Monday, July 20, 2015

வெளியில் வெளிவராத தியாகிகள்...

உனக்காய்; உங்களுக்காய்;
பனியில் வீழ்ந்து; அனலில் புரண்டு;
வெளிநாட்டு பணமெல்லாம் எங்கள்
குருதியின் கடைக்குட்டி..
வியர்வையாய் மாற்றி;

வாசம் வீச தாய் நாட்டிற்கு அனுப்புவதெல்லாம்
புத்தம் புது ஆடைகளில் நீங்கள் பூத்துக் குலுங்க;
மறுவேளை உணவு இருக்காயென
என் பிள்ளைகளின் வினாவிற்கு
விடைக் கிடைக்கவே
வினா குறியோடு நிற்கிறோம்
ஏதோ ஒர் கரையிலே!

செல்லங்களே எம் செல்லங்களே…
வருடா வரும் பெருநாளில் நாங்கள்
வராமல் இருப்பதற்கான காரணங்கள் அறிவாயோ;
எனைப்போல நீ அறிந்திடும் நிலைமை தவிர்க்கவே;
வாராமால் இருக்கிறோம் என்பதை அறிவாயோ!

கண்மணிகளே கண்மணிகளே;
இஃப்தாருக்கு கறியும்;பழமும் என
உங்களை ஆசுவாசப்படுத்தவே…
கூட்டத்தோடு அனாதையாக
நோன்பை திறக்கிறோம்;

வேதனைகளையும்; சோதனைகளயும்
உள்ளுக்குள்ளே பொதித்து;
கைப்பேசி அழைப்புகளில் புன்னகையை உதிர்த்து..
செதுக்கி செதுக்கி நிற்பதெல்லாம்
நீங்கள் ஊரில் கவுரமாக
நிற்கவேண்டுமென்பதற்காக!

‪#‎வெளிநாட்டு‬ வாழ்க்கையில்_ஆண்கள்
என் பக்கம்

 Yasar Arafat

No comments: