எண்ணம் ....!
எண்ணங்கள் இரண்டு வகைப்படும்:
1) நேர்மறை எண்ணம்.
2) எதிர்மறை எண்ணம்.
நேர்மறை எண்ணங்கள் சிந்தனையில் ஊடுருவிச் செல்லும்போது அழகிய முறையில் செயல்களை நேர்படுத்தி செம்மையாக உருவெடுக்கச் செய்கிறது. மலர்ந்த முகத்துடன் ஒவ்வொரு நாளும் சகமனிதனை நேர்கொள்ளச் செய்கிறது. நல்ல நட்புகள் தானாகவந்து சேர்ந்திருக்க வழிகோலுகிறது. நல்ல அணுகுமுறைகளை காட்டித்தருகிறது. சார்ந்தோரையும் சுற்றத்தாரையும் கூட நேர்முறையில் சேர்ந்து செல்ல அனுகூலமான சுற்றுச்சூழலை உருவாகித் தருகிறது. தொடர்ந்து நேர்வழியில் செல்லும்போது வெற்றியை நோக்கி செல்ல வழிவகுக்கிறது.
நேர்மறை எண்ணங்கள் எப்போதும் மனதை மகிழ்வாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. மகிழ்வான மனம் ஆரோக்யத்தை உடலில் தக்கவைத்து செய்யும் காரியங்களைத் துலங்கச் செய்கிறது.
எதிர்மறை எண்ணங்கள் சிந்தனையில் வருவது இயற்கையானதே. அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுதல் நலம். எதிர்மறை எண்ணங்களை சிந்தையில் நிறுத்தி வைக்கும்போது அதில் நம்மை மூழ்கடித்து விடுவது மட்டுமல்லாது அழிவுப் பாதையின் விளிம்பான தோல்விக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.
எதிர்மறை எண்ணங்கள் மனமகிழ்வைக் கெடுத்துவிடுவது மட்டுமல்லாது செயல்பாட்டு சக்தியையும் சீர்குலைத்து முன்னேற்றத்தைத் தடைபோட்டுத் தடுத்துவிடுகிறது. கோபம், வஞ்சகம், ஏமாற்றுதல் போன்ற தீயசெயல்களுக்கு வழிகாட்டியாக இருப்பதுடன் எப்போதும் சிடுசிடுப்பை முகத்தில் காட்டி யாரையும் அருகில் வராமல் துரத்திவிடுகிறது.
எண்ணங்களே இல்லாமல் ஆரோக்யமான மனதுடனும் உடலுடனும் மனிதனின் வாழ்க்கை அமையாது.
நல்லெண்ணங்களை வளர்ப்போம் மனிதநேயம் காப்போம் இறையருள் பெறுவோம் இன்புற்று வாழ்வோம் வளமாகவே.
எண்ண ஓட்டம் ....!
தொடரலாம்.

No comments:
Post a Comment