அது,வேறொன்றுமில்லை…!
தொடக்கமென்பது
வேறொன்றுமில்லை;
மூல ரகசிய
முதல் வெளிப்பாடு.
பிறப்பென்பது
வேறொன்றுமில்லை;
ஆண்டவன் நாடிய
ஆன்மாவின் வருகை.
வளர்ப்பென்பது
வேறொன்றுமில்லை;
எச்சம் எப்படி
இருக்க வேண்டுமெனப்
பெற்றோர் கொள்ளும்
பேரவா.
வாழ்வென்பது
வேறொன்றுமில்லை;
அனுபவப் பள்ளியில்
உணர்ந்திடும் பாடமே .
சரித்திரம் என்பது
வேறொன்றுமில்லை;
வேதனை,சாதனை என
விரியும் தொகுப்பு.
இறப்பென்பது
வேறொன்றுமில்லை;
வெளிப்படும் முன்னே
இருந்த இடத்துக்கு
விடைபெற்றுக் கொள்வது.
முடிவென்பது
வேறொன்றுமில்லை;
சூட்சுமம் மீண்டும்
சூனியமாகி
சொர்க்கமோ நரகமோ
சொந்தம்கொள்வது.
No comments:
Post a Comment