பொறையார்
பள்ளியில் படிக்கும் போது, இஸ்லாமிய மாணவர்கள்
கைலி அணிந்து பள்ளிக்கு வருவதுண்டு.
காரணம் ஒரு வயதிற்கு மேல்
ஆண்கள் தம் தொடை தெரிய
உடையணியக் கூடாது என்ற இஸ்லாமிய
கோட்பாடு.
தினசரி
பேன்ட் அணிந்து வர, அப்போது
எல்லோரிடமும் நிறைய பேன்ட் கள்
இருந்ததில்லை. ஏதோ ஒன்றிரண்டு தான்
இருக்கும். எனவே கைலி அணிந்தே பள்ளிக்கு
வந்தார்கள்.
அதை பள்ளி நிர்வாகமோ, ஆசிரியர்கள்,
மாணவர்களோ கேள்வியாக்கியதில்லை. காலப் போக்கில் எல்லோரும்
தினமும் பேன்ட் அணியக் கூடிய
சூழல் வந்ததும், கைலி அணிந்து பள்ளிக்கு
வருவதை நிறுத்தினார்கள்.
போலவே ஒரு வயதிற்கு பின் இஸ்லாமிய பெண் குழந்தைகள் தலையில் துணி இல்லாமல் வெளியில் வந்ததில்லை. அதனால் பெண் குழந்தைகள் பள்ளிக்கு தலையில் துணி முக்காடு அணிந்தே வந்தனர். அதற்கும் யாரும் எந்த எதிர்ப்போ, கேள்வியோ கேட்டதில்லை. காரணம் அது அவர்களின் உடை கலாச்சாரம். அந்த வழக்கம் இன்று வரை தொடர்கிறது!
இப்போது
ஹிஜாப்/முக்காடு பள்ளி, கல்வி நிலையங்களில்
அணியக் கூடாது என்று சொல்வது, அவர்களது மத, உடை விஷயங்களில்
தலையிடுவது தான். அதன் மூலம்
மத கலவரத்தை உருவாக்க நினைக்கிறார்கள்.
என் தட்டில் என்ன இருக்க
வேண்டும் என்பது என்ன உரிமையோ,
அதே போல ஹிஜாப் அணிவது
அவர்களது உரிமை.
No comments:
Post a Comment