அரசியல் என்பது இன்றைய
கால கட்டத்தில் சாதுரியமா
அல்லது சாணக்கியமா!
கொள்கைக்காக கூட்டணியா
இல்லை..
கூட்டணிக்காகவே
கொள்கை மாற்றமா!
மக்களோடு கூட்டணியா
இல்லை..
தலைவர்களோடு கூட்டணியா!
சதவீத அரசியல் களத்தில்
சமத்துவம் சகோதரத்துவம்
எல்லாம் வெற்றி பெறுமா!
அரசியல் வெற்றிகளில்...
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
என்றால் அது கூட்டணி வெற்றியா
இல்லை கொள்கை வெற்றியா!
வேறு கட்சியின் சின்னமே,
தன் வெற்றியின் சின்னம் என்றால்
தனி கட்சி எதற்கு கொள்கை எதற்கு!
மாநில கட்சிகள் இரண்டு போதும்
உதிரிக் கட்சிகள் எல்லாம் ஏதோ
ஒன்றில் தங்களை இணைத்து
கொள்ளலாம்.பெரிய கட்சிகளின்
சின்னத்தை குறிப்பிட்டே வாக்கு
சேகரிக்கலாம்,வெற்றி வாகை
சூடலாம்.மக்கள் பணி ஆற்றலாம்.
வேட்பாளர் பெயரை குறிப்பிடாமல்
சின்னத்தின் பெயரைச் சொல்லியே
வாக்கும் கேட்கலாம்.எழுத படிக்க
தெரியாத சாமானிய மக்கள்
சின்னத்தை பார்த்து ஓட்டு போட
வசதியாக இருக்கும்.தேர்தல் திரு
விழாவில் படம் பார்த்து வாக்களிக்க
வசதியாக இருக்கும்.
அட போடுங்கையா ஓட்டு....!
No comments:
Post a Comment