நறுக்கென்று கதைக்க தெரியும். ஆனாலும் சுமாராகத்தான் சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதா நேற்று சொன்ன கதைக்கு கருணாநிதி இன்று சொன்ன பதில் கதை:
எந்த தந்தையும் தன் மகன் கீழே விழுந்து அடிபடுவதை விரும்ப மாட்டார். பிள்ளை பெற்றவர்களுக்கு அது தெரியும்
ஜெயலலிதா தனது கதையை சற்று மாற்றி கூறியிருக்க வேண்டும். ஊரிலே உள்ள பிள்ளைகளுக்கெல்லாம் அரசியல் பாடம் கற்றுக் கொடுத்த தந்தை, தன் மகனுக்கு மட்டும் கற்றுக் கொடுக்காமலா இருந்து விடுவார்?
அரசியலில் கீழே இருந்து கடுமையாக உழைத்து, படிப்படியாக மேலே வந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். அடித்த காற்றில் மேலே வந்து கோபுரத்தில் ஒட்டிக் கொண்டவர்களுக்கு கதையை திரித்து சொல்லத்தான் தெரியும்.
உண்மையில் கதை என்ன தெரியுமா?
தந்தையும், மகனும் பாசத்தோடு இருப்பதையும், அரசியலை முறையாக நடத்துவதையும் கவனித்த எதிர் வீட்டு பெருமாட்டிக்கு பொறாமை. அந்த அம்மையாருக்கு பிள்ளையும் கிடையாது, குட்டியும் கிடையாது. ஆனால் குடும்பமே இல்லை என்று சொல்லிக் கொண்டே ஊரிலே உள்ள சொத்துக்களை எல்லாம் தனக்கு சொந்தமாக்கிக் கொள்வார்.
நாடு ஆறு மாதம், காடு ஆறு மாதம் என்பதை போல மாளிகையிலும் அரண்மனையிலும் ஓய்வெடுத்துக் கொண்டு காலம் தள்ளுபவருக்கு எதிர் வீட்டில் தந்தையும், மகனும் பாசத்தோடு இருப்பது பொறுக்குமா? எப்போது தந்தை மகன் தகராறு வரும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று காத்திருக்கிறார்.
மகன் கேட்டபடி தான் கற்ற அரசியல் நுணுக்கங்களை யெல்லாம் கற்றுக் கொடுத்த தந்தை, “நீ ஏணியில் ஏறும்போது, தள்ளி விட சிலர் முயற்சி செய்வார்கள். எனவே கவனமாக பார்த்து ஏறு” என்றும் சொல்லி கொடுக்கிறார்.
மகன் விழுந்து விடுவான் என்று காத்திருந்த எதிர் வீட்டு சீமாட்டி அவன் படிப்படியாக ஏறி வருவதையும், அதை கண்டு மகிழும் தந்தையையும் பார்த்து ஏமாற்றத்தை தழுவுகிறார். இதுதான் உண்மைக் கதை.
Kathir Vel
No comments:
Post a Comment