Saturday, December 10, 2011

இசை எப்படி இருக்க வேண்டும்!

 இசையும் ஒரு கலையின் வெளிப்பாடுதான் ஆனால் அதனை   ஒரு சிறந்த முறையில் கொடுக்கப்பட  வேண்டும். ஒழுங்கு படுத்தப் பட்ட ஒலி அனைத்தும் இசையாக  இருக்க முடியும், அந்த இசை எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் நாம் சித்திக்க வேண்டியதாக இருக்கின்றது.     ஹிப் ஹாப் அல்லது ராப் தொடர்புடைய  இசை ஒரு ஒழுக்கமான படிவத்தை பெற முடியாது. அது வலுவான இசைக்கு ஒரு களங்கமாக உள்ளது. மனிதனுக்கு மனிதன் விருப்பங்கள் மாறுபடுகின்றன , (Taste differs man to man) எனக்கு இசையினைப் பற்றிய அறிவு கிடையாது. சமைக்கத் தெரியாவிட்டாலும் சமைத்த உணவின் ருசியினை அறிய முடியும். நாட்டுக்கு நாடு இசை மாறு பட்டிருப்பதனை நாம் அறிவோம் . இப்பொழுது நமக்கு அதிகமாக கிடைக்கும் சினிமா  இசை யாவும் ஒரு கலவைதான். காக்காய் கரைவதும், நாய் ஓலமிடுவதும் குயில் கூவுவதும் அதன் மொழி. ஒரு நல்ல கலைஞர்களால் அதனையே ஒரு சிறந்த இசையாக மாற்ற முடியும். சிறந்த கலைஞர்களுக்கு சில  ஓட்டை டப்பாக்களே இசை உண்டாக்கக் கூடிய கருவியாக முடியும்

இங்கு கிளிக் செய்து பாருங்கள் : இசை எதிலேருந்து வருது?

.அதிலிருந்து அருமையான இசையினை கொடுக்க முடியும்.இசை  (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும்.
இசைக்கு சிறந்த பாடல்கள் சிறப்பினைத் தருகின்றன. இசை மனத்தினை வருடக் கூடியதாகவும் உற்சாகம் தர வல்லதாகவும் இருப்பது சிறப்பு . நல்ல பாட்டுடன் இசையைக் கொண்டு குழந்தையை தூங்க வைப்பது போல் செடிகளை வளர வைக்க முடியும் என ஆய்வின் வழி கண்டுள்ளார்கள்.
இறுதியாக
வள்ளுவர் வாக்கே உயர்வு.
குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள். மழலை சொல் கேளாதவர்!

No comments: