடக்கிக் கொண்டு வெளியில் இருந்த நண்பரை மருத்துவரிடம் அழைத்து வந்தேன்.
நான் விரும்பியபடி ' நீங்கள் சாப்பிடும் மருந்தே உயர்வானது மற்ற
சிகிச்சிசைகளும் முறையாக உள்ளது .இதனையே தொடர்ந்து செயல்படுத்துங்கள்.தேவை
இல்லாமல் பல மருத்துவர்களை அணுக வேண்டாம் ' என்று டாக்டர் அறிவுரைக்
கூறினார். என் கண்கள் கலங்கி இருப்பனைக் கண்டு டாக்டர் சொன்னதில்
நம்பிக்கை வராமல் வீடு வரும் வரை ' டாக்டர் என்ன சொன்னார் சொல்லுகள் ' என்று
துருவித் துருவி கேட்கும்போது மனதை கல்லாக்கிக் கொண்டு மருத்துவர்
உங்களிடம் சொன்னதையே நானும் சொன்னேன். நல்ல காரியத்திற்க்காக பொய்
சொல்வது தவறில்லை என மனம் நினைத்தது .
Showing posts with label நண்பர். Show all posts
Showing posts with label நண்பர். Show all posts
Tuesday, May 8, 2012
Tuesday, February 28, 2012
மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்பது ஏன்!
மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்பது ஏன்!
அரசியல் வாதிகளும் இனவெறி கொண்டவர்களும் நம்மை பிரிந்து இருக்க வைத்து தன்னுடைய ஆதாயத்தினை வளர்த்து வைக்க முயற்சிகின்றனர். இப்பொழுது இருக்கும் கல்வி முறையும் இதனைச் சார்ந்ததாக இருக்க முயற்சி எடுக்கப் படுகின்றது .
நான் இஸ்லாம் வழியை விரும்பியும் அறிந்தும் பின்பற்றுபவன் .நான் பிறந்தது இறைவன் அருளால் முஸ்லிமாக. ஆனால் நான் மற்ற மார்க்கத்தினை பின்பற்றுபவரை மதிக்கின்றேன் .எனக்கு குடும்ப அளவிலும் தனிப்பட்ட முறையிலும் கணக்கிலடங்காத நண்பர்கள் உண்டு .இதில் நாத்திக கொள்கை கொண்டவர்களும் அடக்கம் . நான் யார் மனதினையும் புண்படுத்தும்படி எழுதுவதில்லை . நான் உலகக் குடிமகனாக(Citizen Of The World உலகப் பிறஜையாக) இருக்க விரும்பினாலும் இந்திய பிரஜையாக இருப்பதிலும் தமிழனாக இருப்பதிலும் பெருமையடைகின்றேன்.இஸலாம் என் வழி தமிழ் என் மொழி . உங்கள் மார்க்கம் உங்களுக்கு உயர்வாக இருக்கலாம்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
-குரான் 109:6.
-குரான் 109:6.
நான் இஸ்லாம் வழியை விரும்பியும் அறிந்தும் பின்பற்றுபவன்
நான் பேஸ் புக்கில் நல்ல நண்பர்களைப் பெற்றுள்ளேன் ஆனால் அது அதிகமாக முஸ்லிம்களாக இருக்கின்றனர்.நான் அனைவரையும் நேசிக்க மற்றும் யார் விரும்பினாலும் தடையில்லாமல் நண்பர்களாக ஏற்றுக் கொள்ள விரும்பினாலும் ஏற்றுக் கொள்கின்றேன் அதில் அதிகமாக முஸ்லிம்களாக இருக்கின்றனர். ஆனால் ட்விட்டரில் அப்படி அல்ல. ட்விட்டரில் இஸ்லாமிய நண்பர்களை விட அதிகம் இது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. இந்தியாவில்தான் மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்கின்றனர் அதில் தமிழ் நாடும் விதிவிலக்கல்ல . இது மிகவும் வருந்த வேண்டிய செய்தி.எத்தனை மதங்கள் ஜாதிகள் அவர்களுக்குள் போராட் டங்கள்!
ஒரு நபித்தோழராகிய சஹாபி நாயகத் திருமேனியை நோக்கி, ‘நம் இனத்தின் மீது
பற்றுக் கொள்வது, அதிலும் தீவிரமான பற்றுக் கொள்வது தவறா?’ என வினாத்
தொடுத்தார். இவ்வினாவுக்கு விடை கூற வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்)
அவர்கள் ‘ஒருவர் தன் இனத்தின்மீது பற்றுக்கொள்வது இயற்கை. அது பற்றாக
மட்டுமே வளர்ந்து வளமடைய வேண்டுமேயல்லாது, வெறியாக மாறிவிடக் கூடாது’
என்றார்கள்.
உங்கள் மார்க்கம் உங்களுக்கு உயர்வாக இருக்கலாம்.என் மார்க்கம் எனக்கு உயர்ந்தது. இது நல்ல கொள்கையாக இருக்கலாம் என்பதே என் கருத்து. நேசிப்பதற்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் நட்பில் எந்த காலத்திலும் மோதல் வரக்கூடாது . நாம் பெரியார் ,அண்ணா ,கலைஞர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் பலர் கொண்டிருந்த கொள்கை நம்மிடமிருந்து மாறு பட்டிருந்தாலும் அவர்களது உயரிய எழுத்துக்களை கருத்துகளை விரும்பி படிக்கின்றோம்.அதில் நமக்கு கட்டாயம் உடன்பாடு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நாம் பல சரித்திரங்களை[ப் நம்முடன் வாழும் மக்களைப் பற்றி அறியாமல் இருக்கின்றோம் என்பதுதான் உண்மை . என்னுடன் படித்த கல்லூரி நண்பர் என்னிடம் கேட்டார் . முஸ்லிம்கள் வீட்டில் சைவ உணவு சாபிடுவார்களா மற்றும் உங்கள் வீட்டில் தமிழ் பேசுவார்களா என்று! நான் பிறப்பால் தமிழன் வீட்டில் தமிழ் தவிர வேறு மொழி பேசுவதுமில்லை மற்ற மொழியும் தெரியாது . உலகத்தில் அணைத்து நாட்டிலும் முஸ்லிம்கள் உள்ளனர் அந்தந்த நாட்டில் பிறந்தோர் அந்த மொழிதான் பேசுவர் .கேரளாவில் உள்ளவர் மலையாளத்திலும் ஆந்திராவிலுல்லோர் தெலுங்கிலும் மற்ற இடங்களில் உள்ளவர் அந்த மொழிதான் அவர்களுக்கு தாய் மொழியாக இருக்கும் என்று விளக்கமளித்தேன். அவர் இத்தனை ஆண்டுகள் தெரியாமல் இருந்தேனே என வருத்தப் பட்டதுடன் .நாம் படிக்கும் பாடத்தில் இவ்வகையான பாடங்களும் அவசியம் சேர்க்கப் படவேண்டும் என சொன்னார். காஸ்மீரில் அதிகமாக வசிக்கும் மக்கள் முஸ்லிம்கள் அவர்கள் உருது பேசுகின்றனர். நம் நேரு அவர்களும் காஸ்மீர் வழியில் வந்தவர்தான்.அங்கு நடக்கும் ஒரு தீவிரவாதியும் முஸ்லிம்தான் அதற்கு பலியாவதும் முஸ்லிம்தான். தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் எல்லா மதத்திலும் உள்ளனர் . ஆனால் சில தீவரவாதி நடத்தும் செயலை இஸ்லாமிய தீவிரவாதியால் நடத்தப்பட்டது என்று பெரிதுபடுத்தி எழுதியும் பேசியும் வருவோர்தான் உண்மையான தீவிரவாத்தினை தீண்டுவோராக உள்ளனர் . இஸ்லாம் தீவிரவாத்தினை ஆதரிக்கவில்லை . ஜிஹாத் என்பது மனதினை கட்டுப்படுத்துவதுதான். உலகில் சமாதானத்தையும் அமைதியையும் நீதியையும். நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே உண்மையான ஜிஹாத்
"முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய
வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக
இருக்கலாம்;
(அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்;
இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்,
இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்! ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்!
எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்."
(அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்;
இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்,
இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்! ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்!
எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்."
-திருக்குர்ஆன் 49:11
"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத
வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு
சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை -
அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
Friends are like flowers நண்பர்கள் - நட்பு
குறள்
788: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
788: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
Subscribe to:
Posts (Atom)



