Monday, February 28, 2022

‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி - ராகுல் காந்தி பேச்சு

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு முழு வீடியோ

 

உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா | Rahul Gandhi | NewsSense

 

முதலமைச்சரின் சாதனையை ஒரு நாள்.. மறு நாள்... என்று சொல்லி அதிரவைத்த கவிஞ...

"ஸ்டாலின் வயதை கூகுளில் தேடிய சோனியா"..

 

"கலைஞர் போல எனக்கு பேச தெரியாது".. Flashback-ஐ உடைத்த ஸ்டாலின்..! Emotional Video

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா தொடக்கம்!

 

முதலமைச்சரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி - ராகுல் காந்தி பேச்சு

 

எனக்கும் புரியுது இந்தப் பிரிவு எவ்வளவு துயரமானதுனு.-தோழர் நல்லகண்ணு

 



தோழர் நல்லகண்ணு அவரது மனைவியை பற்றி கூறியது...

என் மனைவிக்கு உடல்

சொகமில்லாம போச்சு.

ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம்

பாத்தோம். ஆனாலும் காப்பாத்த

முடியல. மாசங்கள்

உருண்டோடுனாலும் அவளோட

இழப்பை என்னால ஜீரணிக்க முடியல.

போராட்டம், பொதுக்கூட்டம்னு என்

உடல் எங்கெங்கயோ அலஞ்சுட்டு

இருந்தாலும், மனசு அவளை

நினைச்சுட்டேதான் இருக்கு. அந்த

வேதனையைச் சுமந்துட்டேதான்

திரியுறேன்.

Sunday, February 27, 2022

Rahema BegumIslamic Songs

 #Rahema



ரூமி என்கிற பிரபஞ்சப் பொதுச்சொத்து..!! - நிஷா மன்சூர்

 ரூமி என்கிற பிரபஞ்சப் பொதுச்சொத்து..!!

நிஷா மன்சூர்

http://www.siyanenews





 

"நான் பார்ப்பதில்லை என்பதை விட்டுவிட்டு

நான் பார்க்கிறேன் என்பதாக மாறிவிடு.

நான் அறியமாட்டேன் என்பதை விட்டுவிட்டு

நான் அறிவேன் என்பதாக மாறிவிடு"

-மஸ்னவி ஷெரீஃப் 6ம் பாகம் ( 143-23325)

 

சென்னை ஃபஹீமிய்யா டிரஸ்ட் மூலமாக சமீபத்தில் மெளலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்களது

மஸ்னவி ஷெரீஃபின் ஆறாம் பாக வெளியீட்டு விழா நிகழ்வு நேர்த்தியாக, மிகச்சிறப்பாக நடைபெற்றது.

 

ஆறு பாகங்களையும் ஒரு தேர்ந்த தவம்போல மொழிபெயர்ப்பு செய்த நரியம்பட்டு சலாம் அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட எவ்வித மரியாதையையும் பாராட்டுகளையும் தலையில் தாங்கிக் கொள்ளாமல் ஏன், ஏற்புரையோ அனுபவ உரையையோகூட நிகழ்த்தாமல் ஒரு துறவியைப்போல மேடையின் மூலையில் அமர்ந்திருந்தார்.

 

"வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?"

 Ajmal Khan


மகிழ்ச்சி:

உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்...

அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர்  பேட்டி எடுத்தார்...

 "உங்களை

வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு ..

ஃபெமி கூறினார்:

"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்."

Thursday, February 24, 2022

Views On Ukraine & Russia

உக்ரைன் வரலாறு ....

 


Abdul Gafoor is in Kampala, Uganda.

உக்ரைன் வரலாறு  ....

நெருக்கமாகவும் சுருக்கமாகவும் தருகிறேன்

கொஞ்சம் உள்ளே நுழையுங்கள்  ....

ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகிற பணக்கார நாடுகளுக்கு மத்தியில் மிகவும் ஏழ்மையான தேசம் உக்ரைன்  ....

பனியும் குளிரும் கைகள் குலுக்குகிற

இந்த தேசத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே

ஏராளம் மக்கள் வசிக்கின்றனர்  ....

ஐரோப்பா கண்டத்தில் அதிகமான விவசாய நிலங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் தேசமும் இதுவே என்பதும் நமக்கு ஆச்சரியமளிக்கிறது ....

முன்னாள் சோவியத் யூனியனான

ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடு உக்ரைன் ....

பயணங்கள்

 பயணங்கள்

அன்னையின் மடியில் ஆரம்பப் பயணம்

தந்தையின் கரம்பிடித்து தளிர்நடைப் பயணம்

மூன்று வயதில் துவங்கும் கல்விப்  பயணம் .

ஆசிரியர் துணையுடன் அறிவுப் பயணம் .

 

பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிப் பயணம்

எதிர்காலத்தை அதுவே  நிர்ணயிக்கும் பயணம்

அடுத்து துவங்கிடும் அலுவல் பயணம் .

பணம் சம்பாதிக்கும் சாகசப்  பயணம் .

 

WEDDING CEREMONY AZMAN & AMIRA MEHENDI DAY 24 FEB 2022

அன்பானவர்களுக்கு அன்பான வணக்கங்கள்.

என் மகன் முகம்மது அஸ்மானுக்கு மலேசியாவில் திருமணம் செய்வதாய் நிச்சயிக்கப்பட்ட வகையில்.

இன்று மாலை (வியாழக்கிழமை 24-02 2022) மாலை 7 மணியளவில் மருதாணியிடும் நிகழ்வும்.

 நாளை வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணியளவில் திருமண நிகழ்வும்.

வரும் சனிக்கிமை மாலை 7 மணியளவில் வரவேற்ப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. இவை அனைத்தும் yuotube channelல் நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் உள்ளது. (அதன் லிங்க இதன் கீழே பதிவுசெய்திருக்கிறேன்)

இத்திருமண நிகழ்வு மலேசியாவில் நிகழ்வதால் மலேசியா தவித்த மற்ற நாடுகளில் உள்ள நண்பர்களை அழைக்க முடியாமல் போனதற்க்கு என் வருத்தங்களை வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.

இந்நிகழ்வுகள் அனைத்தும் மலேசிய நேரப்படி நடைபெற உள்ளதால் வாய்ப்புள்ளவர்கள் மேற்படி திருமண நிகழ்வுகளை you tube channelல் நேரடியாக கண்டுகளித்து. மணமக்களை வாழ்த்தியருளும்படி அன்புடன் அழைக்கிறேன்.

என்றும் அன்புடன் உங்கள்.




Jaffarullah jafar.

Tuesday, February 22, 2022

Caliph Omar Grand entry to Jerusalem (637 AD)

Omar Ibn Khattab Series- English Subtitles......

 

எப்படி இத்தனை நாட்களாக இதனை மிஸ் செய்தோம்

 Aashiq Ahamed



எப்படி இத்தனை நாட்களாக இதனை மிஸ் செய்தோம் என சமீபத்தில் யோசிக்க வைத்த தொலைக்காட்சி தொடர் என்றால் அது  "உமர் இப்ன் கத்தாப்" தான். Middle East Corporation ஊடகமும், கத்தார் டிவி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள மிகத் தரமான, பிரமாண்டமான படைப்பு இது. 

நடித்துள்ளார்கள் என்று கூறுவதை விட, வாழ்ந்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். உமர் (ரலி) பாத்திரத்தில் நடித்துள்ள சமீர் இஸ்மாயில் மற்றும் அபுபக்கர் (ரலி) கதாபாத்திரத்தில் நடித்துள்ள கஸூன் மசூத் (ஸ்காட் ரிட்லியின் Kingdom of Heaven திரைப்படத்தில் சுல்தான் சலாவுதீனாக நடித்தவர்) ஆகியோரின் நடிப்பு அபாரம். 

ஆரம்ப சில எபிசோட்களில், கதாப்பாத்திரங்களுடன் ஒன்றுவதற்கு நேரம் எடுத்தாலும், Once எல்லாம் செட் ஆகிய பிறகு படு சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்கின்றன காட்சிகள். நபிகள் நாயகம் (ஸல்) இறந்த பிறகு, அது தொடர்பில் வரும் உமர் (ரலி) மற்றும் அபூபக்கர் (ரலி) தொடர்பான காட்சிகள் அப்படியே மெய்மறந்து அழ வைக்கின்றன. 

Dhikr from Istanbul - Hasbee Rabbee Jallallah - 1 Hour - (Ля илаха илляЛ...

Quran The Family Of Imran 3:159நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
குர்ஆன் 3:159. 
And it was by God's grace that thou [O Prophet] didst deal gently with thy followers:  for if thou hadst been harsh and hard of heart, they would indeed have broken away from thee. Pardon them, then, and pray that they be forgiven. And take counsel with them in all matters of public concern; then, when thou hast decided upon a course of action, place thy trust in God: for, verily, God loves those who place their trust in Him.
Quran 3:159. 

அன்புடன் வாழ்த்துக்கள் Rahim Gazzali (ரஹீம் கஸ்ஸாலி) அவர்களுக்கு

அன்புடன் வாழ்த்துக்கள் Jabbar Arasarkulam ஜப்பார் அரசர்குளம் அவர்களுக்கு

Sunday, February 20, 2022

உகாசேவா மருத்துவமனை


·





உகாசேவா மருத்துவமனை

சுருக்கமான கண்ணோட்டம்  ....

அன்பிற்குரிய நட்புகளே

ஐந்தாறு நிமிடங்கள்

உங்களோடு அமர்ந்திட

அனுமதி கோருகிறேன்  ....

கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட்டின் அன்றைய நிர்வாகம் மக்களின் நலத்தை கருத்தில் கொண்டு 2008 ஆண்டு இறுதியில் எமக்கு அளித்த நிலத்தை சீர்படுத்தி நேர்படுத்தி பணிகளை துவங்கினோம்  ....

SanFrancisco City tour, USA - சான்பிரான்சிஸ்கோ | ROUNDSTUBE

Friday, February 18, 2022

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை

 

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை

முகமும் பாதமும் கணுக்கை தவிர்த்து

முழுமையாக மூடப்பட்டிருந்தும்

வெயிலிலும் பனிமழையிலும்

அவளது  நடையில் தொய்வில்லை

அவளைப்  பார்த்து  ஒடுக்கப்பட்டவள்  என்று சொல்வார்கள்

அவளது  உடையணிந்த விதத்தைப் பார்த்து

மற்றவரது மட்டமான  கருத்துகளால்

அவள் கவலைப்படவில்லை

அவள் தன் இறைவனால்  ஆசீர்வதிக்கப்பட்டவள்

Wednesday, February 16, 2022

ஹிஜாபின் மாண்பு...

 


ஹிஜாபின் மாண்பு...

தஸ்னி பாத்திமாவின் குரலில்

இனிய பாடல்...!

ஹிஜாப் ..அணிவோம்...என்றும் எங்கும்...

இறைதந்த .. வழி அல்லவா...

ஹிஜாப்..அணிவோம்...என்றும்..எங்கும்...

இறைதந்த ...வழி...அல்லவா..

பெண்மையின் கண்ணியம் குறையாமல்..

பார்ப்போர் நெஞ்சம் தவறாமல்...

நம்மைக் காக்கும் உடையல்லவா..

Sunday, February 13, 2022

Saturday, February 12, 2022

اقرأ مع إيمان | أندلسيات

அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன்

 





Allahu Akbar, Allahu Akbar,

(God is the greatest, God is the greatest)

Allahu Akbar, Allahu Akbar

(God is the greatest, God is the greatest)

ஓசை ஒலிக்கிறது அது பாங்காய் காதில் கேட்கிறது.

===================

”அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் இறைவன் மிகப் பெரியவன்

Muskan name meanings is Smile, Happy.

புன்னகை, மகிழ்ச்சி.



கர்நாடக மாணவி முஸ்கான்

---------------------

என் தன்மானம் எனக்கு மிகவும் அவசியமாகப்பட்டது.

 Jazeela Banu

நான் துபாய்க்கு வந்த புதிதில், அதாவது 1997ல் ஒரு நேர்முகத்திற்குச் சென்றிருந்தபோது ஹிஜாப் (தலை முக்காடு) அணிந்து சென்றேன். 

நேர்முகம் எடுத்தவர் வேலைக்கான எல்லா உறுதியும் செய்துவிட்டு எங்கள் அலுவலகக் கொள்கையின் படி 'ஹிஜாப்' வேண்டாம் என்றார். 

அது மிகச் சிறிய மூன்று பேர் வேலைப் பார்க்கும் அலுவலகம். அந்த அலுவலகத்திற்குக் கொள்கையாம். சொன்னவரும் இஸ்லாமியர், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர் என்ற நினைவு. 

எனக்கு அந்த வேலை மிகவும் தேவையாக இருந்தது. அவரிடம் நான், "நீங்கள் இஸ்லாமியர்தானே? ஏன் ஹிஜாப் வேண்டாம் என்கிறீர்கள்" என்று கேட்டேன். அலுவலகத்திற்கு நிறையப் பேர் வருவார்கள் போவார்கள் 'மார்டன்' பெண் தான் வேண்டும் - நீ அணிந்திருப்பது 'டிரடிஷனல் வேர்' என்றார். 

29 SURAH AL ANKABUT (THE SPIDER)-Complete Tamil Translation HD Tamil Qur...

Thursday, February 10, 2022

Allah O Akbar என்று கோஷம் எழுப்பியது ஏன்? - Karnataka Hijab girl interview

முதுமை

 


முதுமை

""""""""""""""""""""

முதுமை சாபமல்ல

அது வரம்

முதுமை முடிவு அல்ல

அது முதிர்ச்சி

முதுமை தளர்வு அல்ல

அது ஓய்வு

முதுமை மெளனம் அல்ல

Wednesday, February 9, 2022

அல்லாஹூ அக்பர் ' இன்று ஒரு அரசியல் சொல்லாக மாறிவிட்டது

'அல்லாஹு அக்பர்'

நேற்று இரவு வரை

இறைவனே பெரியவன் எனும் பொருளுடைய

ஒரு வழிபாட்டுச் சொல்லாக அது இருந்தது

இன்றைக்கு அதன் பொருள்

அது மட்டுமல்ல

'அல்லாஹூ அக்பர் '

இன்று ஒரு அரசியல் சொல்லாக மாறிவிட்டது

அது தன் முந்தைய அர்த்தத்தின் கிளையிலிருந்து

தன்னை விடுவித்துக்கொண்டு

ஒரு பறவையைப்போல

பறந்து செல்கிறது

ஒரு சிறு பெண்

தனது சிறிய கீச்சுக்குரலால்

நாடு முழுக்க

ஒரு எதிர்க்குரலாக மாற்றிவிட்டாள்

என்னுடைய பெயர் அபுல் ஹசன்




 

ஆடையுரிமைப் போராட்டத்திற்கு மானசீக ஆதரவாக இப்பதிவு இருக்கட்டுமே ....

 


கீதா மோகன்

இஸ்லாமிய சகோதரிகளின் ஆடையுரிமைப் போராட்டத்திற்கு மானசீக ஆதரவாக இப்பதிவு இருக்கட்டுமே ....

வரிகள்: கீதா மோகன்

குரல்: Kathija Sheikhmohamed


அவள் கூந்தலைக் காட்டச் சொல்லி

சுற்றி நெருங்கும் காவிக் கூட்டம்

அச்சம் பற்றிப் படரவில்லை

கூனிக் குறுகி வெட்கித்து

நாணிக் கோணி நாலாய் மடிந்து

புகலிடம் தேடி ஓடுவாள் - புழுவாய்த் துடிப்பாள் 

என்று எதிர்பார்த்த கூட்டத்திற்கு

எதிர்பாரா பெருத்த அவமானம்

எதிர்த்தாடுகிறாள் எரிஅமிலமாய் - ஒரு கணம் நின்று நிதானித்து

ஏறிட்டு அவள் பார்த்த அலட்சியப் பார்வையில்

ஆயிரம் எரிகணைகள் - 

வீரியம் குறைந்தே போனது

கழுதைப்புலிக் கூட்டத்திற்கு...

ஆண் தோல் போர்த்திய அசிங்கங்களின் அச்சுறுத்தும்

கோஷம் தாண்டி உரத்தொலிக்கிறாள் 'அல்லாஹு அக்பர்'

கூந்தல் காட்டச் சொன்னவர்களே

நீங்கள் எல்லாம் என் அடியுதிர்ந்த கூந்தலுக்குச் சமானம்

என்றரபியில் சொல்கிறாளோ என்றால் அதுதான் இல்லை

'இறைவனே மிகப் பெரியவன்' என்று பொருளாம் - இருக்கட்டுமே

அல்லாஹு அக்பர் என்றால் என்ன?

 



அப்துல் கையூம்

அல்லாஹு அக்பர் என்றால் என்ன?

இதுதான் இப்போது எல்லோரும் எழுப்பும் கேள்வி. அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு GOD என்று அர்த்தம். அவ்வளவுதான். மாறாக அல்லாஹ் என்பது பலரும் நினைப்பது போல் நிச்சயமாக முஸ்லிம் சாமி அல்ல.

 கிறித்துவ அரபிகளும் பரமபிதாவை அல்லாஹ் என்றுதான் அழைக்கிறார்கள். முன்னோர்கள் சிலையை வணங்கி வந்த பேகன் அரபிகளும் அந்த எல்லாம் வல்ல இறைவனை அல்லாஹ் என்றுதான் அழைத்தனர்.

அல்லாஹூ அக்பர்என்றால் இறைவன் மிகப் பெரியவன். இந்துக்களுக்கும் அல்லாஹ்தான் பரம்பொருள். கிறித்துவர்களுக்கும் அல்லாஹ்தான் பரமபிதா. யூதர்களுக்கும் அல்லாஹ்தான் ஆதிபிதா.

இதில்அல்லாஹூ அக்பர்என்றால் மிரள்வதற்கு என்ன இருக்கிறது.?

Sunday, February 6, 2022

ஹிஜாப்

 

Vavar F Habibullah

ஹிஜாப்



ஹிஜாப் பாதுகாப்பு கவசம்

அல்ல. அது பெண்களை ஒரு

போகப் பொருளாக அல்லது

காட்சிப் பொருளாக பிறர் முன்

காட்டிக் கொள்வதை தடுக்க

உதவும் ஒரு அங்கீகாரம். அது

ஹிஜாப் அணிய விரும்பும்

பெண்களின் தனி உரிமை.

இது இப்போது ஓவர்கோட்

மாடலில் நேர்த்தியான வடி

வமைப்பில் கிடைக்கிறது.

தகுதிகள் இல்லாமல் இருப்பது தவறில்லை ! வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதுதான் தவறு ...


 

Saturday, February 5, 2022

என் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பது எனது உரிமை

 

Senthilkumar Deenadhayalan

பொறையார் பள்ளியில் படிக்கும் போது, இஸ்லாமிய மாணவர்கள் கைலி அணிந்து பள்ளிக்கு வருவதுண்டு. காரணம் ஒரு வயதிற்கு மேல் ஆண்கள் தம் தொடை தெரிய உடையணியக் கூடாது என்ற இஸ்லாமிய கோட்பாடு.

தினசரி பேன்ட் அணிந்து வர, அப்போது எல்லோரிடமும் நிறைய பேன்ட் கள் இருந்ததில்லை. ஏதோ ஒன்றிரண்டு தான் இருக்கும். எனவே கைலி அணிந்தே  பள்ளிக்கு வந்தார்கள்.

அதை பள்ளி நிர்வாகமோ, ஆசிரியர்கள், மாணவர்களோ கேள்வியாக்கியதில்லை. காலப் போக்கில் எல்லோரும் தினமும் பேன்ட் அணியக் கூடிய சூழல் வந்ததும், கைலி அணிந்து பள்ளிக்கு வருவதை நிறுத்தினார்கள்.

போலவே ஒரு வயதிற்கு பின் இஸ்லாமிய பெண் குழந்தைகள் தலையில் துணி இல்லாமல் வெளியில் வந்ததில்லை. அதனால் பெண் குழந்தைகள் பள்ளிக்கு தலையில் துணி முக்காடு அணிந்தே வந்தனர். அதற்கும் யாரும் எந்த எதிர்ப்போ, கேள்வியோ கேட்டதில்லை. காரணம் அது அவர்களின் உடை கலாச்சாரம்.  அந்த வழக்கம் இன்று வரை தொடர்கிறது!