அபுதாபி பட்டத்து இளவரசரின் இந்திய வருகை குறித்து பிரதமர் வெளியிட்ட டுவிட்டர் செய்தி தான் இது.
ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தொகை இப்போது 25 லட்சத்தையும் தாண்டி விட்டது.ஹிந்துக்கள் 50 சதவீதமும், கிருத்தவர்களும் - முஸ்லிம்களும் முறையே 25 சதவீதமும் அங்கு பணி புரிகிறார்கள். அமெரிக்காவில் வாழும் ஹிந்துக்களை விட அதிக அளவில் ஹிந்துக்கள் இங்கு வாழ்கிறார்கள். ஹிந்துக்களுக்கான கோவில்கள் கட்டு வதற்கு அரசே இலவசமாக நிலம் வழங்குகிறது. அது போலவே, சீக்கிய குருத்வாராக்களும், கிருத்துவ சர்ச்சுகளும் இங்கு இப்போது அதிக அளவில் உள்ளன. மத துவேஷம் இல் லை, நிற, இன பாகுபாடுகள் இங்கு அறவே இல்லை. பெரிய பதவிகளில் ஹிந்துக்களே அதிக அளவில் உள்ளனர்.
அதனான் சில்வான் தான் - துபை இஸ்லாமிக் பேங்கின் CEO. கமால் பாரி தான் - ஸ்கை லைன் யூனிவர்சிடி தலைவர். 150 க்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள், ஜெபல் அலியில் மட்டும் செயல்படுகின்றன.இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இந்தியாவை விட இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை இங்கு மிகவும் அதிகம். 33,000 இந்திய கோடீஸ்வரர்கள், இங்கு வாழ்கிறார்கள். மெர்ரில் லிஞ்ச் ரிப்போர்ட் படி, இந்தியர் கள் அனுப்பும் பணம் மட்டும் வருடத்திற்கு ஏழு பில்லியன் யு.எஸ். டாலரை தாண்டும்.
லேண்ட் மார்க் குரூப், ஜம்போ எலக்டரானிக் வர்கீ குரூப், அலுக்காஸ், நியூ மெடிக்கல் சென்டர், இஎம்கே குரூப், ரவிபிள்ளை குரூப், யேகேஸ் மேத்தா, தீபக் பாபானி, சந்தோஷ் அல்மாயா குரூப், லூலு, இடிஎ, கல்ப் மெடிகல் யூனிவர்சிடி எல்லாம் அமீரகத்தில் இந்தியர்கள் நடத்தும் பெரும் தொழில் நிறுவனங்களே...
இந்தியர்களுக்கான அனைத்து வகை உணவு விடுதிகளும், இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பள்ளிக் கூடங்களும் அதிக அளவில் உள்ளன. சாதி, மத, இன, மொழி பாகுபாடுகள் எதுவும் இங்கு இல்லை. பெண்கள், மதம் மற்றும அரசியல் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு மட்டிலும் இங்கு தடை உண்டு. அவரவர் மதம் அவரவர்களுக்கு மேன்மையானது என்ற கருத்து இந்த இஸ்லாமிய நாட்டில் இன்றும் போற்றி பாதுகாக்கப்படுகிறது.
உலகில் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழும் அமீரகத்தின் இருப்பு நிதி மட்டும் - 800 பில்லியன் யு.எஸ் டாலரை மிஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை வல்லரசாக மாற்றும் பணியில் அமீ ரகமும், இந்தியாவுடன் கைகோர்க்கும் என்று தெரிகிறது.
அணுசக்தி, பெட்ரோலியம், ரெயில்வே எண்ணை, எரிவாய்வு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அதிக அளவில் முதலீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருந்தாலும் மாற்றுமதத்தினரை மதிக்கும் நாடுகளாகவே இன்றும் திகழ்கின்றன. அவர்களின் உரிமைகளில் எப்போதும் தலையிடுவது இல்லை. தனிமனித பாதுகாப்புக்கு அந்த நாடுகள் உத்தரவாதம் தருகின்றன. ஒரு முஸ்லிம் என்பதால் எந்த சலுகையும் வழங்குவதில்லை. இந்துவாயினும், முஸ்லிமாயினும், கிருத்துவராயினும் அவர் இந்தியாவை சார்ந்தவர் என்றால் இந்தியர் (அல் ஹிந்த்) என்றே அழைக்கப்படுகிறார். முஸ்லிம் நாடுகள் கூட, முஸ்லிம் என்றாலும் இந்தியன் என்றே அழைக்கின்றன. ஆவணங்களிலும், இந்தியன் என்றே குறிப்பிடுகின்றன. அனைத்து மதத்தினரையும் சமமாக பாவித்து அரவணைத்து செல்லும் பண்பாடு அந்த நாட்டுக்கே உரித்தான மேன்மைக் குணம் என்று சொன்னால் அது மிகை அல்ல.
No comments:
Post a Comment