Saturday, May 21, 2016

கடன் ....!


கடனில்லாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்பதே நமது தாய் தந்தையாரின் கனவாக இருந்தது. கடன் பட்டோர் இடர் பட்டோராகவே கருதப்பட்டனர்.
கடன் அன்பை வளர்க்காது அது வட்டியைத் தான் வளர்க்கும். வட்டி ஒரு பக்கம் வறுமையை பரவலாக பலரிடம் விதைக்கும். மறுபக்கம் 'செல்வதை' குறுகலாக சிலரிடம் குவிக்கும். சமூகத்தில் சமசீரற்ற பொருளாதார நிலையை உருவாக்கும். இதனாலேயே அமைதி மார்க்கம் இசுலாம் வட்டியை தடைசெய்துள்ளது.
எம் கடன் பணிசெய்து கிடப்பதே என்று சான்றோர் சொல்வர். ஆனால் இப்போது அரசாங்கமே முன்னின்று 'கடன் மேலா' 'கடன் திருவிழா' போன்றவற்றை நடத்தி மக்களை கடனில் மூழ்கடிக்கும் பணியை செவ்வனே செய்கிறது.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் வசதிகள் மேல்தட்டு நடுத்தர வர்கத்தினரை காலாகாலத்திற்கும் அடிமை போலாக்கி வைத்துக் கொள்கின்றன.
கடன் கொடுக்காமலும் வாங்காமலும் உலகத்தில் வாழ முடியாத வகையில் நுகர்வோர் மனதையும் தேவையையும் வழிநடத்தும் வகையில் உலக பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டு ஒரு சில 'பன்னாட்டு' நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
வரவிற்கேற்ற செலவும் செய்ய வேண்டிய செலவிற்கு உழைத்து சம்பாதித்தாலும் அவசியம்.
கடனில்லாப் பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல இறையோன் நம் யாவருக்கும் அருள்வானாக. ஆமீன்.

ராஜா வாவுபிள்ளை


No comments: