Showing posts with label ஒற்றுமை. Show all posts
Showing posts with label ஒற்றுமை. Show all posts

Saturday, February 1, 2014

சமுதாயத்தின் ஒற்றுமை உயர்வை தரும்

உள் மனதின் நம்பிக்கை அதிகம்
உடல் உணர்வுகள் உயர்வு
வலிமை உயர்வை தருகிறது
கவனக் குறைவு தடுமாறுகிறது
அறிவு வழி காட்டுகிறது

தன்னை உருவாக்க தன் முயற்சி
தன்னை உயர்த்த பிறரை தாழ்த்தி அல்ல
தன்னை மேம் படுத்த சமுதாயம் தேவை
தன்னை உயர்த்துவதே சமுதாய மேம்பாடுக்கே
தனி மரம் தோப்பாகாது
தனி மனிதன் சமுதாயமாக முடியாது
தனி மனிதனின் உயர்வு சமுதாயத்தில் அடக்கம்
தனித்து வாழ விரும்புவன்
வழி தவறிய மனிதன்

Sunday, December 29, 2013

இவனை ஒன்றிணைக்க..

சாதியால்
பிறர் சதியால்
மதத்தால்
மனத்தால்

பிரிந்துகிடக்கும்
மனித இனம்

இன்று
பணத்தால்
பதவியால்
பொருளியலால்

Saturday, December 29, 2012

எல்லா வகையிலும் என் மனதில் ஏற்றம் பெற்றாய்!

அண்ணனும் நீயே ஆசிரியரும் நீயே
அண்ணனாக வழிகாட்டினாய்
ஆசிரியராக கற்பித்துக் கொடுத்தாய்
தவறு  செய்தால் தண்டித்தாய் 
பிழை இருந்தால் திருத்தினாய்
அன்பை வளர்த்தாய்
ஆர்வத்தை தூண்டினாய்
நண்பனாக நான்கு இடமும் காட்டினாய்
முதல்வனாக இருந்து குடும்ப பாரத்தை சுமந்தாய்
இளவலான என்னை ஏவி துணையாக இருக்கச் சொன்னாய்
ஏவியதை இயன்றவரை செய்துத் தந்தேன்

எனக்கொரு இல்லாளை இருவரும் தேடித் தந்தீர்
எனக்கென்று வந்தவள் என் நெஞ்சோடு கலந்தவளை
உனக்கென்று உடையவளுக்கு அது உகந்ததாகவில்லை
நீங்கள் பார்த்து எனக்கு முடித்து வைத்தவள்
நீ முடித்தவளுக்கு  பிடிக்காமல் போனது
நான் முடித்தவள் செய்த குற்றத்திற்கு என் குற்றமாகாது 
குற்றத்திற்கு ஒரு குற்றம் பெருக வேண்டாம்

Thursday, December 13, 2012

ஒற்றுமை வேண்டி கொள்கையை இணைப்பதில்லை

வந்தாரை வரவேற்றேன்
வந்தார் வேண்டாத வேலை செய்வார்
வேண்டியதையும் விரும்பித் தருவார்
வேண்டாததையும்  வெதும்பத் தருவார்
அள்ளித் தருவது அளவோடு இருக்கும்
அள்ளிப் போவது அதிகமாக இருக்கும்

எம்மிடத்தில் எப்போதும் இரு
இருக்கும்வரை தொல்லை தராமல் இரு

இத்தனை நாட்கள்  என்னோடு இருந்தாயே
இன்னுமா என் இதயத்தில் இடம் பிடிக்காமல் இருந்தாய்
நீ விரும்பியதை நான் அறிந்திருக்க
நான் விரும்பியதை நீ அறியாமல் போனதேன்

உனக்கொரு கொள்கை எனக்கொரு கொள்கை
ஒற்றுமை வேண்டி கொள்கையை இணைப்பதில்லை
கொள்கையின் அடிப்படையில் நாம் சேரவில்லை
தேவையின் அடிப்படையில் நாம் சேர்ந்தோம்
உன் கொள்கை உன்னோடு
என் கொள்கை என்னோடு
இக் கொள்கை நம்மை இணைத்தது

ஒற்றுமையாய் இருக்க அவரவர் கொள்கையை மதித்தல் வேண்டும்
வேற்றுமை விரும்பின் விட்டுக் கொடுக்கும் மாண்பு மறைந்து விடும்

நெருப்போடு நீர் சேர்ந்தால் நெருப்புதான் அனையும்
என்னோடு நீ மோதினால் நீ அழிவாய்
நான் நீர், நீ நெருப்பு
நெருப்பின்றி வாழலாம் நீரின்றி வாழ முடியுமோ

 உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”- குர் ஆன்: 109:6.

Saturday, December 24, 2011

ஏன் இந்த குரோத மெயில் சகோதரரே?


Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

சென்ற 2010 ஜூலை மாதம், 'சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு' என்ற கட்டுரையும், அதே வருடம் நோன்பு நேரத்தில், 'தஞ்சை மாவட்டத்தில் திருவிடைசேரி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பந்தமாக, 'கண்கள் குலமாகுதம்மா சகோதர யுத்தம் கண்டு' என்ற கட்டுரையும் மின் அஞ்சலில் வெளியிட்டும், சமுதாய ஊடகங்களிலும் வெளி வந்தன பலர் அறிந்திரிப்பீர்கள்
முன்பெல்லாம் கதைகள், கட்டுரைகளைப் பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் காசு கொடுத்து வாங்கிப் படிப்போம். தற்போது அசூர வேகத்தில் சுழலும் மின்சார உலகில் பல்வேறு அலுவல்களுக்கிடையே சில நிமிடங்களிலேயே பல்வேறு நாடுகளிலிருந்து நண்பர்கள், உறவினர்கள், உடன் பிறந்தோர், அறிவு ஜீவிகள், மார்க்க அறிஞர்கள் போன்றோர்களிடம் இருந்து செய்திகளைப் பெற மின்அஞ்சல் மிக இன்றியமையானதாக ஆகி விட்டது. ஆனால் அதேமின் அஞ்சலை தங்களது சொந்த விருப்பு, வெறுப்பினை தரம் தாழ்ந்து கொட்டித் தீர்ப்பது சரிதானா என்பதே என் கேள்வியே?

20.12.2011 அன்று மின் அஞ்சலை திறந்து ஒவ்வொன்றாக படித்துக் கொண்டு வந்தேன். அதில் புனித குரான் தமிழ் விளக்கம்,ஹதீசுகள், தவா நடவடிக்கைகள், நோயிற்றிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ உதவி, துவா கேட்டல், பல்வேறு மவுத்து செய்திகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கான விளம்பரங்கள், வெளி நாட்டில் வாழும் ஈமான்தார் ஆக்கப் பூர்வமான செயல்கள் போன்றன வந்திருந்தது கண்டு, ஆகா மின் அஞ்சல் எந்த விதத்தில் நமது சகோதரர்களை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது என்று எண்ணி மகிழ்ந்து இருக்கும் வேலையில், அனைவருக்கும் அனுப்பட்டஒரு மின்அஞ்சல் மட்டும் என்னை திடுக்கிடச் செய்தது. அது என்ன என்று நீங்கள் அறிய உங்களுக்கு ஆவல் இருப்பது நியாயமே!

Tuesday, September 27, 2011

இணைந்தது எங்கள் சமுதாயம் !

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கூத்தாநல்லூர் செல்வி மஹால்-ல் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாதார்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும், கூத்தாநல்லூர்-ஐ சேர்ந்த அனைத்து கட்சி மற்றும் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக A.A. அர்ஷத் அலி கிராத் ஓதி துவக்கி வைத்தார். செய்யத் நாசர் அவர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இவ்விழா-வை தலைமை ஏற்று தந்து சிறப்பித்தார்கள். கல்வி மற்றும் மருத்துவம் பற்றி TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் MBBS அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தலைமை ஏற்றி தந்து சிறப்பித்த JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு தக்பீர் ஹஜ் சர்வீஸ் நிறுவனர் Lion. N.S. சிராஜி தீன் அவர்கள் பொன்னாடை போற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க தலைவர் K.J. செய்யது யூசுப் தீன் அவர்கள் கொள்கை விளக்க உரை மற்றும் நன்றி உரை ஆற்றினார்.