வாழ்க்கையில் தோல்விகளையும் வேதனைகளையும் அவமானங்களையும் மட்டுமே கண்டு, எதைச் செய்தாலும் கை கூடா நிலை, யாரிடம் சென்றாலும் நம்பாத நிலை, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் கை தாங்காத நிலை,
கணவன் மனைவி உறவு, பிள்ளைகள் உறவு, உறவுக்காரர்கள் உறவு, நன்பர்கள் உறவு, மேல்அதிகாரி உறவு மற்றும் உறவுகள் முறிவு.
மனைவி மக்கள் எதிர்கால பயம், அவர்களின் படிப்பு தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு கண்டு பயம். நாங்கள் என்னச் செய்வது என்று.
இப்படி நிறைய விஷயமாக என்னிடம் கேட்கிறார்கள் நான் அவர்களுக்கு சொல்வதெல்லாம்.
நீங்கள் உங்களின் சக்திகளை இழந்தும் தெரியாமலும் இருக்கிறீர்கள். அப்படியென்றால் என்ன ?.
நீங்கள் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றி பெற வேண்டுமென்றால் உங்களில் உள்ள மூன்று சக்திகளை சரியாக இயங்க வேண்டும்.
அதாவது உங்கள் உடல் சார்ந்த சக்தி இது நீங்கள் சரியான உணவுகளை சாப்பிடுவதில் மூலம் பெறலாம். இரண்டாவது உங்கள் ஆரா சக்தி அதாவது உங்கள் சூட்சும சக்திகள் அதை உங்களின் தூக்கம் நல்ல எண்ணங்கள் தியானம் மூலம் பெறலாம். மூன்றாவது இறை சக்தி அதாவது நீங்கள் இறைவணக்கம் திக்ரு தியானம் குர்ஆன் ஓதுவது மூலம் பெறலாம்.
சரி விஷயத்துக்கு வருகிறேன் நீங்கள் மற்றய இரு சக்திகளை விட குர்ஆன் ஓதுவது மூலம் சக்திகளை பெற்று நீங்கள் இழந்த அனைத்தையும் பெறலாம்.
உதாரணமாக கீழே உள்ள ஸுராவை தினமும் காலையிலும் மாலையிலும் ஓதி வாருங்கள் தற்போதுள்ள வாழ்க்கை மாறி உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَلَمْ نَشْرَحْ لَـكَ صَدْرَكَۙ
(நபியே!) நாம் உம்முடைய இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா?
وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ
மேலும், உம்முடைய சுமையை உம்மைவிட்டு நாம் இறக்கிவைத்தோம்.
الَّذِىْۤ اَنْقَضَ ظَهْرَكَۙ
(அது) உம்முடைய முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَ
மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம்.
فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ
உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.
اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
திண்ணமாக, சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது.
فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ
எனவே, நீர் ஓய்வு பெறும்போது வணக்க வழிபாட்டின் கடும் உழைப்பில் முனைப்புடன் ஈடுபடுவீராக!
وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ
மேலும், உம் இறைவனின் பக்கமே ஆர்வம் கொள்வீராக!
(அல்குர்ஆன் : 94:1,2,3,4,5,6,7,8)
மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்
திருநெல்வேலி
No comments:
Post a Comment