கவிஞர் ஃபஹீமா ஜஹானும், நானும் இணைந்து மொழிபெயர்த்த கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் 'தலைப்பற்ற தாய்நிலம்' எனும் சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல், இவ் வருடத்தின் முதலாவது தொகுப்பாக தற்பொழுது வெளிவந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.
எழுநா, நிகரி பதிப்பகங்களின் இணைந்த வெளியீடாக வெளிவந்திருக்கும் இத் தொகுப்பின் நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் மாதங்களில் கீழுள்ள நாடுகளில் நடைபெற உள்ளது.
ஏப்ரல், 2013 - லண்டன், நோர்வே
மே, 2013 - கனடா, ஸ்விட்ஸர்லாந்து
இலங்கை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் வசிப்பவர்கள் கீழுள்ள முகவரியில் தொடர்பு கொள்வதன் மூலம், இத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.
Discovery Book Palace (P)Ltd
No.6, Magavir Comlex, 1st Floor
Munusamy Salai, K K Nagar West
Chennai – 600078
Tamil Nadu, India.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts
Tuesday, February 19, 2013
Tuesday, November 13, 2012
குர் ஆனை புரிந்து கொள்ள மொழிபெயர்ப்புகள் போதாது!
குர் ஆனை புரிந்து கொள்ள மொழிபெயர்ப்புகள் போதாது!
திருக் குர் ஆனை நாம் ஆழமாக புரிந்து கொள்ள – அதன் மொழிபெயர்ப்புகள் போதாது என்பது ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும்.
ஒரு எடுத்துக் காட்டு:
வ ஆஷிரூஹுன்ன பில் ம’-ரூஃப்! – இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே.
இதற்கு எப்படி மொழிபெயர்க்கப் படுகிறது என்று பார்ப்போமா?
“இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் – இது தமிழில் குர் ஆன் வலை தளத்தின் மொழிபெயர்ப்பு. ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பும் இதுவே.
“மேலும் அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள்” – இது சவூதி அரசால் வெளியிடப்பட்டுள்ள சங்கைமிக்க குர் ஆன் மொழிபெயர்ப்பில் இருந்து.
“அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்.” – இது IFT – யின் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து.
“மேலும் அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள்” – இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பு.
ஆனால் அரபி மூலத்தில் உள்ள இரண்டு சொற்களையும் நாம் சற்று ஆழமாக இங்கே பார்ப்போம்.
ஒன்று: ஆஷிர் (அய்ன் – ஷீன் – ரா)
இம்மூலச் சொல்லிலிருந்து பிரிகின்ற பல சொற்களுடன் திருமறை வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
முதலில் ஆங்கில அகராதி மொழிபெயர்ப்பை எடுத்துக் கொள்வோம்.
‘Ashara – to divide into tenths; to be on intimate terms, associate (closely with someone). associate with one another
‘Ishrah – (intimate) association, intimacy, companionship, relations, (social) intercourse. company. conjugal community, community of husband and wife
‘Ishaar – with young, pregnant(animal)
‘Asheer – companion, fellow, associate, friend, comrade
‘Asheerah – clan, kinsfolk, closest relatives, tribe
அகராதியில் காணப்படும் அனைத்து பொருள்களையும் நாம் உற்று நோக்கினால் – ஆஷிர் என்ற சொல்லின் பொருள் – நெருக்கம், நெருங்கியிருப்பவை, நெருங்கிய தோழமை ஆகியவற்றைச் சுற்றியே இருக்கின்றன என்றே புரிகிறது. இது ஏன் மொழிபெயர்ப்ப்புகளில் பிரதிபலித்திடவில்லை என்பதே எம் கேள்வி.

Saturday, May 5, 2012
இஸ்லாமியக் கவிதைகளுக்கும் பொய்தான் அழகு! இல்லை என்று யார் சொன்னது?
அதிரை
நிருபர் என்கிற வலைத்தளத்தில் அதிரை சித்திக் அவர்கள் ”கவிதைக்கு பொய் அழகு
என சில கவிஞர்கள் இன்றும் சொல்ல கேட்கிறோம்” என்று கூறி இருந்தார்.
அவருக்கு மறுமொழியாக நான் இப்படி எழுதினேன்:கவிதைக்குப் பொய்யழகு என்பதில் யாதொரு தவறும் இல்லை. நாம் புரிந்துகொள்வதில்தான் தவறிருக்கிறது. பொய் என்று சொல்வது இங்கே கற்பனை வளம் ஏற்றுவதை, அழகு ஊட்டுவதை, இசை கூட்டுவதை. உதாரணம்: ஒரு பெண் குழந்தை என்பது உண்மை. அந்த உண்மைக்கு, பட்டுடுத்தி, பவுடர் இட்டு, கண்ணுக்கு மையிட்டு, சடை பிண்ணி, பூமுடித்து என்ற அத்தனைப் பொய்களையும் செய்து பார்ப்பது தவறல்ல, அழ்கு பெண்ணுக்கு அழகு.
அதுபோலத்தான் கவிதைக்கும் அழகு தேவை. ஒரு கவிதை பொய்யை நடுவில் வைத்து உண்மையைச் சுற்றிக் கட்டி ஏமாற்றுகிறதா அல்லது உண்மையை நடுவில் வைத்து கற்பனை, சொல்லழகு, இசை போன்று பொய்களைச் சுற்றிக்கட்டி நயமாக்குகிறதா என்பதே முக்கியம்.
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
என்ற கவிஞர் வைரமுத்துவின் கவிதையைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். கண்ணுக்கு மை என்ற பொய் எப்படி அழகோ அப்படித்தான், கவிதைக்குக் கற்பனை என்ற பொய் அழகு. ஆகவே, கவிதைக்குப் பொய் அழகே தவிர கவிதை என்பது மெய்யால் செய்யப்பட்டால் மாத்திரமே அது கவிதை. கவியெனும் மெய்யில் இழைக்கப்படும் அழகு கற்பனைப் பொய்களே கவிதையைக் காலத்தால் அழியாததாய் ஆக்குகின்றன. உரைநடைக்கும் கவிதைக்குமான வித்தியாசம் அதுதானே?
Subscribe to:
Posts (Atom)