Saturday, December 24, 2011

ஏன் இந்த குரோத மெயில் சகோதரரே?


Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

சென்ற 2010 ஜூலை மாதம், 'சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு' என்ற கட்டுரையும், அதே வருடம் நோன்பு நேரத்தில், 'தஞ்சை மாவட்டத்தில் திருவிடைசேரி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பந்தமாக, 'கண்கள் குலமாகுதம்மா சகோதர யுத்தம் கண்டு' என்ற கட்டுரையும் மின் அஞ்சலில் வெளியிட்டும், சமுதாய ஊடகங்களிலும் வெளி வந்தன பலர் அறிந்திரிப்பீர்கள்
முன்பெல்லாம் கதைகள், கட்டுரைகளைப் பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் காசு கொடுத்து வாங்கிப் படிப்போம். தற்போது அசூர வேகத்தில் சுழலும் மின்சார உலகில் பல்வேறு அலுவல்களுக்கிடையே சில நிமிடங்களிலேயே பல்வேறு நாடுகளிலிருந்து நண்பர்கள், உறவினர்கள், உடன் பிறந்தோர், அறிவு ஜீவிகள், மார்க்க அறிஞர்கள் போன்றோர்களிடம் இருந்து செய்திகளைப் பெற மின்அஞ்சல் மிக இன்றியமையானதாக ஆகி விட்டது. ஆனால் அதேமின் அஞ்சலை தங்களது சொந்த விருப்பு, வெறுப்பினை தரம் தாழ்ந்து கொட்டித் தீர்ப்பது சரிதானா என்பதே என் கேள்வியே?

20.12.2011 அன்று மின் அஞ்சலை திறந்து ஒவ்வொன்றாக படித்துக் கொண்டு வந்தேன். அதில் புனித குரான் தமிழ் விளக்கம்,ஹதீசுகள், தவா நடவடிக்கைகள், நோயிற்றிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ உதவி, துவா கேட்டல், பல்வேறு மவுத்து செய்திகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கான விளம்பரங்கள், வெளி நாட்டில் வாழும் ஈமான்தார் ஆக்கப் பூர்வமான செயல்கள் போன்றன வந்திருந்தது கண்டு, ஆகா மின் அஞ்சல் எந்த விதத்தில் நமது சகோதரர்களை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது என்று எண்ணி மகிழ்ந்து இருக்கும் வேலையில், அனைவருக்கும் அனுப்பட்டஒரு மின்அஞ்சல் மட்டும் என்னை திடுக்கிடச் செய்தது. அது என்ன என்று நீங்கள் அறிய உங்களுக்கு ஆவல் இருப்பது நியாயமே!


ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் கடைப் பிடிக்க தமிழ் இலக்கியம் கூறுவது, 'இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகும்' ஏன் ரசூலல்லாவும் அவர்களது தோழர்களும் எந்த நேரத்திலும் தரம் தாழ்ந்த வார்த்தைகளை உபயோகித்ததில்லையே!
ஆனால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழி வந்த நாம் மட்டும் நல்ல சொற்கள் இருக்க நாறச் சொற்களை மின் அஞ்சலில் உபயோகிக்கலாமா என்பதே என் கேள்வியே!
அதுவும் எப்படிப் பட்ட கடுஞ் சொற்கள் என்றால் ஒரு இயக்கத்தினர் அடுத்த இயக்கத்தினவரினை காதில் கேட்க முடியாத சொற்களைக் கொண்டு வசை பாடி இருந்தனர். அது என்ன காதில் கேட்க முடியாத சொற்கள் என்று கேட்கலாம். வேற்று இயக்கத்தின் தொண்டர் ஒருவரின் மனைவியினை அடுத்தவருக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாகவும், அந்த நபர் அடுத்தவருடன் ஹோமோ செக்ஸ்சில் ஈடுபட்டதாகவும், அந்த இயக்கத்தினர் காதல் களியாட்டங்களில் ஈடு படுவதாகவும், மின்அஞ்சல் திருட்டுச் செய்வதாகவும் மனம் போன போக்கில் சொல்லப் பட்டிருந்தது.
கல்லூரி மாணவனாக இருந்திருந்தால், 'மஞ்சள் பத்திரிக்கை மற்றும் கிளு கிளுப் பூட்டும் செய்திகள் படிபதிற்கு மிகவும் சுவையாக இருந்திருக்கும். ஆனால் வயது முதிர்ச்சியடைந்து, 'வீடு போ போ என்றும் காடு வா வா' என்றும் சொல்லும் நிலையில் இருக்கும் என் போன்றவர்களும், அறிவில் முதிர்ச்சியடைந்த பல்வேறு நாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர் உங்களுக்கும் அதிர்ச்சியாக இருந்ததில் நியாயம் இருக்கத் தான் செய்திருக்கும்!

சமுதாய இயக்கங்கள் அனைத்தும் ஏக அல்லாவினையும் அவனுடைய இறுதித் தூதரையும் ஏற்றுக் கொண்டு ஒரே கோடையில் வாழ்பவர் தானே! சமுதாய இளைஞர் பட்டாளத்தினை வழி நடத்த விரும்பும் இயக்கங்கள் தாங்கள் கடைப் பிடிக்கும் வழிகள் பலவாக இருக்கலாம். ஆனால் வெறுமையில் ஒற்றுமை உள்ள இயக்கமாக ஏன் மாறக்கூடாது என்பதே என் கேள்வியே!

ஏக இறைவன் அஹிலத்தினை 'பிக் கோலுசன்' என்ற செயல் மூலம் பல கிரகங்கள் படைத்து அவைகள் அத்தனையும் அதன் அதன் பாதையில் சுழல விடவில்லையா என்ன? பின் ஏன் நாமும் நமது இயக்கங்களிடையே உள்ள வேற்றுமை மறந்து அவரவர் கொள்கையில் இளைஞர்களை வழி நடத்திச் செல்லக்கூடாது?
அந்தரத்தில் உள்ள சில விசயங்களை ஏன் அரங்கத்திற்கு கொண்டு வர வேண்டும்? பிறரைப் பற்றி உண்மை தெரிந்தால் அதனை கூட்டம் போட்டு பறை சாற்றுவது நல்லது தானா? பிறரைப் பற்றி புறம் பேசுவது மனித மாமிசத்தினை தின்பது போன்றது என்று ஹதிசுகளில் சொல்லவில்லையா? பின் ஏன் அதுபோன்ற மின் அஞ்சலை எல்லோருக்கும் அனுப்ப வேண்டும்?
உலகில் குறை இல்லா மனிதர் உண்டா? கடைக் கண் பார்வையில் கூட கற்பிற்கு களங்கம் விளைவிற்காதவர் ஊர் முச்சந்தியில் உள்ள பானையில் பாலைக் கொட்டுங்கள் என்று சொல்லி ஒருவர் கூட ஊற்றவில்லை என்ற கதையினை அனைவரும் படித்திருகின்றோம்., மாசில்லா தங்கம் உண்டா? அல்லது துருப் பிடிக்கா ஆயுதம் உள்ள ஆர்மேரி உண்டா?
ஆகவே சமுதாய இயக்கங்களிடையே உள்ள குறைகளை பூதக் கண்ணாடிப் போட்டு பெரிதாக்காமல் சமுதாயதினவர்க்கு நாம் என்னென்ன நல்லது செய்யலாம் என்று சிந்தனை செய்து அதனை முயற்சிக்கலாம்.

இந்த நேரத்தில் சமுதாயத்தினர் ஒற்றுமை பற்றி தன்னல மற்ற தலைவர் காயிதே மில்லத் அவர்கள் 5.5.1970 அலிகார் பொதுக் கூட்டத்தில் பேசிய உரைகள் உங்கள் முன் வைக்கின்றேன், 'நாம் சிறுபான்மை மக்களாக வாழ்கிறோம். நமக்குள் ஒற்றுமை மிக மிக அவசியம்.

பெரும்பான்மை சமுதாயம் எப்படியும் பிரிந்து இருக்கலாம். ஆனால் சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்து வாழ்வது குர்ஆனின் கட்டளையாகும்' என்றார்கள். சிறுபான்மையினர் ஒற்றுமையுடன் வாழ்ந்தபோது அதிக பலத்துடன் இருந்தனர். ஆனால் வேற்றுமையுடன் இருந்ததால் சிறுபான்மையினரை கால் தூசுக்கு மதிப்பில்லாதவர் என பெரும்பான்மையினத்தவர் சிலர் நினைக்கின்றனர்.
உதாரணத்திற்கு, லோக் பால் மசோதாவில் 50 சதவீத கோட்டா கொண்டு வருவதினை திண்ணைப் பேச்சு அண்ணாச்சி ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பாருங்களேன்!
அது மட்டுமா தேசிய சிறுபான்மை கமிஷன் மைனாரிட்டி மக்களுக்கு கோட்டா வழங்க வேண்டும் என்ற சிபாரிசின் பேரில் மத்திய அரசு மைனோரிட்டி சட்டம் 1992 பிரிவு 2(சி) யில் உள்ளபடி 4.5 சதவீத கோட்டா வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இது மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான 10 சதவீதத்திற்கும் குறைவானதானாலும் அதனைக் கூட பி.ஜே.பி சட்டத்திற்கு புறம்பானது என சொல்லி ஆர்பாட்டம் செய்கிறது.
அது மட்டுமா? ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகத் சொல்கிறார் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடத்தில் நிச்சியமாக தாவா நிலம் அத்தனையிலும் பெரியராமர் கோவில் அயோத்தில் கட்டவேண்டும் என்கிறார். அதற்குத்தான் அவர்களின் சாதகமான ஆட்சி மத்தியில் வேண்டும். அதற்கு முன்னோடிதான் திண்ணைப் பேச்சு அண்ணாச்சியின் ஆர்ப்பாட்டம் என்றால் மிகையாகாது.

ஆகவே,

1) சமுதாய இயக்கங்கள் தங்களுக்குள் சுயக் கட்டுப் பாட்டுகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களுக்குள் தரம் தாழ்ந்து சண்டையிடாமல், அத்துடன் பொது நலன் சமுதாய மக்களை வழிப் படுத்தினால் நலமாக இருக்கும்.
2) சமுதயத்திற்கு மாறுதலாக அடுத்தவர் நடந்தார் என்றால் அந்த நபருக்கு தனிப் பட்ட முறையில் மின் அஞ்சல் அல்லது தபால் எழுதலாம். அல்லது அவர் நடவடிக்கையினை அந்த இயக்க முன்னோடிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.
3) அரசு அலுவலங்களிலும் நமது முஸ்லிம் கல்வி தொழில் அமைப்புகளிலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படுகிறதா என்று கவனித்து அவைகள் கிடைக்க இணைத்து நடவடிக்கை எடுக்கலாம்.
4) பல்வேறு நகரங்களில் கிராமங்களில் சமுதாயத்தினவற்கு ஏற்படும் இன்னல்களை அனைவரும் இனைந்து தட்டிக் கேட்கலாம். அதற்கான கிரிடிட் தங்கள் இயக்கம்தான் என்று பறைசாற்றி அடுத்த இயக்கங்கலினை அனாவசியமாக வெறுப்பேற்றத் தேவையில்லை.
5) நமது நாடு ஜனநாயக நாடு. ஆகவே மக்கள் பிரதிநிதிகளுக்குத் தான் முக்கியம் கொடுக்கப் படும். ஆகவே இயக்கங்கள் தேர்தல் நேரத்தில் பொது கொள்கையுடன் இணைந்து சமுதாயம் சார்பாக பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கலாம்.
6) புராதான வழிபாட்டு தளமான பாப்ரி மஸ்ஜிதை இருந்த இடத்திலே கட்டும் வரை தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும். சமீபத்தில் மின் அஞ்சல்களையும், தொலை பெசிகளையும் மத்திய உளவு நிறுவனங்கள் முன் அனுமதியின்றி ஆறு மாத காலத்திற்கு கண்காணிக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய மின் அஞ்சல்களை வேற்று மத உளவு அமைப்புகளும் கண்காணிக்கின்றன. ஆகவே மின் அஞ்சல்களை அனுப்புவதில் எல்லை மீறாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்.தனிப் பட்டவர் உரிமை மின் அஞ்சலில் மீறினால் 'சைபர் கிரைம்' சட்டத்தின் மூலம் தண்டிக்கப் பட வாய்ப்புண்டு என்று சுட்டிக் காட்டி சமுதாய இயக்கங்களிடையே உள்ள குரோதத்தினை அடியே ஒழிப்போமா!
source: http://mdaliips.blogspot.com/2011/12/blog-post_6662.html

2 comments:

vadakaraithariq said...

சரியாக சுட்டி காட்டினிர்கள் அண்ணா

vadakaraithariq said...

சரியாக சுட்டி காட்டினிர்கள் அண்ணா