மறக்கவில்லை அதனால் நினைக்கவில்லை .
நெஞ்சில் நிறைவாக உள்ளதால் பகிர மனம் நாடுகிறது .
எங்கு சென்றாலும் இதயம் இவ்விடத்தை காணத் துடிக்கின்றது
அன்பால் கட்டிப்போட்டவர்
கருத்தால் கவரப் பட்டவர்
குருதி தொடர்பு மிக்கவர்
கொள்கை பிடிப்பு உள்ளவர்
தொடர்பை நாடி நிற்பவர்
தொலை தூரத்தில் இருந்து காட்சி தருபவர்
இன்னும் இன்னும் ...எத்தனையோ இங்கிருந்து
காந்தம் போல் இழுக்கிறது
/
Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts
Monday, January 6, 2014
Saturday, January 4, 2014
அன்பே நீயென் உடன் வருவாயா
விரல்கள் விரித்து
விரல்கள் கோத்து
விலகா உறவாய்
அன்பே நீயென் உடன் வருவாயா
என் கையளவே நிறைந்த
உன் சந்தோசங்களையும்
உன் கையளவே நிறைந்த
என் சந்தோசங்களையும்
இணைத்த சந்தோசத்தில்
முளைத்த சந்தோசங்கள்
வான்நிறைத்துப் பூப்பதை
வாய்பிளந்து ரசிக்க
Thursday, December 26, 2013
மூன்று பேரும் கோரசாக ஒரே வாய்சில் பதில் அளித்தனர்..!
ஒருநாள், ஓர் அரபி பெண்மணி தன் வீட்டுக்கு வெளியே பார்த்த போது, நீண்ட நரைத்த தாடி வைத்த வயதான மூன்று கிழவர்கள் தம் வீட்டு வாசற்படியில் ரொம்ப நேரமாக அமர்ந்திருக்க கண்டார்.
வாயிற்கதவை திறந்து,
'ஐயா பெரியவர்களே..., தாங்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், பசியோடு இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். வீட்டின் உள்ளே வாருங்கள், ஏதாவது உணவு உண்ணுங்கள்'
மூவரில் ஒரு கிழவர் பதிலளித்தார்.
'குடும்பத்தலைவன் வீட்டினுள்ளே இருக்கிறாரா?'
'இல்லை, ஐயா... வெளியே சென்றிருக்கிறார்'
Wednesday, November 20, 2013
விலகாமல் விலகி...!
மனதினாழ விடத்துச்சென்று
அன்பு சொரிகின்றாய்,
என்நாசித்துளை வழியே
யுன்வாசம் பொழிகிறாய்,
கண்ணுறங்கு வேளையிலுமென்
இதல்களில் புன்னகைத்தெளிக்கிறாய்,
Sunday, September 15, 2013
சந்தேகம் ஒரு பக்கம் வீசும் காற்றா!
அன்பே! என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்
ஒன்றுமில்லை ஆறுயிரே !
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் எனைவிடுத்து நான் வரும்போதெல்லாம் லாப்டாப்பில்தானே உலா வருகிறாய்
'ஓ' நீங்கள் வேறு ஏதோ மனதில் கொண்டு பேசுவதென்ன!
நான் என்ன அவ்வளவு அறியாதவனா ! உன்னை பல நாட்களாக பார்க்கிறேன் . உன் செயல்பாடை, உன்னை சிறு வயதிலிருந்து நான் அறிவேன் . நீ லாப்டாப்பில்தானே எந்த நேரமும் மூழ்கிக் கிடக்கிறாய்!
நான் பார்க்கும் தொழில் சம்பந்தமாக சிலவற்றை தேடியே இந்த வேலையில் ஈடுபட்டுள்ளேன் என்று நான் உங்களிடம் பல முறை சொல்லியுள்ளேன்
இல்லை! நான் நீ செய்வதை பார்க்க வேண்டும்.
நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? இத்தனை காலங்கள் நீங்கள் காட்டிய காதலும் ,பாசமும் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் எவ்வாறு மறைந்து போனது
அன்பே!எனது பிரியமானவளே! உன் மீது நான் கொண்ட காதலும் ,பாசமும் உயர்வானது . வருத்தம் கொள்ளாதே. நான் வரும்போது உன் நினைவோடிருக்க நீ மற்றொன்றில் கவனம் செலுத்துவது என் மனம் தாங்கிக் கொள்ள முடியாமல் துடிக்கிறது

Saturday, April 13, 2013
ஏங்கி நின்றான் ! ஏக்கம் தொடர்கிறது…
பள்ளிப்பருவத்து முன்பருவத்தில்
பகல் உணவில் கூட பால் தந்த
அந்த அன்னையின் பாசம்
இன்று தூரமாகி போனதை எண்ணி
ஏங்கி நின்றான் !
பள்ளிப்பருவம் எட்டியதும்
பார்ப்போர் வியக்க பணிவிடை செய்து
பாடசாலை அனுப்பி வைத்த காட்சி நினைத்து
ஏங்கி நின்றான் !
படித்தது போதும் என்று
பாதிலேயே கல்வி விட்டு
பன்னாட்டு விமான நிலையம் கண்டு
புலம்பெயரும் கனவு சுமந்து
பாசத்தை தூரமாக்கி
ஏங்கி நின்றான் !
வாப்பா பார்த்து, உம்மா பார்த்து
வரதட்சணை கண் மறைத்து
வாயாடிப்பெண்ணை மணந்து
அன்புக்காக
ஏங்கி நின்றான் !
வாப்பாவை பார்க்காமலே
வாப்பாவின் பாசம் அறியாமலே
மூன்றுவயதை தொடும்போது
தாயகம் போய்
தான் ஈன்ற தங்கப்பிள்ளை
தன்னிடம் வருமா என்று
ஏங்கி நின்றான் !
சுற்றித்திரிந்த காலங்களில்
சுதந்திரம் கற்றுத்தந்து
பட்ட கஸ்டங்களில்
பாதி பங்கெடுத்த
அன்பு நண்பர்களை பிரிந்து
ஏங்கி நின்றான் !
.
அயல்நாட்டு நிரந்தர வாழ்க்கை
நிரந்தரமாக அந்நியமாகி
அனாதை போல் வாழ்ந்து விட்டு
முதுமை அடைந்தும் அறியாமல்
முடியாமல் ஊர் திரும்பும் காலம் வந்து
உறவுக்காகவும்
உண்மையான அன்புக்காகவும்
ஏங்கி நின்றான் !
-அதிரை மெய்சா
பகல் உணவில் கூட பால் தந்த
அந்த அன்னையின் பாசம்
இன்று தூரமாகி போனதை எண்ணி
ஏங்கி நின்றான் !
பள்ளிப்பருவம் எட்டியதும்
பார்ப்போர் வியக்க பணிவிடை செய்து
பாடசாலை அனுப்பி வைத்த காட்சி நினைத்து
ஏங்கி நின்றான் !
படித்தது போதும் என்று
பாதிலேயே கல்வி விட்டு
பன்னாட்டு விமான நிலையம் கண்டு
புலம்பெயரும் கனவு சுமந்து
பாசத்தை தூரமாக்கி
ஏங்கி நின்றான் !
வாப்பா பார்த்து, உம்மா பார்த்து
வரதட்சணை கண் மறைத்து
வாயாடிப்பெண்ணை மணந்து
அன்புக்காக
ஏங்கி நின்றான் !
வாப்பாவை பார்க்காமலே
வாப்பாவின் பாசம் அறியாமலே
மூன்றுவயதை தொடும்போது
தாயகம் போய்
தான் ஈன்ற தங்கப்பிள்ளை
தன்னிடம் வருமா என்று
ஏங்கி நின்றான் !
சுற்றித்திரிந்த காலங்களில்
சுதந்திரம் கற்றுத்தந்து
பட்ட கஸ்டங்களில்
பாதி பங்கெடுத்த
அன்பு நண்பர்களை பிரிந்து
ஏங்கி நின்றான் !
.
அயல்நாட்டு நிரந்தர வாழ்க்கை
நிரந்தரமாக அந்நியமாகி
அனாதை போல் வாழ்ந்து விட்டு
முதுமை அடைந்தும் அறியாமல்
முடியாமல் ஊர் திரும்பும் காலம் வந்து
உறவுக்காகவும்
உண்மையான அன்புக்காகவும்
ஏங்கி நின்றான் !
-அதிரை மெய்சா
Monday, December 12, 2011
அன்பு இன்பம் தரும்!
கமலாவும் ஃபாத்திமாவும் நல்ல நண்பிகள். ஒரே வகுப்பில் படிக்கும் அவர்கள் இருவரும் ஒருபோதும் சண்டை பிடித்துக்கொள்வது இல்லை. ஒற்றுமையாக விளையாடுவார்கள்; ஒருவருக்கு ஒருவர் உதவிகளும் செய்துகொள்வார்கள். கமலா ஃபாத்திமாவுக்குக் கணக்குப் பாடத்தில் கஷ்டமான கணக்குகளைச் சொல்லிக் கொடுப்பாள். அவ்வாறே, ஆங்கிலப் பாடத்தில் கமலாவுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஃபாத்திமா விளங்கப்படுத்துவாள்.
இப்படி இவர்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருப்பது விமலாவுக்குப் பிடிக்கவில்லை. அவள் அவர்களைப் பார்த்துப் பார்த்துப் பொறாமைப் பட்டாள். எப்படியாவது சண்டை மூட்டிவிட்டுக் கமலாவையும் ஃபாத்திமாவையும் பிரிக்க வேண்டும் என்று நினைத்தாள். எனவே, அதற்காக எப்போதும் பொய் பேசிக்கொண்டும் புறம் கூறிக்கொண்டும் திரிந்தாள். ஆனாலும் அவளுடைய திட்டம் பலிக்கவில்லை. கெட்ட பிள்ளைகளை எல்லோரும் வெறுப்பார்கள் அல்லவா? விமலாவுக்கும் அதுதான் நடந்தது. ஆம்! அவளின் கெட்ட பழக்க வழக்கங்களால் மாணவிகள் எல்லோரும் விமலாவை வெறுத்து ஒதுக்கினார்கள். எத்தனையோ புத்திமதிகள் கூறியும் தன்னைத் திருத்திக் கொள்ளாத விமலாவை ஆசிரியர்களும் விரும்பவில்லை.
"தன் வினை தன்னைச் சுடும்" என்பது பழமொழி. அதுபோல, மற்றவர்களுக்குத் தீங்கு செய்யப் போய் அவளே கடைசியில் துன்பத்தில் மாட்டிக் கொண்டாள். யாருமே அவளுடன் பேசவில்லை, அவளை விளையாடச் சேர்க்கவும் இல்லை. வகுப்பறையில் தனித்து ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்த விமலாவுக்கு அழுகை அழுகையாய் வந்தது. மேசையில் முகம் புதைத்து அவள் விம்மி விம்மி அழுதாள்.
அப்போது... ஏதோ தேவைக்காக கமலாவும் ஃபாத்திமாவும் வகுப்பறைக்குள் நுழைந்தார்கள். அழுது கொண்டிருந்த விமலாவைப் பார்க்க அவர்களுக்குப் பாவமாய் இருந்தது. இருவரும் விமலாவின் அருகில் சென்றார்கள். ஃபாத்திமா விமலாவின் தலையை அன்போடு தடவி விட்டாள். அழுதபடி நிமிர்ந்து பார்த்த விமலாவின் கண்களில் வழிந்த கண்ணீரைக் கமலா இரக்கத்துடன் துடைத்து விட்டாள்.
விமலா தன் பிழையை உணர்ந்து வெட்கப்பட்டாள். அவர்கள் இருவருக்கும் தான் செய்த தீமையை மன்னித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டாள். கமலாவும் ஃபாத்திமாவும் விமலா திருந்திவிட்டதை உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

Sunday, November 20, 2011
அன்னையிடம் அன்பு காட்டு - Love Your Mother
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்றும் (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
Qur'an 17:23.
. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”
Qur'an31:14
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் தொழுகையை நீட்டும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்கிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்டவுடன் அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதற்காக என் தொழுகையைச் சுருக்கிக் கொள்கிறேன்."
என அபூ கதாதா அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி ஹதீஸ் 868.
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”Qur'an2:215
The teachings of the Holy Qur'an for the Child to follow during his life is: "Your Lord (Allah) has ordained that you should worship none except Him and show kindness to parents. If one of them or both of them attain to old age with you, say not 'Fie' unto them nor reproach them but speak to them a gracious word. And lower unto them the wing of submission through mercy (defer humbly to them out of tenderness) and pray: My Lord, have mercy on them both as they nurtured me when I was little." (Qur'an 17:23-24)
"And we (Allah) have enjoined upon man (to be good) to his parents: His mother bears him in weakness upon weakness.." Qur'an 31:14)
"We have enjoined on man kindness to his parents: In pain did his mother bear him, and in pain did she give him birth.." (Qur'an 46:59)
Tuesday, November 2, 2010
மனத்தினை நேசியுங்கள்
நேசியுங்கள் வார்த்தைகளால் அல்ல உள்ளதால் .அகத்தின் அழகு முகத்தில். .உள்ளத்தில் இருந்து நேசம் வெளிப்பட்டால் அதனை கொடுப்பவருக்கும் பெருபவருக்கும் மகிழ்வு மலரும். மகிழ்ச்சி என்பது ஒரு செயல் அல்ல! செயலின் விளைவுதான். தோல்வி வெற்றிக்கு வழி காட்டி. நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில், செயல்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது. .உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உறுதியான ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட முடியும் . வாழ்வு ஒரு முறைதான் அதனை சோகமாக்கிக் கொள்ளாதீர்கள். மகிழ்வு விலை கொடுத்து வாங்குவதல்ல. அது மனதினைச் சார்ந்தது . பணம் பெற்றவர்கள் எல்லாம் மகிழ்வில் மூழ்கி உள்ளார்கள் என்பது தவறான கற்பனை . பணம் வாழ்வின் வசதிகளை ஏற்படுத்தி தரலாம் அதனால் மகிழ்வினை தந்துவிட முடியாது .
நேசம் ,அன்பு ,பாசம் அறியாதவற்கு குடும்பம் ஒரு பாரமாகும். உதட்டின் விளிம்பில் ஒரு புன்னகை இருந்து கொண்டு இருக்கும்பொழுது உங்கள் உள்ளத்தில் உற்சாகம் பிறந்து வாழ்வில் மகிழ்வு தானே வரும் .
நோய்பட்ட ஒருவருக்கு மருத்துவர் வாழ்வின் காலக்கெடு கொடுக்க வீடு திரும்புகின்றார் . அங்கே வீட்டில் தொலைகாட்சியல் சார்லி சாப்ளின் சிரிப்பு படம் பார்த்துகொண்டு வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்க இவருக்கு கோபம் வந்தாலும் தன்னை அறியாமல் தானும் அப்படத்தினை பார்க்கின்றார் . மருத்துவர் சொன்னதனை மறந்து படத்துடன் ஒன்றி வாய் விட்டு சிரித்து மகிழ்கின்றார் . ("வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.") இதனை தினமும் தொடர்ந்து பார்த்து மகிழ்ந்து சில நாட்கள் கழித்து மருத்துவரை பார்க்க செல்கின்றார் . அந்த மருத்துவருக்கே ஒன்றும் புரியாமல் அதிசயப்பட்டு என்ன மருந்து சாபிட்டாய்! உடலில் நல்ல மாற்றம் தெரிகின்றதே! என்று வினவ .
இவர் "நீங்க கொடுத்த மருந்து தான் சாபிடுகின்றேன்."
" சரி ,சரி இப்ப உன் உடம்பு நன்றாக இருக்கு கவலைப்படாதே" டாக்டர்
"நான் இப்ப கவலைப் படாமல் இருக்கத்தான் என்னுடன் சார்லி சாப்ளின் இருக்காங்களே"
அப்பொழுதுதான் தான் மருத்துவருக்கே புலப்படுகின்றது இவரின் உடலின் நல்ல மாற்றத்திற்கு காரணம் இவரின் மன மகிழ்வுதான் என.
எது வந்தாலும் சிரித்து மகிழு.வளமான வாழ்வுக்கு மனம்தான் முக்கியம் .

Subscribe to:
Posts (Atom)