Saturday, May 23, 2015

நானும் கூட ராஜா தானே, நாட்டு மக்களிலே...


வாழ்க்கையில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த நாளில் கல்விச்சாலைகள், அந்த லட்சி யங்கள் நிறைவேற உதவின. இடலாக்குடி, அரசு பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்த, ஒரு மாணவன், IAS - ஆக வேண்டும் என்று ஆசைபட்டான். தமிழ் மீடியத்தில் படிக்கும், ஒரு மாணவன், இவ்வாறு கனவு காண்பது தவறு, என்று போதித்தார் தலைமை ஆசிரியர்.
50 வருடங்களுக்கு முன்னால், தமிழில் IAS எழுதும் வசதி இல்லை. ஆங்கிலத்தில் சிறந்த புலமை வேண்டும், ஆங்கிலத்தில் அந்த மாணவனுக்கு, அவ்வளவு புலமை இல்லை.
எஸ், நோ, என்ற ஆங்கில வார்த்தைகளே, அந்த நாளில், அந்த பள்ளி மாணவர்கள், அறிந்த ஆங்கில வார்த்தைகள். அந்த நாளில், ஒரு அண்டர் கிராடுவேட் டிகிரியும், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனும், 50 ரூபாய் பணமும் இருந்தால், யார் வேண்டுமா னாலும், IAS, IPS, IFS தேர்வு எழுத முடியும். இன்றும், அதிக பொருள் செலவில்லாமல், தேர்வு எழுதி, பாஸ் பண்ணும் பரீட்சை IAS தான்.

அந்த மாணவனுக்கு IAS தேர்வு பற்றிய, அத்த னை தகவல்களும், அத்துப்படி. அந்த நாளிலே யே, அதற்கான புத்தகங்களையும், அதற்கான பத்திரிகைகளையும் , தேடி அலைந்தான் அவன். தேடிய தகவல்கள் அனைத்தும், ஆங்கி லத்தில் இருக்கவே,சற்று திகைத்தான். நிலை மையை, ஊர் வந்த தந்தையிடம் எடுத்து சொன்னான். அதிசயமான தந்தை அவர். மகனின் ஆர்வத்தை அறிந்த அவர், அவனை அந்நாளில், சிறந்த கல்லூரியான, தூய சவேரியர் கல்லூரியில், அவன் சேர அனுமதி வழங்கி னார். நெல்லை கலைக்கல்லூரி, (St. Xaviors College - Palalayamkottai ) அவன் IAS ஆர்வத்தை, மேலும் அதிகரிக்க உதவியது. நல்ல மதிப்பெண்கள் பெற்று, அவன், PUC தேர்வில் வெற்றி பெற்றான். அவன் கவனம், அப்போது மருத்துவ துறையின் மீது இல்லை.
IAS ஒன்றே, அவன் லட்சியமாக இருந்தது. BSC-படிப்பை திருவனந்தபுரத்தில் படித்தால், தன் கனவு நனவாக மலர, வாய்ப்புகள் அதிகம் என்று, அவன் நம்பினான். திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற, மார் இவானியஸ் கல்லூரி, (Mar Ivanious College, Trivandrum) அவனை, ஏற்றுக் கொண்டது. கல்லூரியின், முதன் மாணவனாக ,அவன் தேர்வு பெற்றான். BSC - டிகிரி கையில் கிடைத்த மகிழ்வோடு, மீண்டும் IAS முயற்சியில், முழு மூச்சோடு இறங்கினான் அவன். அதற்கான அத்தனை முயற்ச்சிகளுக்கும், முழு ஆதரவு நல்கினார், அவன் தந்தையின், சட்ட ஆலோசகரும், முன்னாள் எம்.பியும் ஆன, எ.எ. ரஜாக் அவர்கள். அந்த நாட்களில், BSC - Graduates, பட்டதாரிகளுக்காக மட்டும், MBBS படிப்பிற்கு, தனி கோட்டா இருந்தது. எனவே MBBS Course படிக்கும் படி, அவனை தூண்டினார், அந்த பெரியவர். அவர் சொன்னார், "MBBS, அப்ளை பண்ணு, கிடைத்தால், அதில் சேர்ந்து விடு; இல்லை என்றால் IAS, IPS, IFS பற்றி எண்ணலாம்". அப்போது, டாக்டருக்கு (MBBS) படிப்பது என்பது, மிகவும் பெரிய விஷயமாக கருதப்பட்டது. அந்த பெரியவர் சொன்னது, அவனுக்கு, 'at that time' சரியாக பட்டது. அவர் சொன்னபடியே, டாக்டருக்கு அப்ளை செய்த அவனுக்கு, மிகவும் எளிதாக MBBS சீட் கிடைத்தது. அவனும் ஒரு டாக்டர் (doctor) ஆனான்.

இந்த நாட்களில் ..........
'படித்தவன்,பாடம் நடத்துகிறான்,
படிக்காதவன், கல்லூரி நடத்துகிறான்.'
தமிழகத்தில்..... Nowadays,
நடிகர்கள் மட்டுமே, அரசியல் தலைவர்களாக உயர முடிகிறது. அரசியல் கட்சிகளும், கல்லூரிகள் போல், அவர்களால் (Actors), துவங்க இயல்கிறது. ரசிகர்களே, இப்போது கட்சி தொண்டர்களாக, உருமாறி விட்டார்கள். காந்தி போல், நேரு போல், இனி படித்தவர்கள், அரசியல் தலைவர்கள் ஆக இயலாது. தலைவனாக, சினிமா அறிமுகம் தேவை.
அந்த நாட்களில், அவனைத்தேடி, நிறைய சினிமா வாய்புகள் வந்து குவிந்தன. தந்தை முறைத்தார்....தாய் திட்டினார்... அவன், அதை பொருட்படுத்தாமல் இருந்திருந்தால், ஒரு வடிவேல் அளவுக்காவது, திரையுலகில்
அவனால் கால் பதித்திருக்க முடிந்திருக்கும்.
அட்லீஸ்ட், ஒரு கட்சி ஒன்றை, அவன் தமிழ் நாட்டில் தொடுங்குவதற்காவது - அது பயன் பட்டிருக்கும்........என்ன செய்வது!
எம், தமிழ் குல பெருமக்களை, நடிகர்களால் மட்டுமே கவர இயலும், என்பது உண்மை...
தமிழ் நாட்டில், இனி நடிகன் மட்டுமே, நாடாள இயலும். தமிழ்நாட்டின் தலைவிதி, சினிமா தலைவர்களின் கைகளிலேயே அடங்கி இருக்கிறது........
நடிக்க வந்த சான்சை, இழந்தது எவ்வளவு பெரிய தவறு என்பது, அவனுக்கு இப்போது புரிகிறது. அறிஞன் சொல்வதை விட,நடிகன் சொல்வதைத் தானே 'present day' மக்கள், ஏற்று கொள்கிறார்கள். காலம் கடந்த பின், ஞானம் வந்து என்ன பயன்!?..
இளைய தலைமுறை கவனத்திற்கு...
தமிழ் நாட்டில் அரசியல் தலைவனாக விரும்பினால், படிப்பை தூக்கி எறிந்து விட்டு, நடிகனாக முயற்சி செய்யுங்கள்...
கைகட்டி, வாய் பொத்தி, பணி செய்து கிடப்பது என்றால், படிப்பை தேர்ந்தெடுங்கள்...
நல்ல ரசிகனாக வேண்டுமானால், நிறைய சினிமா பாருங்கள்...
நல்ல கட்சி தொண்டனாக விரும்பினால், கட்சி கூட்டங்களில், அதிகமாக கற்று கொள் ளுங்கள்...பக்தியும், விசுவாசமும் வாழ்வில் வெற்றி பெற உதவும்.
Schools and colleges manufacture "educated machines" to do clerical, professional and technical jobs. Skilled and semi - skilled jobs are already taken over by robots in the west.
 
Vavar F Habibullah

No comments: