Monday, September 30, 2013

க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள்

"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்"
ஆனாலும்.....

மனிதர்கள் பெரும்பாலும்
சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்
ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்

நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்
உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்
ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்

நீங்கள் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருந்தால்,
மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்
ஆனாலும் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருங்கள்

நீங்கள் பல வருடங்கள்
சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்
ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்

நீங்கள் மகிழ்ச்சியுடனும்
நிம்மதியுடனும் இருந்தால்,
மனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்
ஆனாலும் மகிழ்ச்சியாய் இருங்கள்

Friday, September 27, 2013

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவு


தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

இடம்:
டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.
வழி:

    மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
    பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.

நேரம்:

    காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
    மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.

Monday, September 23, 2013

கட்சிகளின் ஊடே மூன்றாவது அணி வேண்டுமாம்

கட்சிகளின் ஊடே மூன்றாவது அணி வேண்டுமாம்
கட்சிகளின் கூட்டாட்சியே இந்த மூன்றாவது அணி உயர்த்தி நிறுத்துமாம்
கட்சிகளின் மூன்றாவது அணியில் முப்பது கட்சியாவது சேர்ந்து நிற்குமாம்
கட்சிகளின் மூன்றாவது அணியில் முரண்பாடு இருந்தாலும் தேர்தல்வரை தோழமை இருக்குமாம்.

மூன்றாவது அணியில் தன் தலைமையில் தான் மற்றவை தொடரும் என்பதில் உள்ளுக்குள் ஒரு முரண்பாடு.
முரண்பாடு.மறைவாக அடக்கப் பட ஆயுதமாக பணம் கருவியாக மாறுமாம்
முரண்பாடுகள் தேர்தல் முடியும் வரை முடக்கப் பட்டு வெற்றி பெற்ற பின் திரும்பவும் முறைபாடுகள் கிளைக்குமாம்
மூளையே உடல் உறுப்புகளை இயங்க வைக்கும்
இதயம் கெட்டதால் உயிர் போகும் நிலை முரண்பாடுகளால் வந்த நிலை

Friday, September 20, 2013

அட... அங்கேயும் இப்படி தானா ?

 முன்பெல்லாம் கிராமங்களில் “மணமகளே மருமகளே வா… உன் வலது காலை எடுத்து வைத்து வா…” எனும் பாடல் ஒலிக்கும். அப்போது மணப்பெண் புகுந்த வீட்டுக்குள் “வலது காலை” எடுத்து வைத்து நுழைவார். இதற்காகவே சுற்றிலும் பாட்டிமார் நிற்பார்கள். “முதல்ல.. உன் வலது காலை எடுத்து உள்ளே வைம்மா” என்று அட்வைஸ்கள் விழும். வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைவது வீட்டுக்கு வளத்தைக் கொண்டு வரும் என்பது நமது செண்டிமெண்ட். ரோமர்களுக்கும் இந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. வீட்டுக்குள் நுழையும் போது வலது காலை வைத்து தான் நுழைவார்கள். அப்படி நுழைவது தான் ரொம்ப நல்லது என்பது அவர்களுடைய எண்ணம். இங்கிலாந்தில் இந்த செண்டிமெண்ட் இன்னும் ஒரு படி மேலே. அவர்கள் செருப்பு போடும் போது கூட வலது காலைத் தான் முதலில் போடுவார்கள். அப்படிப் போட்டால் ஆயுள் நீளும் என்பது அவர்களுடைய செண்டிமெண்ட்.

ஆஹா.. பல்லியே கத்திடுச்சு. நல்ல சகுனம் தான் என வீட்டிலிருக்கும் பல்லியின் தலையில் பாரத்தைப் போடும் செண்டிமெண்ட் நமது ! சும்மாவாச்சும் பல்லிக்கு இரண்டு அடி கொடுத்தாவது உச்சுக் கொட்ட வைப்பார்கள். இந்தோனேஷியாவிலும் இதே நம்பிக்கை இருக்கிறது. கெய்கோ எனும் சிறு பல்லி போன்ற ஒன்று சத்தம் போட்டால் குஷியாகி விடுகிறார்கள். அதுவும் குழந்தைகள் பிறக்கும் போது அது சத்தம் போட்டால் செண்டிமெண்டலாக எல்லாம் சுபம் !

வீட்டுக்குள்ளே செருப்புப் போட்டு நடப்பதில்லை நாம். “வீட்டுக்குள்ள செருப்பு போட்டு நடந்தா புனிதம் கெட்டுடும் ?” என்பது பெரிசுகளின் வாதம். செருப்பு போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழைவது ஒருவகையில் மரியாதைக் குறைவு. தாய்லாந்திலும் இதே செண்டிமெண்ட் உண்டு. செருப்பு போட்டுக் கொண்டு வீட்டுக்குள் வந்தால் அது பயங்கர இன்சல்ட் ஆக நினைக்கிறார்கள். தெருக்களைச் சுற்றி அழுக்கைச் சேகரித்து வரும் செருப்பு வெளியே கிடப்பது தான் நல்லதும் கூட.

வலது கையால் எதையும் கொடுக்க வேண்டும் என்பது நமது செண்டிமெண்ட். இனம், மதம், ஜாதி எல்லாவற்றையும் தாண்டி இந்த செண்டிமெண்ட் உலவுகிறது. இந்த செண்டிமெண்ட் அப்படியே இருக்கிறது தாய்லாந்தில். வலது உள்ளங்கையில் பொருளை வைத்து நீட்ட வேண்டும். இடது கை வலது கை மணிக்கட்டைப் பிடித்திருக்க வேண்டும். இப்படிக் கொடுத்தால் தான் கொடுப்பவருக்கும் நல்லது, வாங்குபவருக்கும் பயன் தரும். இது அவர்களுடைய செண்டிமெண்ட்.

உள்ளங்கை அரிக்குது. இன்னிக்கு நல்ல காசு வரும்போல இருக்கு. என நாம் சொல்வதைப் போலவே துருக்கியில் உள்ளவர்களும் சொல்கிறார்கள். அவர்களுடைய செண்டிமெண்ட் படி, இடது கையில் அரித்தால் பணம் வரும். கொஞ்சம் இடம் மாறி வலது கையில் அரித்தால் அவ்வளவு தான். உள்ளதும் போய்விடுமாம் !

“பெரியவங்க இருக்கும்போ கால்மேல கால் போடாதே” என முந்தைய தலைமுறையினர் சொல்வார்கள். அது எதிரே இருப்பவர்களுக்குச் செய்யும் அவமரியாதை என்பது அவர்களுடைய எண்ணம். இதே செண்டிமெண்ட் தாய்லாந்திலும் உண்டு. கால் மேல் கால் போட்டால் காலால் அடுத்தவரைச் காலால் சுட்டிக் காட்டுவது போல இருக்குமாம். அது அடுத்தவருக்குப் பெருத்த அவமானமாகிவிடும். எனவே கால் மேல கால் போடக் கூடாது என்பது அவர்களுடைய விளக்கம்.

Wednesday, September 18, 2013

அம்மாவின் நடிகைத் தோழி

அம்மா சொல்வாள்
அந் நடிகையின் நடிப்பைப்
பார்க்க நேரும் போதெல்லாம்

'பள்ளிக்கூடக் காலத்தில்
உயிர்த் தோழிகள் நாம்
அமர்ந்திருந்தோம் ஒரே வகுப்பில்
ஒரே பலகை வாங்கில்
அந் நாட்களிலென்றால் அவள்
இந்தளவு அழகில்லை'

பிறகு அம்மா
பார்ப்பது தனது கைகளை
உடைந்த நகங்களை
காய்கறிகள் நறுக்குகையில்
வெட்டுப்பட்ட பெருவிரலை

அத்தோடு அவள் எங்களைப் பார்ப்பாள்
எனது முகத்தை, தம்பியின் முகத்தை
கண்களைச் சிறிதாக்கிப் புன்னகைப்பாள்
அவளது வதனத்தின் சுருக்கங்களையும் சிறிதாக்கி

மூலம் - இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
source : http://rishantranslations.blogspot.in/

வேடிக்கை வெறியர்கள்

நேற்று மாலை ஆறரை மணியளவில் நண்பர் ஒருவரை அண்ணாசாலையில் சந்திக்க திட்டம். ஆனால் சுமார் ஐந்து மணிக்கு வானம் இருட்டி, அடைமழை கொட்டி ‘உதார்’ காட்டிக் கொண்டிருந்தது. அரை மணி நேரம் மட்டுமே மழையின் ஆதிக்கம். வானம் மெல்ல வெளுக்க நண்பரை சந்திக்க கிளம்பினேன்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவன் அரண்டு விட்டேன். ஈக்காடுதாங்கல் பாலம் முழுக்க மனிதத்தலைகள். மெட்ரோ ரயில் புண்ணியத்தில் சாதாரண நாட்களிலேயே வாகனங்களால் பிதுங்கும் பாலம், திடீர் கூட்டத்தால் திக்குமுக்காடி போயிருந்தது. சில கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனவரிசை நீண்டிருந்த்து. தரைப்பாலமும் வாகனங்கள் நிரம்பி, சில இன்ச்சுகள் முன்னேறுவதற்குள்ளாகவே தாவூ தீர்ந்து டவுசர் கயண்டது. நடப்பதற்கு கூட வழியில்லாமல் டிராஃபிக் ஜாம் ஆகும் ஒரே நகரம் சென்னையாகதான் இருக்க முடியும். ஒன்றாவது கீரிலேயே கிளட்சை பிடித்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஸிலேட்டர் கொடுத்து, பிரேக் பிடித்து கையெல்லாம் மரத்துப்போனது.
எல்லோருமே ஆற்றுக்கு நடுவில் மெட்ரோ ரயிலுக்கு அமைக்கப்பட்ட தூண்களுக்கு அருகில் அமைந்திருந்த அடிப்பகுதியை மையமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். வாகன ஓட்டிகள் பலரும் நடுரோட்டில் வண்டியை ‘பார்க்’ செய்து, ஒரு பயலும் முன்னேற முடியாதபடி வன்முறையில் ஈடுபட்டார்கள்.
அடையாறு ஆற்றில் ஏதோ கலவரம் என்று புரிந்துகொண்டேன். சில வருடங்களுக்கு முன்பாக நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் ஒரு கதிர்வீச்சு கருவி வீசப்பட்டு, சென்னைவாசிகள் உயிரைப் பிடித்துக்கொண்டு சில நாட்கள் வாழ்ந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்படி இல்லையாயின் யாரோ ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்க வேண்டும். அடையாறு மேம்பாலத்தில் மாதத்துக்கு ஒருவராவது குதித்து உயிர் மாய்த்துக்கொள்வது சமீபகாலமாக சென்னையில் புதியதாக ஏற்பட்டிருக்கும் மரபாகி விட்டது. யாரோ ‘ஸ்பாட்’ மாறி உயிர்நீத்திருக்கிறார்களோ என்றும் யூகித்தேன்.

Tuesday, September 17, 2013

வேண்டும் வேண்டும் மனித நேயம். வாழ்த்துகள் to ஜோசப் சேவியர் Joseph Xavier Dasaian

Prof. Dr. John Lee அவர்கள் தயாரித்த "UNITY in INDIA" ஆல்பத்துக்காக Joseph Xavier Dasaian ஜோசப் சேவியர்
 எழுதிய பாடல்..

வேண்டும் வேண்டும்
மனித நேயம்


ஜோசப் சேவியர் Joseph Xavier Dasaian   கவிஞர்,எழுத்தாளர் , மக்கள் நலம் பேணுபவர் .மனித நேயம் கொண்டவர்
அவரது வலைத்தளம் அலசல்
http://sirippu.wordpress.com/

Joseph Xavier Dasaian  Married to Stella Joseph
   
ஆன்மீகம் அழகானது

அரசியல் செய்யாத மனிதன் இல்லை, மனிதன் செய்யாத அரசியலும் இல்லை

வாழ்த்துகள் to ஜோசப் சேவியர் Joseph Xavier Dasaian

 

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."