Tuesday, December 15, 2015

அதிகாரமும் அதிகாரிகளும்

சில அதிகாரிகளால் மட்டுமே, சில காரியங்களை துணிச்சலாக செய்ய முடியும்.
அந்த நாட்களில், நான் நெல்லையில் தூய சவேரியர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த கால கட்டம் அது. மாவட்ட ஆட்சித்தலைவராக, அப்போது பசுபதி என்பவர் இருந்தார்.காமராஜர் தமிழக முதல்வராக இருந்த கால கட்டம் அது. ஜோதி வெங்கடாச்சலம் என்ற அம்மையார், அப்போது ஒரு அமைச்சராக இருந்தார். நெல்லை சென்ட்ரல் டாக்கீசில், சினிமா பார்ப்பதற்காக, அரசின் காரில், அமைச்சர் வந்து இறங்கினார். இந்த விஷயம், கலெக்டர் பசுபதியின் காதுகளுக்கு போய் சேர்ந்தது. நேரடியாக ஆய்வு மேற்கொண்ட அவர், அரசு காரை, அமைச்சர் - தன் சொந்த தேவைகளுக்கு தவறாக பயன்படுத்துவதை கண்டித்தார். அமைச்சரின் கார், உடனடியாக தியேட்டரில் இருந்து அகற்றப் பட்டது.

கடுப்பாகிப் போன அமைச்சர், இது பற்றி அன்றைய முதல்வர், காமராஜரிடம் புகார் தெரிவித்தார். கலெக்டர் பசுபதியை சென்னைக்கு வரவழைத்து, காமராஜர் விசாரணை மேற்கொண்டார். பசுபதி தன் முடிவு சரியானது என்று வாதித்தார். வாதம் தொடரவே பசுபதி சொன்னார்...

"SIR, I CAN BECOME THE CHIEF MINISTER OF THE STATE; BUT YOU CAN NOT BECOME AN IAS OFFICER."

கலெக்டர் பசுபதியின் இந்த பதில், காமராஜரை மிகவும் கவர்ந்தது. அமைச்சரை பிடித்து விளாசினார் முதலமைச்சர்.
பசுபதி அந்த நாட்களில் மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

சில IAS அதிகாரிகள், உண்மையிலேயே "BORN FOR OFFICER JOB" அதிகாரிகளாகவே பிறக்கிறார்கள். இதனை, இதனால், இவன் முடிக்கும்...என்ற குறள் வாக்குக்கு இணங்க, இவர்களது அரிய பணி கண்டு நாடே வியக்கிறது.

எனது நெருங்கிய நண்பர், ராமசுந்தரம் IAS அவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்.புதுக் கோட்டை, ராஜ வம்சத்தை சார்ந்த இவர், கலைஞர் ஆட்சியில், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளராக, பதவி வகித்தார்.
புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணி, இவர் கரங்களில் ஒப்படைக்கப் பட்டது. இரவு பகல் பாராது கலைஞருடன் சேர்ந்து, தலைமைச் செயலகம் கட்டும் பணியை ஒரு அறப்பணியாக செய்து முடித்தவர், இந்த திறமை மிகுந்த சிறப்பான அதிகாரி.

ஆட்சி மாறியது.....
தலைமச் செயலகம் செயல்படாத நிலை, இவரது கனவுகளை தகர்த்துவிட்டது. ஆனால் இவரது உறுதியை தகர்க்கவில்லை. உடனடியாக தான் வகித்து பதவியை ராஜினாமா செய்தார், இந்த நேர்மையான IAS அதிகாரி.
மத்திய அரசில் பெரிய பொறுப்பில் இருக்கும்,
அர்ச்சனா ராமசுந்தரம் IPS இவரது மனைவி ஆவார்.
Vavar F Habibullah With Mr.Ramasundaram IAS

Vavar F Habibullah

No comments: