Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Thursday, February 20, 2014

கண்டுபிடிப்பு:-


படித்தவனெல்லாம் புத்திசாலி என்றால் !
வாருங்கள் !
உணவு உற்பத்தி செய்ய !
எத்துனை தொழில் வந்தாலும் ,
மூன்று வேலை சோறு வேண்டும்.!
இல்லன்னா கண்டுபிடிப்புகளெல்லாம் ,
கண்டுபிடிக்கவேண்டும் !

Saturday, January 12, 2013

வேண்டாதவர் இருந்தால் விவசாயம் செய்ய இடம் கொடு!

விவசாயம் செய்ய அப்பா விட்டுப் போன நிலமிருக்கு
விவசாயம் செய்ய ஆசையிருக்கு
விவசாயம் செய்ய பணமிருக்கு
விவசாயத்திற்கு வேண்டிய விதையிருக்கு

விவசாயம் செய்தால் நீர் வேண்டும்
விவசாயம் செய்து கிடைத்த நெற்களை விற்க வேண்டும்
விவசாயம் செய்தால் வேலிதான் மிஞ்சுமாம்
விவசாயம் செய்வதை விட்டு மனையாக்கி விற்றால் பணம் கிடைக்குமாம்

வேண்டாதவர் இருந்தால் விவசாயம் செய்ய இடம் கொடு
வேண்டாதவர் விவசாயம் செய்து பணத்தை விடுவார்
வேதனையடைந்து மனம் நோவார்
வேதனை வேண்டாம் அரசைக் கேள் பணம் தருவார் எனத் தப்பித்துவிடு

விவசாயம் செய்ய விட்ட நிலத்தை வாங்க நீதிமன்றம் அலைய வேண்டும்
விவசாயம் செய்ய விட்ட நிலத்தை விலை கொடுத்து நாம் வாங்க வேண்டும்
விவசாயமும் வேண்டாம் வேண்டாத தொல்லையும் வேண்டாம்
விவசாய நிலத்தை பல மனையாக்கி விற்று பணம் சேர்ப்போம்

Sunday, December 5, 2010

விவசாயம்..


வளர்ந்துவிட்டக்
கணிணி உலகத்தில்;
சாயம் போகும்
விவசாயம்!

ஒடிந்துப்போன
முதுகெலும்பால்;
படுத்தப்படுக்கையாய்
வயல்கள்!

பெருகிவரும் ஆசையால்
சுருங்கிவரும் நிலங்கள்;
அடிக்கல்லை வைத்து
அடிக்கணக்கில் விலைப்பேசி;
மடிநிறையப் பணம் கட்டும்
புது வியாபாரம்!

வாய்க்காலுக்கு
வாய் பார்த்து;
நதி நீருக்கு
விதி நொந்து;
அறுவடைச் செய்தாலும்
அடிமாட்டு விலைக்கு!

வளர்ந்து வரும் வேகத்தில்;
பள்ளிப் பாடத்தில்
மட்டும் வரும்
பின்னொருக்காலத்தில்;
விவசாயம் என்றத் தொழில்...
-யாசர் அரஃபாத்
Source : http://itzyasa.blogspot.com/2010/12/blog-post_3930.html