Friday, February 5, 2016

தாயின் முகம் பார்க்கப் பிடிக்கும்

தாயின் முகம் பார்க்கப் பிடிக்கும்

அவள் பொழியும் பாசம் பிடிக்கும்

மனைவியின் கண்களை நேராக பார்த்துப்பேச பிடிக்கும்

அவள் பேசுவதே கண்களால் என்றால் ரொம்ப பிடிக்கும்

இதழ் பிரியாத புன்னகை பிடிக்கும்

புன்னகையில் மறைந்திருக்கும் நிஜமான நேசம் பிடிக்கும்

அதிர்ந்து பேசாத வார்த்தைகள் பிடிக்கும்

வார்த்தைகளற்ற மெளனம் பிடிக்கும்

அதிகாலையில் அவள் புரிந்திடும் காதல் பிடிக்கும்

மழலையின் மொழி பிடிக்கும்

பல சமயங்களில் குழந்தையாய் மாறிட பிடிக்கும்.


தூக்கத்தில் கனவுகள் பிடிக்கும்

கனவில் கண்டதை கவிதைகளாய் மாற்ற பிடிக்கும்

காலநேரம் தாண்டி படித்திட பிடிக்கும்

படித்த நல்ல கருத்துக்களை செயல்படுத்திட பிடிக்கும்

மனம் விரும்பும் சமயங்களில் எழுதிட பிடிக்கும்

படைப்பதைவிட படைத்ததை ரசித்திட பிடிக்கும்

ரோஜாவின் வண்ணம் பிடிக்கும்

மல்லிகையின் மணம் பிடிக்கும்



ஜில்லென்ற மழையில் நனைய பிடிக்கும்

கரைமணலில் அமர்ந்து கடலலைகள் ரசிக்க பிடிக்கும்

மின்சாரமில்லா இரவில் மெழுகுவத்தியின் ஒளி பிடிக்கும்

முழு நிலவொளியில் படகு பயணம் பிடிக்கும்

பட்டாம்பூச்சியின் படபடப்பு பிடிக்கும்

பூவிதழில் உள்ள பனித்துளி பிடிக்கும்

தாலாட்டும் ரயில் பயணம் பிடிக்கும்

தொலைத்தூர பயணங்களில் தோளில் சாய்ந்து தூங்க பிடிக்கும்

(அம்மாவின் தோளில் மட்டும், சமயங்களில் என்னவளிடமும்)



எதுவும் சுத்தமாக பளிச்சென்று இருப்பது பிடிக்கும்

செய்கின்றவைகளை நேர்த்தியாக செய்திட பிடிக்கும்

வாழ்வில் சின்ன சின்னதாய் நல்மாற்றங்கள் பிடிக்கும்

முயற்சிகளை விடாமல் முயற்சிப்பது பிடிக்கும்

புரிந்துக்கொண்டு விட்டுக்கொடுப்பது பிடிக்கும்

கோபங்களை புன்னகையால் வென்றிட பிடிக்கும்

தனிமையில் நினைவுகள் பிடிக்கும்

நினைவுகளால் சிந்திடும் கன்ணீர்த்துளி பிடிக்கும்!

-   ஷப்பீர்
http://www.nidur.info/

No comments: