எனக்கான ஞாயிறு எப்போதும் ஏது ?...
தினத்துக்கும் ஒருவேலை ...
இன்றுமே அப்படித்தான் ...
அதுவும் அதிகமான வேலைகள் ..
வறுத்து ,பொறித்து ,காய்ச்சி இறக்கி ...
வக்கணையாகப் பரிமாறி ..
களைக்குமளவு உண்ணக்கொடுத்து ..
உபசரித்து நான் களைத்து ...
ஒரு கப் டீயுடன் சோபாவில் சரியும்போது ,
உண்டுக்களைத்தவர்கள் எல்லாம் ..
கண்கள் சுழல உறங்கப் போவார் !....
டெலிவிஷனின் சப்தம் மட்டுமே ..
எனக்கான தாலாட்டு ...
நான் கண்சொக்கிப்போவேன் !...
எனக்கான உணவு எப்போதும் பெரிசில்லை !
உண்ணவைத்துப் பார்ப்பதில் பேரானந்தம் !...
டீயும் ,காபியுமான வாழ்க்கைதான் ..
அநேக இல்லத்தரசிகளுக்கு !...
அநேக வேலைகள் !...
அடுத்தடுத்த பொறுப்புகள் !...
திங்கட்கிழமைக்கு காத்திருக்கும் ..
யுனிபார்ம் செட்டுகள் ...
நாங்கள் பார்ப்பது என்ன ..
கார்ப்போரேட் கம்பெனி வேலையா ?...
எங்களுக்கு எப்போங்க ஞாயிறு ?...
யார் தருவாங்க லீவு ?...
No comments:
Post a Comment