Tuesday, February 22, 2022

எப்படி இத்தனை நாட்களாக இதனை மிஸ் செய்தோம்

 Aashiq Ahamed



எப்படி இத்தனை நாட்களாக இதனை மிஸ் செய்தோம் என சமீபத்தில் யோசிக்க வைத்த தொலைக்காட்சி தொடர் என்றால் அது  "உமர் இப்ன் கத்தாப்" தான். Middle East Corporation ஊடகமும், கத்தார் டிவி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள மிகத் தரமான, பிரமாண்டமான படைப்பு இது. 

நடித்துள்ளார்கள் என்று கூறுவதை விட, வாழ்ந்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். உமர் (ரலி) பாத்திரத்தில் நடித்துள்ள சமீர் இஸ்மாயில் மற்றும் அபுபக்கர் (ரலி) கதாபாத்திரத்தில் நடித்துள்ள கஸூன் மசூத் (ஸ்காட் ரிட்லியின் Kingdom of Heaven திரைப்படத்தில் சுல்தான் சலாவுதீனாக நடித்தவர்) ஆகியோரின் நடிப்பு அபாரம். 

ஆரம்ப சில எபிசோட்களில், கதாப்பாத்திரங்களுடன் ஒன்றுவதற்கு நேரம் எடுத்தாலும், Once எல்லாம் செட் ஆகிய பிறகு படு சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்கின்றன காட்சிகள். நபிகள் நாயகம் (ஸல்) இறந்த பிறகு, அது தொடர்பில் வரும் உமர் (ரலி) மற்றும் அபூபக்கர் (ரலி) தொடர்பான காட்சிகள் அப்படியே மெய்மறந்து அழ வைக்கின்றன. 

நபிமொழிகளை வரிசையாக அடுக்கி காட்சிகளாக விரித்தால் அது தான் இந்த தொடர். இஸ்லாமிய வளர்ச்சியில் சஹாபிய பெண்களின் தியாகங்கள், பங்களிப்புகள் அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு நகரங்களின் கோட்டைகள், போர்க்கள காட்சிகள், அதிலும் குறிப்பாக யானைகள் பங்கு பெறும்  போர்க்காட்சிகள் பிரமாண்டத்தை தொட்டு நிற்கின்றன. 

நிச்சயம் பார்க்க வேண்டிய தொடர்களின் வரிசையில் இதற்கு இடமுண்டு. மொத்தம் 30 எபிசோட்கள், ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்கள் ஒடும் இத்தொடர், youtube-பில் ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்கவில்லை. அதே நேரம், Islamicity இணையத்தளத்தில் முழுமையாக கிடைக்கிறது. Username, Password க்ரியேட் செய்துக்கொண்டு பார்க்கலாம். இங்கே: https://www.islamicity.org/9106

Aashiq Ahamed

No comments: