ஹிஜாப்
ஹிஜாப்
பாதுகாப்பு கவசம்
அல்ல. அது பெண்களை ஒரு
போகப் பொருளாக அல்லது
காட்சிப்
பொருளாக பிறர் முன்
காட்டிக்
கொள்வதை தடுக்க
உதவும்
ஒரு அங்கீகாரம். அது
ஹிஜாப்
அணிய விரும்பும்
பெண்களின்
தனி உரிமை.
இது இப்போது ஓவர்கோட்
மாடலில்
நேர்த்தியான வடி
வமைப்பில் கிடைக்கிறது.
கொரோனா
ஸ்டைல் முகக்
கவசம் கூட, இப்போது
ஹிஜாப்
டிரஸ்ஸின் ஓரு
அங்கம்
தான்.ஸ்கூல் டிரஸ்
கோடில்
வடவமைப்பது எளிது.
அமெரிக்க
ஐரோப்பிய
நாடுகளில்
முஸ்லிம்
பெண்கள்
விரும்பி
அணியும்
உடையாகவே
ஹிஜாப்
டிரஸ் திகழ்கிறது.
இந்திரா
காந்தி முதல்
உயர் குல வடநாட்டுப்
பெண்மணிகள்
அனைவருமே
தலையில்
முஸ்லிம் பெண்கள்
போன்று
முக்காடு இட்டுக்
கொள்வது
என்பது இன்றும்
சிறந்த
இந்தியக் கலாச்சார
பண்பாடாகவே
போற்றப்
படுகிறது.
யூத கிருத்துவ
ஹிந்து
ஜைன சீக்கிய மதம்
சார்ந்த
பெண்கள் ஸ்கார்ஃப்
அணிந்து
தலையை மறைத்துக்
கொள்வதை
பெருமையாகவே
இன்றும்
கருதுகின்றனர்.
எ மாடஸ்ட் டிரஸ் கோட்
இது.
வரம்பு
மீறாத, பெண்கள்
எழில் உடை இது. மனித
நாகரீகம்
தோன்றிய காலம்
தொட்டே,
வீட்டில் பெண்கள்
அணியும்
ஆடை, வீட்டு
பண்பாட்டை
உணர்த்து
வதாகக்
கருதப்பட்டது.
மெசபடோமியா
கிரேக்க
ரோமாபுரி
பாரசீகம்
பைஜாந்திய
நாகரீக
உச்சத்திலும்
பெண்கள்
மேலாடைகள்
முக்கியத்
துவம் பெற்று விளங்கின.
முஸ்லிம்
பெண்கள்
விசயத்தில்
திருக்குரான்
இதை வலியுறுத்துகிறது.
பெண்கள்
அணியும் உடை
எவ்வாறு
இருக்க வேண்டும்
என்று தெளிவாக சொல்கிறது.
இஸ்லாம்
அறிமுகமான போது
இஸ்லாத்தில்
தன்னை இணைத்து
கொண்ட
முதல் பெண்மணி
கதீஜா பிராட்டியார் ஆவார்.
குர்ஆன்
முதல் பிரதியை
பாதுகாப்பாக
வைத்திருந்து
அதை உலகறிய செய்தவர்
ஹப்சா ஆவார். நபிகளாரின்
போதனைகளை
வழிமுறைகளை
உலக மக்களுக்கு அறிமுகம்
செய்தவர்
ஆயிசா அம்மையார்
ஆவார்.
அல்குர்ஆன்
மோசஸ் தீர்க்கதரிசியின்
வளர்ப்பு
தாயார் ஆசியா
அம்மையாரையும்
இயேசுவின்
தாயார்
மரியத்தையும் போற்றி
புகழ்கிறது.
இஸ்லாமிய
சட்டங்களை
தத்துவங்களை
வழிமுறைகளை
நபியின்
வாழ்க்கை
வரலாறுகளை
உலகின்
பார்வைக்கு எடுத்து
வைத்த ஆயிசா நாயகியார்
இஸ்லாத்தின்
முதல் சரித்திர
பேராசிரியர்
ஆவார். அவர்
வாழ்ந்த
மதீனா அன்று ஒரு
இஸ்லாமிய
அறிவாலயமாக
திகழ்ந்தது.
இஸ்லாமிய
பெண்கள்
உடை விசயமாக
இவர் அளித்த விளக்கங்கள்
வரலாற்று சிறப்பு மிக்கவை.
No comments:
Post a Comment