Showing posts with label உணர்வு. Show all posts
Showing posts with label உணர்வு. Show all posts

Monday, November 18, 2013

கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-1]

ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்று அந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்

சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி

Sunday, July 1, 2012

கோபம் கொன்றுவிடும் !

 உயிரினம் அனைத்துக்குமே கோபம் வருவது இயல்பு. சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனுக்கும் கோபம்  வரும். மனிதனைத் தவிர மற்ற இனங்களுக்கு வரும் கோபம் தற்காலிகமானது ஆனால் மனிதனுக்கு வரும் கோபம் பல்வகையானது.அது வந்து மறையும் சமயத்தில் மனதில் நிலைத்து நிற்கும். மின்னல் வேகத்தில் வந்து அதே வேகத்திலும் மறையும், கோபம் வருவது இயல்பு. அது மனித உணர்வுக்கு உள்ளடக்கம். கோபம் வர ஒரு காரணமும் இருக்கலாம். கோபப்படுவதற்கு கோபப்பட்டுத்தானே ஆக வேண்டும். கோபத்தின் அளவுகோல் அதிகமாக அதனால் விளையும் பாதிப்பும் அதிகமாகின்றது. கோபம் அதிகமாக வருவது அதிக இரத்த அழுத்தம் உள்ளவருக்கும்,தாழ்வு மனப்பான்மை உடையவருக்கும்.அதிக கவலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தூக்கம் குறைவாக உள்ளவர்களுக்கும், பிரச்சினையை தீர்க்க வழி தெரியாமல் திண்டாடுபவர்களுக்கும்  இது அதிகம் வர வாய்ப்புள்ளது. கடுமையான கோபம் மனதை பாதிப்பதோடு உயிரையே போக்கி விடும் ஆற்றலுள்ளது,  இது குறிப்பாக அதிக இரத்த அழுத்தம் உள்ளவரின் உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும்.  கோபம் கொள்வதால் .ஆரோக்கியத்தையும் அழித்துவிடும். கோபத்தில் எடுக்கக் கூடிய சில முடிவுகள் வாழ்வையே தலை கீழகாக  புரட்டி எடுத்து விடும் அல்லது வாழ்ந்த சுவடுத் தெரியாமல் அழித்து விடும். 
ஒருவருக்கு கோபம் வந்து அதனால் மற்றவரை பழி வாங்கும் திறனிருந்து ஆனால் கோபத்தை தணித்துக்கொண்டு கோபம் உண்டாகியவரை மன்னித்தாரோ அவர்தான் உயர்ந்தவர். கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்.

Tuesday, April 10, 2012

உணர்வும் அதன் உண்மையும் !

காண்பதும், படிப்பதும், எழுதுவதும் உணர்வைத் தூண்டக்  கூடியதாக அமைவதனைக் காண முடிகின்றது. உணர்வு இல்லாமல் மனிதன் இருக்க முடியாது. அந்த உணர்வுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு வேறுபடுகின்றது. பாதகமான,தவறான உணர்வுகளை   தூண்டக்  கூடிய காட்சிகளும் எழுத்துகளும் தடுக்கப்பட வேண்டும்.அது மக்களுக்கு பல் வகையில் கேடுகளை தந்து பாதகமான் விளைவுகளை உண்டாக்கி விடுகின்றது.  மித மிஞ்சிய உணர்ச்சியும் , உணர்வும் உடல் நலத்தினையும் பாதிக்கும். உணர்வை முறையான வகையில் வெளிப்படுத்த வேண்டும். அது கேலிக்கு இடம் தந்ததாக அமைந்து விடக் கூடாது . மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல்,புரிந்துக்கொள்ளாமல் செயல்படுவது எத்தனை மடத்தனம். இறந்தவர் வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லாமல் மற்றவர்களுடன் சிரித்துப்  பேசி உணர்ச்சி சிதறிப் போகும் நிலையை உருவாக்கி இருக்கும் இடத்திற்கு தகுந்ததுபோல் நடந்துக் கொள்ளாமல் தங்களது உணர்வு சிதறிப் போக முனைபவர்களைப் பார்க்க முடியும். சூழ்நிலைகளுக்கு   பொருத்தமற்ற விதத்தில் நடந்துக் கொள்வது உணர்வுபூர்வமாக படிப்பறிவில்லாத அறிவில்லாதவராக அவர் மற்றவருக்கு காட்சி தந்து அவரை மற்றவர்கள் கேவலமாக மதிக்கின்றனர்

Friday, April 29, 2011

மனம் மகிழுங்கள் - 46 : அறியாத மனசு - மகிழ்வே பரிசு!

மனம் மகிழுங்கள்!
46 - அறியாத மனசு - மகிழ்வே பரிசு!

- நூருத்தீன்
'மனம் மகிழ வேண்டும் என்று கடந்த நாற்பத்து சொச்சம் வாரங்களாய் என்னென்னவோ படித்து விட்டோம்; உரையாடிக் கொண்டோம். இறுதியில் மனம் என்றால் என்ன; எப்படியிருக்கும் என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. அதற்கு ரத்தம், சதை, தோல் உண்டா; அதன் உணர்வுகளுக்கு நிறம் உண்டா என்றெல்லாம் யோசித்தால், இல்லை என்று சொல்வதா; தெரியாது என்பதா?


·         நாம் மனதால் நினைப்பதை எப்படிக் கவர்ந்து இழுக்கிறோம்?

·         நாம் பயப்படுவது எப்படி நம்மை வந்தடைகிறது?

·         மனம், ஆழ்மனம் என்பதையெல்லாம் எங்கு காண்பது?

·         என் மனம் உற்சாகமாயிருக்கிறது; எனது உடல் ஆரோக்கியமாய் இருக்கிறது என்று நம்பும்போது நம்மிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன? அதனுடைய பலனை எப்படி விவரிப்பது?

·         நம்முடைய சிந்தனைகள் எப்படி நம்முடைய வாழக்கையை அமைக்க உதவுகின்றன; அல்லது மாற்றி அமைக்கின்றன?

·         CTScan-ஆல் செய்ய இல்லாவிட்டால் போகட்டும். நமது சிந்தனைகளை ஐஃபோனாவது படம்பிடித்துக் காண்பிக்குமா?

இப்படி விடாமல் சுற்றிவளைத்து எப்படிக் கேள்வி கேட்டாலும் தர்க்க ரீதியாய்ப் பார்க்கப் போனால் அதற்கு விளக்கங்கள் குறைவு; அல்லது இல்லை.

ஒரு விஷயத்தை உணர்வதும் அது எப்படிச் செயல்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வதும் இரு வேறு விஷயங்கள். மனமும் அதன் உணர்வுகளும் எப்படிச் செயல்படுகின்றன என்பது நமக்குத் தெரியாது! அறிவியல் அதைத் தெளிவுபடுத்தவில்லை. சொல்லப்போனால் அறிவியல் எதையுமே தெளிவுபடுத்தாது. அதன் வேலையெல்லாம் ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்துச் சொல்லவேண்டும்; அவ்வளவுதான்!

உள்ளுணர்வு என்கிறார்கள்; மனதிற்குக் காந்தசக்தி உண்டு, ஈர்ப்பு விசை இருக்கிறது என்கிறார்கள்.. இதையெல்லாம் ஏதோ ஒருவிதமாய்ப் பொத்தாம் பொதுவாய் உணர்ந்து கொள்கிறோம்; மண்டையையும் ஆட்டிக் கொள்கிறோமே தவிர அவற்றையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது?

Friday, December 3, 2010

உணர்வுகளில் வகையிரண்டு

 

உணர்வுகளில் வகையிரண்டு உணர்ந்தேன் நான்
உள்மனதின் மென்மைதனில் தெளிந்தேன் நான்

கள்ளமில்லா வாழ்வெண்ணி தேடித்தேடி
நிற்கையிலே
...வந்தமர்ந்தாய் நீயும் எந்தன்
உள்ளமெனும் மாளிகையில்
உயிர் கொடுத்தான் இறைவன் அன்று ..
உணர வைத்தாய் என் வாழ்வை நீ இன்று.

Sithi Samira Begam

 

Saturday, November 6, 2010

மனம் மகிழுங்கள்! 21 - ஆழ்மன சக்தி

மனம் மகிழுங்கள்!
21 - ஆழ்மன சக்தி

பனிப்பாறை (iceberg) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டைட்டானிக் எனும் பெரியதொரு கப்பல் அதில் இடித்துக் கவிழ்ந்து போனதே? துருவ மண்டலங்களுக்கு நெருக்கமாயுள்ள கடல்களில் மிதக்கும். ராட்சத மலை போன்ற இவை கடல் நீர் மட்டத்துக்கு மேல் சிறு பாறைபோல் மட்டுமே தென்படும். அப்படித் தென்படுவது ஒன்பதில் ஒரு பங்கு. மீதமுள்ள எட்டுப் பங்கு? அது நீருக்குக் கீழே சமர்த்துப் பிள்ளையாய் மிதந்து கொண்டிருக்கும்.

சரி, அதற்கு என்ன இப்போ?

உணர்வு உள்ள நம் அனைவருக்கும் உள்ளுணர்வு என்று ஒன்று உண்டு. கண்ணால் யாரும் பார்த்ததில்லை எனினும் "ஆமாம், இருக்கிறது!" என்று பொத்தாம் பொதுவாய் ஒப்புக்கொள்ளும் அளவிற்கு எல்லோருக்கும் ஓர் அபிப்ராயம் உண்டு. மறுப்பாளர்கள் பண்டிகை நாளன்று தொலைக்காட்சியில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு "உள்ளுணர்வு உண்மையா பொய்யா?" என்பதைத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த உள்ளுணர்வு என்பது என்ன, அது எப்படி இயங்குகிறது, என்பதை விவரிக்கச் சொன்னால்... அது சிரமம். அதற்காகச் சாமான்யர்கள் நாம் வருத்தப்பட ஏதுமில்லை. உள்ளுணர்வு பற்றியும் அது நம்மை இயக்குவது பற்றியும் மனோவியலாளர்கள் மூளையைச் சொறிந்துக் கொண்டு நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து சுருக்கமாய்க் காப்பி அடித்துக் கொண்டால் நமக்குப் போதும்.

"மனதின் ஆழ்மனம் சக்தி  வாய்ந்தது. நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை அடைய வழிவகை செய்து விடுகிறது. அந்த ஆழ்மனதின் ஆதிக்கமும் பயனும் நம்மை முழுவதும் ஆலிங்கனம் செய்யக் கூடியது." இதுதான் சாராம்சம்!
உள்ளுணர்வெனும் அந்த ஆழ்மனச் சக்தியைத்தான் மேலே சொன்ன பனிப்பாறையை  உவமையாகக் கூறி விவரிக்கிறார்கள். நாம் உணர்ந்த, அறிந்த நம் வெளியுணர்வு வெளியே தெரியும் பனிப்பாறை அளவே (tip of the iceberg). வலிமையான மீதம் நம்முள்ளே புதைந்திருக்கும் நம் உள்ளுணர்வு! பிரமிப்பாயில்லை?

வங்காள விரிகுடாவிலும் அரபிக் கடலிலும் பனிப்பாறைக்கு எங்கு செல்வது; எப்படிப் புரிந்து கொள்வது? எனவே நாம் வேறு சில உதாரணங்களை ஊருக்குள் தேடுவோம்.
சைக்கிள் ஓட்டப் பழகுவதற்குப் பெரும் பிரயத்தனம் தேவைப்படும்; கவனித்திருப்பீர்கள். சைக்கிளின் கைப்பிடியை ஆட்டாமல் பிடிக்க வேண்டும் என்பார்கள்; முதுகைச் சாய்க்கக் கூடாது என்பார்கள்; பேலன்ஸ் தவறாமல் பெடலை மிதிக்க வேண்டும் என்பார்கள்... விழுந்து சில்லறை எண்ணாமல் சைக்கிள் ஓட்டக் கற்றவர்கள் மிகவும் குறைவாகவே இருக்க வேண்டும். அப்படிப் பலவற்றையும் மனமானது உள்வாங்கி, உடலானது செயல்படுத்தி, சைக்கிளானது நம்மைச் சுமந்து கொண்டு ஓடத் துவங்கியபின், கற்பதற்குச் செலுத்திய அத்தனையும் பொருட்டின்றி மறைந்துபோய், சைக்கிள் ஓட்டனுமா நீங்கள் ஏறி உட்கார்ந்தால் போதும்; செயல்படுத்துவது உங்கள் உள்மனமே. உங்கள் வெளியுணர்வு பழகி உணர்ந்த அனைத்தும் உள்மனதில் ஆழப்பதிந்து, நீங்கள் சைக்கிளில் எவ்விதச் சிரமமுன்றிச் சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரையும் அதைத் தின்று கொண்டிருக்கும் மாட்டையும் பார்த்துக்கொண்டே செல்ல வேண்டியதுதான்.