சும்மா சும்மா என்னைச்
சும்மா இரு என்கிறாய்
சும்மா சொல்கிறாயா இல்லை
நிசமாகத்தான் சொல்கிறாயா
சும்மா இருப்பதென்பது
சும்மா வருமா அம்மா?
ம்ம்...
கட்டிக்கொண்டாயிற்று
என் கைகளை
பொத்திக்கொண்டாயிற்று
என் வாயை
மூடிக்கொண்டாயிற்று
என் கண்களை
அடைத்துக்கொண்டாயிற்று
என காதுகளை
ஒதுங்கிக்கொண்டாயிற்று
என் தனிமையில்
Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts
Saturday, June 28, 2014
Friday, December 20, 2013
கடல் கண்டேன்
அலைபோல் ஆர்ப்பரிக்கும்
மனம் கொண்டேன்
கடல் கண்டேன்
கடல் ஆழம் போல்
சிந்தனை கொண்டேன்
கடல் கண்டேன்
வருவதை உள்வாங்கும்
திறன் கொண்டேன்
Tuesday, March 5, 2013
மனது பட்டை தீட்டப்பட உளியை நாடுகின்றேன்
மனது பட்டை தீட்டப்பட உளியை நாடுகின்றேன்
உளி நீயாக இருக்க தேய்க்குமிடமாக நான் இருப்பேன்
செதுக்கிய இடம் செழுமையடைத்து சிறப்படையும்
தீட்டப்பட மனது ஒளி விடுமென்ற நம்பிக்கையாக இருப்பேன்
தீட்டும் வேகத்தில் ஒளிச் சிதருவதுபோல் தவறுகள் தெறித்து சிதறட்டும்
ஒரு சில நாட்கள் இறைச் சிந்தனை இருந்து மறைவது
ஒரு சில நாட்கள் கெட்ட சிந்தனை பழக்கம் நிறுத்தி வைப்பதாகிவிடும்
தொடரும் இறை வணக்கம் தொடர வைக்கும் நற்பண்புகள்
தொடர்ந்த முயற்சி வாழ்வின் வெற்றியின் நடைபாதை
நெஞ்சில் உருவாகும் கருத்துகள் உயர்வாக இருக்கட்டும்
உருவாகும் கருத்துகள் உயர்வடைய வழி காணட்டும்
கருமேகம் கடலை நோக்கி ஓடி நீரைக் கொட்ட
கொட்டிய நீரும் கடல் நீரோடு கசந்து போகும்
கார் மேகம் காதல் கொண்டு ஒன்றோடு ஒன்று தொடர
காற்றின் குளிர் மேகத்தை சூழ அடைமழையாய் கொட்டும்
மழை கொட்டிய காய்ந்த இடம் குளிர்ச்சியடைய
காதலர்களுக்கு சூடேற்றம் கொண்டது செடிகள் வளர்ந்தன

Friday, January 11, 2013
உன்னையே நேசிக்கிறேன்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
112:1 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2 اللَّهُ الصَّمَدُ
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4 وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை - குர்ஆன்
=======================================================================
உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே .(உன்னிடமே) யாசிக்கிறேன்
உன்னையே நாடுகிறேன்
உன்னையே போற்றுகிறேன்
உன்னையல்லால் யார் உதவுவார்
உன்னையல்லால் யாரைக் கேட்போம்
உன்னை நாடியோர் கை விடப்படார்
உன்னை நோக்கி ஓர் அடி வைத்தால்
என்னை நோக்கி ஓடி வருவாய்
சிந்தனைகள் ,கருத்துகள் .தூண்டுதல்கள் அனைத்தும் இறைவனது அருட்கொடை அது உங்களின் ஒருவனாக நானும் இருப்பதின் வெளிப்பாடு . தனியே பிறப்பது இருவரின் கூட்டு முயற்சி. வந்தவுடன் அரவணைத்து வாழ்த்துவோர் அநேகம் . அவர்களின் நன்மையை நாடும் ஒருவனாக இருப்பதிலேயே என் உயர்வின் அடித்தளமாக அமையும் . தூற்றுவோர் இருக்க துவள வேண்டியதின் நிலைப்பாடு வேண்டாம் . தூக்கிச் செல்வோர் வசை பாடி இசை பாட இறைவனும் என்னை கனலில் விட்டு விடுவதை நான் அஞ்சுகிறேன். தென்றலாய், தேன் மதுரச் சுவையாய் இருக்கட்டும் உங்கள் வாய் மொழி.
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள் [குர்ஆன் 10:44]
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
குர்ஆன் 2:21
Habibi means 'My love' or 'My beloved'. .
Saturday, February 12, 2011
தண்ணீரில் இயங்கும் கார் இலங்கை வாலிபர் சாதனை !
பெட்ரோல் டீசல் விலைகளை வைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் அரசாங்கம் கைவைத்து பூச்சாண்டி காட்டும் நாடகத்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இலங்கை வாலிபரான 'துஷார ஹெதிரிசிங்க " சாதனை கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளார் .
ஆம் தண்ணீரில் இயங்க கூடிய காரை வடிவமைத்துள்ளார் இந்த இளைஞர் தமது சோதனை முயற்சியாக 3 லீடர் தண்ணீரை எரிபொருளாக பயன் படுத்தி 300 km பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.தண்ணீரில் இயங்க கூடிய இந்த காரின் மிக முக்கியமான அம்சமாக சுற்று சூழலிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் புகை இந்த காரில் இல்லை என்பதாகும் .
வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இவரது தொழிநுட்பத்தை வாங்குவதற்கு முற்சிகளை மேற்கொண்டும் இந்த தொழில்நுட்பத்தை தாய் நாட்டிற்காக சமர்பிக்கும் நோக்கோடு அவர்களின் கோரிக்கைகைளை நிராகரித்ததாக தெரிவிற்கும் துஷாரவிற்கு உள்நாட்டில் இவரை ஊக்குவிக்கவும் இந்த தொழிநுட்பத்தை மேம்படுத்தவும் யாரும் முன்வராதது வேதனையான உண்மையாகும் .
இவரது முயற்சி வெற்றி பெறவும் இந்த தொழிநுட்பம் மிக சீக்கிரமாக மக்கள் பாவனைக்கு கிடைத்திடவும் துஷாரவை வாழ்த்திடுவோம் .
இது தொடர்பான காணொலி கீழே
Source :http://qaruppan.blogspot.com/2011/02/blog-post_13.html
இது உங்கள் சிந்தனையில் நிச்சயம் ஒரு மாற்றத்தை கொண்டுவரும்.
நீங்கள் நினைத்தால் உங்களாலும் முடியும். முயற்சி செய்யுங்கள். முயற்சி உங்கள் பக்கம் முடிவு இறைவன் பக்கம்
Friday, January 14, 2011
மனம் மகிழுங்கள் - 31 : ஏட்டில் எழுதி வை
| 31 - ஏட்டில் எழுதி வை - நூருத்தீன் ப ட்டியல் அறியாதவர் யாரும் இருக்க முடியாது. மளிகைக் கடைப் பட்டியல், மருந்துப் பட்டியல், வாக்காளர் பட்டியல், மந்திரி சபைப் பட்டியல், என்று நாம் அனைவரும் எங்காவது ஏதாவது ஒருவிதத்தில் பட்டியல் தயாரிக்க, அல்லது அதில் இடம் பிடிக்க என்று முயல்வதால் அது நம் வாழ்க்கையோடு இணைந்த ஒன்று ஆகிவிட்டது. இந்தப் பட்டியலுக்கும் நாம் சென்ற இரு அத்தியாயங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோமே குறிக்கோள், அதற்கும் தொடர்பு உண்டு. அது என்னவென்று பார்க்குமுன் - நம் மனமானது எப்படி நாம் அதிகமதிகம் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயத்தை நோக்கியே "காந்தத்தைக் கண்ட இரும்பைப்போல்" நகர்கிறது என்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். அதன் அடிப்படையில் இங்கு நாம் அறிந்து கொள்ளவேண்டியது யாதெனில், நம் மனதில் தெளிவான நிச்சயமான குறிக்கோள் என ஒன்று இருந்தால், நம் மனமானது சதா நேரமும் அதையே நினைத்துக் கொண்டிருக்கும்; பிறகு அதை நோக்கி நகர்ந்து நாம் எளிதாய் நமது குறிக்கோளை எட்டிவிட உதவும். அதைப்போலவே குறிக்கோளென்று எதுவும் இல்லாவிட்டாலும் அப்பொழுதும் நமது சிந்தனையை ஆக்கிரமிக்கும் விஷயத்தை நோக்கியே நம் மனது நம்மை நகர்த்தும். ஏனெனில் நம் சிந்தையில் இருப்பது நல்லதொரு குறிக்கோளா அல்லது வெறும் அக்கப்போரா என்பதெல்லாம் நம் மனதிற்கு முக்கியமில்லை. ‘நீ நினைத்துக் கொண்டிருப்பது இதைத்தானே, வா போகலாம்’ என்று நம்மை இழுத்துச் சென்று விட்டுவிடும். எனவே வாழ்க்கையில் குறிக்கோள் நிர்ணயித்துக் கொள்வது மெத்த உத்தமம். இதை நினைவில் வைத்துக் கொள்வோம். சரி எங்கு ஆரம்பித்தோம்? ஹாங்... பட்டியல். அதைப் பார்ப்போம். |
மாதாந்திர மளிகை அல்லது ஊரிலிருந்து வந்திருக்கும் மனைவி வீட்டாருக்கு விருந்து சமைக்கக் காய்கறி என்று ஏதோ வாங்கக் கடைக்குக் கிளம்புகிறீர்கள். என்ன செய்வீர்கள்? நாலைந்து பொருள் என்றால் ஏதும் பெரும் பாதகமில்லை. மூன்று பொருளை வாங்கி முக்கியமான இரண்டை மறந்து வீட்டில் வந்து ‘வாங்கிக் கட்டிக்’ கொள்ளலாம். இது நிறைய ஐட்டம். எனவே உங்கள் மனைவி ஒரு லிஸ்ட் எழுதிக் கொடுத்திருப்பார். அவரவர் வசதிக்கு ஏற்ப அது சுண்டெலி வாலைப் போலவோ அல்லது ஆறு கெஜம் புடவை நீளத்திற்கோ இருக்கலாம்.
எதற்கு இந்த லிஸ்ட்?
‘கிளம்புகிற அவசரத்தில் சரியாய்க் கேட்டுக் கொள்ளவில்லையே! கத்திரிக்காய் கேட்டாளா? கேழ்வரகு மாவு கேட்டாளா?’ என்று தட்டுக்கெட்டுப் போய்ச் சொதப்பக் கூடாதில்லையா? இந்தச் சின்ன முன்னேற்பாடு நாம் கடைக்கு என்ன நோக்கத்தோடு செல்கிறோம்; என்ன வாங்கப் போகிறோம் என்று நம் குறிக்கோள் மாறாமல் செயல்பட உதவுகிறது. காரியம் சாதிக்க உதவுகிறது.
ஒரு நிறுவனம். அவர்களுக்குப் பற்பல திட்டங்கள், நோக்கங்கள். அதையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால் அதன் CEO அல்லது உயர் அதிகாரி குறைந்தபட்சம் என்ன செய்வார்?
அல்லது கல்யாணம், புதுமனை புகுவிழா என்று வீட்டில் ஏதோ ஒரு விசேஷம் என்று வையுங்கள். என்ன செய்வோம்?
பட்டியல்!
யார் யாரை அழைப்பது, என்னென்ன வாங்குவது, விருந்தில் என்னென்ன பரிமாறுவது என்று பட்டியல்!
அல்லது என்னென்ன செய்ய வேண்டும், யார் யார் என்னென்ன பங்கு வகிக்க வேண்டும் என்று அட்டவணை!
இப்படி நம்மையறியாமல் சில முக்கியச் செயல்களுக்கு நாம் பட்டியல் எழுதத்தான் செய்கிறோம். அதன் சௌகரியம் உணர்ந்திருக்கிறோம். ஆனால் அதை முக்கியமான ஒரு விஷயத்திற்கு நம்மில் பெரும்பாலானவர் சரிவரப் பிரயோகப்படுத்துவதில்லை.
என்ன அது?
வாழ்க்கை!
வாழ்க்கையில் முன்னேற வேண்டும், அதைச் செய்ய வேண்டும், இதைச் சாதிக்க வேண்டும் என்று குருட்டாம் போக்கில் பற்பல எண்ணங்களும் ஆசைகளும் இலட்சியங்களும் இருந்தாலும் அவையெல்லாம் ஏன் அனைவருக்கும் கைகூடுவதில்லை? அடிப்படைக் காரணம் வாழ்வின் குறிக்கோள்களை ஒழுங்குபடுத்திப் பட்டியலிட மறப்பதுதான்!
எனவே நோட்புக், டைரி, காலண்டர், பாத்ரூம் சுவர் என்று எங்காவது நம் குறிக்கோள்களைப் பட்டியலிட்டுக் கொள்வது பல் துலக்குவதற்கு அடுத்த நல்ல பழக்கம். அதைப்போல் அடுத்தகட்டமாய் அவற்றை அடைவதற்கான செயல்பாடுகள், முயற்சிகள், பணிகள் ஆகியனவற்றின் பட்டியல்.
இதன் பலனாய் நமது செயல்கள் சரியான முறையில் ஓர் ஒழுங்குடன் அமையும்; நாம் நினைத்ததைச் செய்து முடிக்க உதவும்.
கடைக்கும் விருந்துக்கும் விசேஷத்திற்கும் பட்டியல் உதவுவதைப் போலவே வாழ்க்கைக்கும் பட்டியல் அவசியம்.
குறிக்கோளை ஒரு வாகனம் போலவும் நினைத்துக் கொள்ளலாம். அது நாம் செல்ல வேண்டிய ஊருக்கு இட்டுச் செல்கிறது. செல்லும் பாதையெல்லாம் பாடம் கற்றுத் தருகிறது.
அம்பானியாக வேண்டும் என்றால்தான் குறிக்கோள் முக்கியம் என நினைக்கக் கூடாது. குறிக்கோளுடனான ஒரு வாழ்க்கை அமைந்தால்தான் அது நமக்கு அனுபவத்தையும் பக்குவத்தையும் கற்றுத் தருகிறது என்பதற்காகவாவது குறிக்கோள் வேண்டும்.
எனக்குத் தெரிந்த தம்பதியர். மனைவியுடன் ஷாப்பிங் செல்வதாக இருந்தால் கணவர் வெகு முனைப்புடன் ஒரு சின்னப் பட்டியல் தயார் செய்து விடுவார். மனைவியிடம், “இதோ ஷாப்பிங் லிஸ்ட். தேவையானதை வாங்கிக் கொண்டு நாம் டைம் வேஸ்ட் செய்யாமல் வந்துவிட வேண்டும்.”
மனைவியும் சமர்த்தாய்த் தலையாட்ட, கடைக்குச் செல்வார்கள். இறுதியில் வீட்டிற்குச் சுமந்து வரும் பைகளுக்கும் அநதப் பட்டியலுக்கும் சம்பந்தமே இருக்காது! திட்டமிட்டதைவிட நேரம், பணம் எல்லாம் அதிகம் செலவாகியிருக்கும்.
“என்னங்க இது? அப்ப எதற்கு ஒவ்வொரு முறையும் லிஸ்ட்?” என்றால் அவர் சிரித்துக் கொண்டே சொல்வார், “என் குறிக்கோள் என் இல்லாளை மனம் மகிழ வைப்பது. அது நடந்துவிட்டது.”

Subscribe to:
Posts (Atom)