நான்
ஒடுக்கப்பட்ட பெண்ணாக நீங்கள் என்னை நினைப்பதனை நான் அறிகின்றேன் அதற்கு
முக்கியமாக காரமாக நீங்கள் சொல்வது நான் உடுத்தும் ஆடை . ஹிஜாப் அணிந்து
செல்வது எந்த தவறுமில்லை மற்றும் இது நன்மையான பயனையே தரும்
ஆடை பாதி ஆள் பாதி என்பார்கள் , அதன் உண்மையான பொருள் சுத்தமான ஆடையணிந்து அசிங்கான ஆடை அணியாமல் இனக்கவர்ச்சியை தூண்டாமல்
இருப்பதேயாகும் . பெண்களுக்கே உள்ள தனித்த குணம் வெட்கம். .வெட்கம்
கெட்டால் வேதனை வந்து சேரும் . என்னுள்ளே இருக்கும் சிறப்பு
நாணமும்,அடக்கமும்,தான். மனதளவில் உள்ள உயர்ந்த எண்ணங்கள் தான்
பெண்மைக்கு பெருமை தருகின்றது . நான் ஒரு முஸ்லிம் நான் விருபிய ஆடையை
விரும்பி அணிந்தாலும் அதற்கு ஒரு வரைமுறை உண்டு .அதனை மிகவம் பெருமையாகவே
கருதுகின்றேன் .என் ஆடல் அழகை என் கணவர் கண்டு களிப்பதில் எந்த
தவறுமில்லை. நான் கவர்ச்சி தரும் ஆடைகளை அணிந்து மற்றவர்களின் மனதினை
கெடுத்து அதனால் விளையக்கூடிய தவறான செயல்களுக்கும் பாவமான் காரியங்களுக்கும் நான் ஒரு காரணமாக இருந்து விடக்கூடாது. இவ்விதம் நான் உடுத்தும் உடையால் என் உரிமை சிறிதும் பாதிக்கப்படவில்ல. மற்ற பெங்களிப் பெண்களை போலவே கல்வி கற்க பாடசாலைக்கு, கல்லூரிக்கு செல்வதற்கும் மற்றும் அலுவலகங்கள் செல்வதற்கும் இஸ்லாம் எந்த தடையுமில்லை
Tuesday, March 13, 2012
Sunday, March 11, 2012
பெயர் வைத்த காரணம்! பெயர் சொன்னதால் அடி வாங்கியது!
நாம் எத்தனையோ சரிதைகளும் ,சுயசரிதைகளும் படித்திருக்கின்றோம் .பண்டித ஜவகர்லால் நெஹ்ரு தன் மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதம் (Glimpses of World History) உலக வரலாறு(உலக சரித்திரக் கடிதங்கள்) .மகாத்மா காந்தியின் சுயசரிதை,பேரறிஞர் அண்ணா எழுதிய உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள், கலைஞர்
கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி மற்றும் கணக்கிலடங்காதவைகள் இருக்கின்றன
. நமக்குள் எத்தனை உயர்ந்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அதில்
நடந்தவைகளை மற்றவர்களிடம் சொல்லும்போது நமக்கு மன நிறைவு உண்டாகும் மற்றும்
அதனை மற்றவர்கள் படித்தும் பயனும் அடையலாம். ஒவ்வொருக்குள்ளும் ஓர்
சரித்திரம் புதைந்து கிடக்கின்றது. நாம் பெற்ற நல்ல அனுபவத்தினை
மற்றவர்களும் அறிந்து அவர்களும் பயன் அடைந்தால் உங்களுக்கும் நன்மை செய்த
பாக்கியம் கிடைக்கும் .
(நீங்கள் எனக்கு எழுதி அனுப்பினால் அதனை பிரசுரிக்க மிகவும் விரும்புகின்றேன், அது யார் மனதினையும் நோகச் செய்யாமலும் உண்மை நிகழ்வாகவும் இருக்க வேண்டும் . அதை எழுதியதின் பொறுப்பு உங்களைச் சார்ந்தது.)
பெயர் வைத்த காரணம்!
1941ஆண்டு ஏப்ரல் 12 மதராசில் முஸ்லிம் லீக் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னா கலந்து கொண்டார்கள். எனது தகப்பனார் நீடுர் .ஹாஜி .சி .ஈ அப்துல் காதர் சாகிப் அவர்கள் மாயவரத்திலிருந்து மதராசுக்கு தனி ரயில் வண்டி ரிசர்வ் செய்து மாயவர சுற்று வட்டார இஸ்லாமிய மக்களை அழைத்துச் சென்றார்கள்.மதராஸ் முஸ்லிம் லீக் மாநாடு நடந்த அன்று எனது அன்புத் தங்கை பிறந்ததால் அந்தப் பெயர் எனது அன்புத் தந்தையால் பாத்திமா ஜின்னா எனப் பெயர் வைத்தார்கள்.காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னாஅவர்களின் தந்கையின் பெயர் பாதிமாஜின்னா. அவர்களும் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டார்கள்.
காயிதே ஆஸம் முகமதலி ஜின்னா அவர்களின் மீது கொண்டிருந்த மட்டற்ற மதிப்பும் மரியாதையை நிலைப்படுத்த 1938ல் நான் பிறந்ததும் எனக்கு முஹமதலி ஜின்னா என்று பெயர் சூட்டினார்கள். எங்கள் ஊரிலேயே முதன் முதலாக "முஹமதலி ஜின்னா" என்று பெயர் சூட்டப்பட்டது எனக்குத்தான்.
அன்புடன் பாத்திமா ஜின்னாவின் சகோதரர் முகம்மது அலி ஜின்னா,நீடுர் .
-----------------------------------
பெயர் சொன்னதால் அடி வாங்கியது!
நான் நான்காவது படித்துக் கொண்டிருக்குபோது எங்கள் பள்ளிக்கு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அவர் வகுப்பறைக்கு வந்து ஒவ்வொரு மாணவனின் பெயரையும் கேட்டார் . என் பெயர் கேட்கும் போது "முகம்மது அலி ஜின்னா" என்று பதில் சொன்னவுடன் அந்த இன்ஸ்பெக்டர் என் கன்னத்தில் அறைந்து விட்டார். நான் நிலை குலைந்து போனேன்.அவர் அடித்த காரணம் யாருக்கும் புரியவில்லை.உடனே அச்செய்தி எனது தகப்பனாருக்கும் மற்றவருக்கும் தெரிந்து ஊர் மக்கள் கூடிவிட்டார்கள். தான் செய்த தவறை உணர்ந்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டார். அந்த காலம் சுதந்திரம் அடையாத காலம் நான் வேண்டுமென்றே எனது பெயரை தவறாக சொல்வதாக அவர் நினைத்து விட்டார் . எனது தந்தை மிகவும் செல்வாக்கு உள்ள, சேவை செய்யக் கூடிய நம் நாட்டுப் பற்றுடையவர் .
அப்போதைய முஸ்லிம் லீக் தலைவர்களுடம் மிகவும் பழக்கமுடையவர். காயிதே
மில்லத் இஸ்மாயில் சாஹிப் ,சுலைமான் சேட் போன்ற பெரியவர்கள் எங்கள்
வீட்டுக்கு வந்துள்ளதனை நான் சிறு பிள்ளையாக இருக்கும்போதே
பார்த்துள்ளேன்.எங்கள் வீடு மேல் மாடியில் நம் நாட்டு சுதந்திரக்
கோடி(முஸ்லிம் லீக் கொடியல்ல) சிமெண்டால் பதிவு செய்யப் பட்டிருக்கும்.
அது இன்றும் உள்ளது. எங்கள் தெருவின் பெயரும் ஜின்னாதெரு. அது எனது தந்தை
வைத்த பெயர் . எனக்கு முகம்மது அலி ஜின்னா என்றும் எனது தங்கைக்கு பாத்திமா
ஜின்னா என்றும் பெயர் வைத்து மகிழ்ந்தாகள் . ஆனால் நான் மட்டும்
6-வது படிக்க சேரும் பொழுது இன்ஸ்பெக்டரிடம் அடி வாங்கிய நினைவு வந்து
பயந்து ஜின்னாவை எடுத்து விட்டு முகம்மது அலி என்று மட்டும் வைத்துக்
கொண்டேன் . இது நானாக அந்த வயதில் அறியாமல் எடுத்த முடிவு . அதிலிருந்து
கல்லூரி வரை அப்பெயர் தொடர்ந்தது. எங்கள் ஊரில் ஜின்னா என்றால்தான்
அறிவார்கள் .கல்லூரியில் மற்றும் என்னை அறிந்த உடன் படித்த மாணவர்கள்
முகம்மது அலி என்றால்தான் அறிவார்கள். நான் லயோலா கல்லூரி படிக்கும்போது
என்னுடன் படித்தவர் தி, மு .க .பாராளு மன்ற உறுப்பினர் முகம்மது ஜின்னா .
இவர் வைத்திருக்கிறார் நான் ஏன் ஜின்னா என்ற பெயரை விடுத்தேன் என
மனதிற்குள் எண்ணி வருந்துவேன்,
இறைவன் நாடினால் தொடர்ந்து மறையாத நிகழ்வுகளை எழுதுகின்றேன்.
(நீங்கள் எனக்கு எழுதி அனுப்பினால் அதனை பிரசுரிக்க மிகவும் விரும்புகின்றேன், அது யார் மனதினையும் நோகச் செய்யாமலும் உண்மை நிகழ்வாகவும் இருக்க வேண்டும் . அதை எழுதியதின் பொறுப்பு உங்களைச் சார்ந்தது.)
1941ஆண்டு ஏப்ரல் 12 மதராசில் முஸ்லிம் லீக் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னா கலந்து கொண்டார்கள். எனது தகப்பனார் நீடுர் .ஹாஜி .சி .ஈ அப்துல் காதர் சாகிப் அவர்கள் மாயவரத்திலிருந்து மதராசுக்கு தனி ரயில் வண்டி ரிசர்வ் செய்து மாயவர சுற்று வட்டார இஸ்லாமிய மக்களை அழைத்துச் சென்றார்கள்.மதராஸ் முஸ்லிம் லீக் மாநாடு நடந்த அன்று எனது அன்புத் தங்கை பிறந்ததால் அந்தப் பெயர் எனது அன்புத் தந்தையால் பாத்திமா ஜின்னா எனப் பெயர் வைத்தார்கள்.காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னாஅவர்களின் தந்கையின் பெயர் பாதிமாஜின்னா. அவர்களும் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டார்கள்.
காயிதே ஆஸம் முகமதலி ஜின்னா அவர்களின் மீது கொண்டிருந்த மட்டற்ற மதிப்பும் மரியாதையை நிலைப்படுத்த 1938ல் நான் பிறந்ததும் எனக்கு முஹமதலி ஜின்னா என்று பெயர் சூட்டினார்கள். எங்கள் ஊரிலேயே முதன் முதலாக "முஹமதலி ஜின்னா" என்று பெயர் சூட்டப்பட்டது எனக்குத்தான்.
அன்புடன் பாத்திமா ஜின்னாவின் சகோதரர் முகம்மது அலி ஜின்னா,நீடுர் .
-----------------------------------
பெயர் சொன்னதால் அடி வாங்கியது!
நான் நான்காவது படித்துக் கொண்டிருக்குபோது எங்கள் பள்ளிக்கு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அவர் வகுப்பறைக்கு வந்து ஒவ்வொரு மாணவனின் பெயரையும் கேட்டார் . என் பெயர் கேட்கும் போது "முகம்மது அலி ஜின்னா" என்று பதில் சொன்னவுடன் அந்த இன்ஸ்பெக்டர் என் கன்னத்தில் அறைந்து விட்டார். நான் நிலை குலைந்து போனேன்.அவர் அடித்த காரணம் யாருக்கும் புரியவில்லை.உடனே அச்செய்தி எனது தகப்பனாருக்கும் மற்றவருக்கும் தெரிந்து ஊர் மக்கள் கூடிவிட்டார்கள். தான் செய்த தவறை உணர்ந்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டார். அந்த காலம் சுதந்திரம் அடையாத காலம் நான் வேண்டுமென்றே எனது பெயரை தவறாக சொல்வதாக அவர் நினைத்து விட்டார் . எனது தந்தை மிகவும் செல்வாக்கு உள்ள, சேவை செய்யக் கூடிய நம் நாட்டுப் பற்றுடையவர் .
இறைவன் நாடினால் தொடர்ந்து மறையாத நிகழ்வுகளை எழுதுகின்றேன்.
Friday, March 9, 2012
சகோதரி ஸாதிகா அவர்கள் கடந்து வந்த பாதை
எல்லாப்புகழும் இறைவனுக்கே
சகோதரி ஸாதிகா அவர்கள் கடந்து வந்த பாதை

தங்கை ஹுசைனம்மா அழைத்த தொடர் பதிவை ஏற்று இந்த பகிர்வு.
அறுசுவை தளத்தில் எழுதி வந்த எனக்கு பிளாக் பற்றி சமீபத்தில்தான் தெரிய வந்தது.தங்கை ஜலீலாதான் தனது பிளாக்கை பார்க்குமாறு லின்க் அனுப்பித்தந்தார்.பிற பிளாக்குகளை எப்படிப்பார்ப்பது என்றும் சொல்லித்தந்தார்.பிளாக்குகளைப்பார்வை இட்ட ஒரே நாளில் எனக்கும் பிளாக் தொடங்கும் ஆர்வம் ஏற்பட்டு விட்டது.பிளாக் உலகம் பற்றி 'அ' என்று கற்றுக்கொண்டு 'ஆ'என்று அடுத்து கற்றுக்கொள்ளும் முன்னரே அவசர,அவசரமாக பிளாக்கைத்தொடங்கி விட்டேன்.
தங்கை ஜலீலா கொடுத்த ஊக்கமும்,உதவியும்தான் என்னை தொடர்ந்து எழுத ஊக்குவித்தது.
பிளாக் உலகில் நுழைந்து பிறரது பிளாக்குகளை பார்த்தபொழுதுதான் எற்கனவே வேறு தளங்களில் பங்கேற்ற ஸ்நேகிதிகள் வலம் வந்ததை கண்ணுற்றேன்.
ஜலீலா,ஹுசைனம்மா,மலிக்கா,சுஸ்ரீ,விஜி,இலா,மேனகா,கீதா ஆச்சல்,ஹாஷினி,ஹைஷ் ,அம்மு,போன்றோர் பதிவுகளைப்பார்த்ததும் எனக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
இருந்தாலும் பிளாக் பற்றிய சந்தேகங்கள் நிறையவே உள்ளது.இன்னும் தெளிவு கிட்டவில்லை என்பதே உண்மை.கற்றது கை மண்ணளவு தான்.இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது.கற்றுக்கொள்ளும் ஆவலும் நிறையவே உள்ளது.பிளாக் பற்றி யாராவது கிளாஸ் எடுத்தால் அவசியம் தகவல் தாருங்கள். :-)
எனக்கு எழுத்து தாகம் இப்போது,நேற்று வந்ததல்ல.நான் பத்து வயது சிறுமியாக இருந்த பொழுதில் இருந்தே கதைகள் எழுதி,எழுதிய கதைகளை நானே திரும்ப,திரும்ப வாசித்து,மலை போல் குவிந்து போன பேப்பர் கற்றைகளை பெரிய பித்தளை டிரம்மில் போட்டு மொட்டை மாடியில் வைத்து கொளுத்திய அனுபவமும் உண்டு.அப்போதய என் கதைகளின் ஒரே வாசகி என் தங்கை.இப்பொழுதும் கூட "அநியாயத்திற்கு அத்தனை கதைகளையும் கொளுத்தி விட்டாயே "என்று இன்று வரை ஆதங்கப்படுவார்.
எனது எழுத்தார்வத்திற்கு நீரூற்றி,உரமிட்டு வளர்த்தவர் மரியாதைக்குறிய மறைந்த ஜமா அத்துல் உலமா பத்திரிகையின் ஆசிரியர் அல்லாமா.அபுல் ஹஸன் ஷாதலி சாஹிப் அவர்கள்.மாதாமாதம் அவரது பத்திரிக்கையில் எனது கட்டுரை வெளிவரச்செய்தார்.ஒரு மாதம் அனுப்பத்தவறினாலும் கடிதம் எழுதி கேட்டு விடுவார்.
இப்படியாக என் எழுத்துப்பயணம் ஆரம்பமாகி நர்கிஸ்,மலர்மதி,முஸ்லிம் முரசு,மங்கையர் மலர்,மங்கை போன்ற பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தேன்.இந்நேரத்தில் மலர் மதி ஆசிரியை என் அன்பு அக்கா அலிமா ஜவஹர் என்னை ஊக்குவித்து என் சிறுகதைகள்,தொடர்கதை போன்றவற்றை வெளியிட்டு எனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துத்தந்தார்.இதே போல் மங்கையர்மலர் ஆசிரியை மஞ்சுளா ரமேஷ் அவர்களும் என் படைப்புகளை வெளியிட்டு கடிதம் மூலம் என்னை ஊக்கப்படுத்தினார்.இந்நேரத்தில் என் கணவரும் என் எழுத்துக்கு நிறைய ஊக்கமும்,உதவியும் செய்தார்.
இந்த எழுத்தே என்னை ஈ.டி.ஏ குழுமத்தலைவர் அல்ஹாஜ்.பி.எஸ் அப்துர் ரஹ்மான் அவர்களின் குடும்பத்தினருக்கும்,எனக்குமான நட்பை ஏற்படுத்தியது.டாக்டர்.ரஹ்மதுன்னிஷா அப்துர்ரஹ்மான் அவர்களை ஒரு பத்திரிக்கைக்காக பேட்டி எடுத்து மூன்று பாகங்களாக வெளியிடச்செய்தேன்.
கீழை நகருக்கே மகுடம் சூட்டியது போல் அமைந்த கீழக்கரையில் பிரமாண்டமாக நடந்த மாபெரும்உலகத்தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் பெண்கள் மாநாட்டில் என்னை வரவேற்புரை நிகழ்த்த அழைத்தது வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய நிகழ்வு.அம் மாநாட்டிலும்,அம் மாநாட்டைத்தொடர்ந்தும் திருவை அப்துர் ரஹ்மான்,ஆளூர் ஜலால்,நர்கீஸ் அனீஸ்பாத்திமா ,ஹிமானாசெய்யத்,பானு முகைதீன்,ச்வுந்தரா கைலாசம்,கமருன்னிஷா அப்துல்லா,அஜீஜ்ஸுன் நிஷா,நஃபீஷாகாலீம்,கம்பம் அலி,கவிக்கோ அப்துர்ரஹான் ,கவிகாமு ஷரீப்,கே.ஜெய்புன்னிஷா ,பாத்திமுத்து சித்தீக் ,தமிழம்மா ,நாதிரா கமால் ,சுமையா போன்ற பற்பலஅறிஞர்களின் அறிமுகம் ,அவர்களுடன் அளவளாவும் இனிய தருணமும் கிடைத்தது.சிலரின் நட்பு இன்னுமும் தொடர்கின்றது. கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் வெல்ஃபேர் கமிட்டி உறுப்பினராக பங்கேற்கும் வாய்ப்பையும் தந்தது.
குழந்தைகள் பிறந்து எனக்கும்.எழுத்துலகிற்குமான பாலம் அறுபட்டுப்போனாலும்,பார்ப்பவர் எல்லாம் என்ன எழுதுவதே இல்லை என்று கேட்டாலும்,பார்க்கும் நேரமெல்லாம் டாக்டர் ரஹ்மதுன்னிஷா அப்துர்ரஹ்மான்,டாக்டர் கமலா ராகுல் போன்றோர் உட்பட என் நலம் விரும்பிகள் பலரும் "நம்ம சைட் எழுத்தாளரை மிஸ் பண்ணுகிறோமே?மறுபடி எப்ப ஸ்டார்ட் பண்ணப்போகின்றாய்"என்று கேட்கத்தவற மாட்டார்கள்.
இந்நேரத்தில்
சற்றேனும் நேரம் கிடைக்காவிட்டாலும்,எனக்காக தன் படிப்பை ஒத்தி வைத்து
விட்டு சற்று நேரம் அவ்வப்பொழுது வந்து உதவும் என் அருமை மகனாரையும்
நன்றியுடன் நினைத்துக்கொள்கின்றேன்.தமிழ் வாசிக்கத்தெரியாவிட்டாலும்
சிரத்தையாக டிராயிங்க் வரைந்து கொண்டே என் பிளாக்கை நான் வாசிக்க கேட்டு
கமண்ட் அடிப்பது எனக்கு கிடைத்திருக்கும் நோபல் பரிசு.
இப்பொழுது என் விரல்களில் பேனா நர்த்தனம் ஆடுவதை விட,கீ போர்டில் என் விரல்கள் நர்த்தனம் ஆடுவது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கின்றது.
by
ஸாதிகாஇப்பொழுது என் விரல்களில் பேனா நர்த்தனம் ஆடுவதை விட,கீ போர்டில் என் விரல்கள் நர்த்தனம் ஆடுவது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கின்றது.
சம்சாரத்தின் புலம்பலைவிட மின்சார புலம்பல் கடுமை!
இறைவன்
மின்சாரம் என்று அழைக்கப் படும் என்னை மின்னல் வழி உண்டாக்கினாலும்
மனிதனுக்கு அறிவைக் கொடுத்து பல மாற்றங்களுக்கு உள்ளானேன்.
ஃபர் துணியை அம்பர் மீது தேய்ப்பதைக் கொண்டு இரண்டுக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு நான் (மின்சாரம்) உண்டாவதாக பண்டைய கிரேக்கர்கள் கண்டுபிடித்ததாக என் (மின்சார) வரலாறு சொல்கின்றது .
பெஞ்சமின் பிராங்க்ளின் அவர்கள் எனது தந்தை என்றும் சொல்வார்கள்.
நான் உருவானதின் மாற்றங்களும் வினோதம்தான்.
ஆனால் நான் தமிழ்நாட்டில் படும் அவதியை யாரிடம் சொல்வது . நான் மலடியாம் , உரு முறையாக தங்காமல் கலைந்து விடுகின்றதாம் .நான் என்ன செய்வது !
என் கணவன் அரசு என்னை சரியாக கவணிப்பதில்லை.அவருக்கு பல வேலை. பாவம் அவர்! ஏழை, எளியமக்களின் நலனுக்காக பாடுபடும் என் அரசு,
அவரைக் பார்த்து மக்கள் கேட்டால் அவர் சொல்கின்றார் எனது முந்தைய கணவன் என்னை சரியாக பராமரிக்காமல் ஊட்டச் சத்தும் சரியாக கொடுக்கவில்லை என்கிறார் . என் நிலை இவ்வாறு இறுக்க மக்கள் ஏன் என்னை குறை சொல்கிறார்கள் . நான் ஒழுங்காக எனது பரம்பரையை உருவாக்க என் கணவன் முன்எச்சரிகையோடு நடந்திருந்தால் எனக்கு இந்த அவப்பெயர் வந்திருக்காதே. என்னை குறை சொல்வதை விடுத்து என் கணவன் அரசுக்கு அறிவுறை கொடுங்கள் .அது பயனுள்ளதாக இருக்கும்.அதுவரை எனது புலம்பலும் நிற்காது, நீங்கள் என் மீது கூறும் குற்றச் சாட்டுகளும் ஓயாது.
இனி நிலா, மின்னல் ஒளிகளை நம்பி வாழுங்கள். என் சக்களத்திகள் ஜெனரேட்டர்,காத்தாடி, கேஸ் ,மண்ணெண்ணை , விறகு ஒன்றையும் நம்பாதீர்கள் .
உங்களையே நம்பி ஒரு கைவிசிறி வாங்கி பயன் படுத்துங்கள்
பகலில் மின்சாரத்தை பேட்டி காண முடியாது .அவள் பகலில் வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்களுக்கு சேவை செய்யப் போயிருப்பாள். அங்கு என்னதான் கொட்டிக் கொடுக்கிறார்களோ! மாலை வருவரை காத்திருப்போம் என இருந்தேன். ஆறு மணிக்கு மின்சார மங்கை வந்தாள். பேட்டி ஆரம்பித்து முடிப்பதற்குள் அரை மணிக்கு ஒருதடவை ஓடி ஓடி ஒளிந்துக் கொள்கின்றாள்.அலுத்துப்போய் விட்டது. ஆளை விடு என அவளே போய் விட்டாள். நான் எங்கே எழுதுவது! அதனை எப்படி சரி பார்ப்பது என் பிழையை மற்றவர்கள் இருட்டில் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதோடு எழுதி முடித்து விட்டேன் .
வீட்டில் 'தோசை சுடு' பசிக்கிறது என்றேன். சம்சார புலம்பல் ஆரம்பமாகி விட்டது.'கேஸ் இல்லை மின்சாரம் வந்ததால்தான் சுட்டு தர முடியும்' வார்த்தையால் என்னச் என்னைச் சுட்டாள். 'அப்பொழுதே சொன்னேனே இன்வேன்ட்டர் வாங்கி வையுங்கள்' என்று புலம்பினாள் .நான் அரசு இனாமாக கொடுக்கும் என்று நினைத்தேன். 'இனாமிலேயே கிடைத்தாலும் அதற்கு சார்ஜ் ஏற்ற மின்சாரம் வேண்டுமே' என சமாளித்தேன். கொசு வேறு கடிகின்றது மொட்டைமாடிக்குப் போய் நிலாவின் ஒளியில் அமைதி காண்போம் என ஓடிவிட்டேன்

Tuesday, March 6, 2012
கானாவை கண்டு பிடித்தவர் யார்!
ஒளி கண்டேன் ஒலி கேட்டேன்
அலை கண்டேன் ஓசை கேட்டேன்
காதல் கொண்டேன் ஆசை கொண்டேன்
கனா கண்டேன் கண் விழித்தேன்
அங்கும் வெளிச்சம் இங்கும் வெளிச்சம்
கனா நின்று மறைந்தது நினைவு நிலையாய் நின்றது
கற்பனை ஊரும் களைந்து போகும்
கற்பனைக்கு நங்கூரம் இருப்பின் நிலைத்து நிற்கும்
மனோநிலை மாறி மாறி வரும் காலம் மாறுவதுபோல்
கனாவின் நிலையும் மாறி மாறி வரும் விழித்தால் களைந்து விடும்
கனா மகிழ்வையும் அச்சத்தையும் மாறி மாறி கொடுக்கும்
கனாவை நினைவாக்க முயல்வதற்கு முன் மறைந்து மறந்து போகும்.
மறந்துபோகும் கனவே மனிதனை பித்தம் பிடிக்காமல் பாதுகாக்கும்
நல்ல கனா ! கெட்ட கனா என உனக்குள் ஒரு பிரிவுண்டோ!
நடந்த நிகழ்வால் நீ கனாவாய் வந்தாயா!
நிகழப் போவதுற்கு முன் நினைவைத் தந்தாயோ !
ஆழ்மனதில் மனதில் அடங்கியிருந்து கனாவாய் காட்சி கொடுத்தாயோ!
நடக்கமுடியாததை கனாவாய் வந்து மகிழ வைத்தாயோ!
மறக்கும் கனாவாய் சில நிலைத்து நிற்கும் கனாவாய் சில வந்து விளையாடுவதேன்!
பயமுறுத்தும் கானவாகவும் மகிழ்விக்கும் கானவாகவும் வேடிக்கை காட்டும் விநோதத்தினை எங்கு கற்றாய்!

Monday, March 5, 2012
பாங்காக் – தமிழ் முஸ்லிம் அசோசியேசன்+ பாங்காக்கின் அனைத்து மசூதிகளின் விபரம்
பாங்காக் – தமிழ் முஸ்லிம் அசோசியேசன் மசூதி
BANGKOK MOSQUE – Tamil Muslim Association in Thailand
பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் சங்கம்
பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க வரலாற்றுச் சுருக்கம்:
ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாட்டைத் துறந்து, உழைத்துப் பொருளீட்டும் உயர்வான எண்ணத்தில் நூற்றுக்கும் சற்று குறைவான தமிழ் பேசும் முஸ்லிம் சகோதரர்கள் அமைதி தவழும் சியாம் என்றழைக்கப்படும் தாய்லாந்தின் தலைநகரமாம் பேங்காக்கில் தொழில் செய்து வந்தார்கள்.அதுசமயம், நமது இளைநர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ள, கருத்துபரிமாறிக் கொள்ள இனிய மாலைப்பொழுதுகளை இன்புற கழிக்க ஒரு பொது இடமின்றி தவித்தனர். பெரும்பாலான சமயங்களில் ஹோட்டல் லாபிகளில் அமர்ந்து நாட்டு நடப்புகள்,தொழில் விஷயங்களை பேசிக்கொள்வார்கள்.
நாட்டுக்கு நாடு உண்ணும் உணவில் மாற்றம் !
காலை உணவின் முக்கியத்துவம் அறியாமல் இருப்பது ஏன்?
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி ...
இறைவன் தந்த அந்த அருட்கொடையான உணவை நாம் அவசர கோலத்தில் சாப்பிடுகின்றோம் . பல இறக்குமதிகளில் 'பாஸ்ட் புட்' ஒன்றாக சேர்ந்துக் கொண்டது. நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழ்வார் என்பது ஆன்றோர் மொழி . மென்று தின்றால் தேவையான உமிழ்நீர் உண்டாகி நமது உணவை நன்கு செரிக்கச் செய்கின்றது. நாமும் உணவு சாப்பிடும் போது இது இறைவனால் கொடுக்கப்பட்டது என அவனுக்கு நன்றி செலுத்தி மெதுவாக ரசித்து உண்ணும்பொழுது உடல் ஆரோக்கியம் கிட்டும் . இயற்கையின் இனிமை கண்டு ரசிப்பதும் அதனை ஆராய்ச்சி செய்வதும் நம்மை இறைவனது ஆற்றல் அறிய வழி வகுக்கின்றது. நாம் உண்ணும் உணவினை அனுபவித்து ரசித்து உண்பதில் நமது உடலுக்கு ஆரோகியதினை தருவது மட்டுமில்லாமல் நிச்சயமாக இறைவனது 'அல்லாஹ்வின்' (சிலர் இயற்கை என்று சொல்வார்கள்) ஆற்றல் அதில் அடங்கி இருப்பதனை அறிய வருகின்றோம். உண்ணும் உணவு எங்கிருந்து வந்தது என்பதனை என்றாவது சிந்தனை செய்து பார்த்தீர்களா! சோறு அரிசியிலிருந்து வந்தது .அரிசி நெல்லிருந்து வந்தது ... தொடருங்கள் ..உங்கள் சிந்தனையை . இறுதியில் உங்கள் முடிவு இறைவனது மாட்சிமை உங்கள் மனதில் அறிய வரும்.
சராசரி உடல் ஆரோக்கியத்திற்கு மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு அவசியமாகின்றது அது தேவையான உணவு எடுத்துக்கொள்ளும்போதுதான் வயதும் வாழ்கையும் முறைப்படும் .சிலர் வாழ்வதற்காக உணவு சாப்பிடுவார் .சிலர் சாப்பிடுவதற்காகவே வாழ்வர் . நாம் நல்வாழ்வு பெற ஆரோக்கியமான முறையான உணவு சாப்பிடுவதனை முறைப் படுத்திக் கொள்வோம் .
பெரும்பாலானவர்களுக்கு அலுவலக வேலைகளால் வீடுகளில் அல்லது ஹோட்டல்களில் கூட காலை டிபன் சாப்பிடுவதற்கு நேரமே இருக்காது. காலையில் எழும்போதே டென்சன், குளித்து முடித்து அலுவலகம் கிளம்புகையில் என்கேயாவது ஒரு காப்பி அல்லது சேண்ட்விச் அல்லது பிஸ்கட்டுடன் காப்பி அருந்தி விட்டு ஓடும் நிலை .பலரிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களில் காலை உணவைத் தவிர்ப்பதும் ஒன்றாகும். இதனை வெளிநாட்டிலும் பார்க்கலாம் . விடுமுறை நாட்களில் மட்டும் விரும்பிய காலை டிபன் (உணவை ) சாப்பிட வாய்ப்பு கிடைக்கும் .
Subscribe to:
Posts (Atom)