இறையோனுக்கு இணையுமில்லை துணையுமில்லை
இறைஞ்சுவோனுக்குஇணையுமுண்டு துணையுமுண்டு
ஆளுகை செய்கிறவன் அவன்
பேணுதல் செய்கிறவர் மனிதன்
இறையோனாய் இருப்பவன் இறைவன்
இறைஞ்சுவோனாய் இருப்பவன் மனிதன்
வேண்டுபவனாய் இருப்பவன் இறைவன்
கேட்பவனாய் (வேண்டல் ) இருப்பவன் மனிதன்
இறைவனை நாடி சான் போனால்
நம்மை நாடி முழம் வருவான்
அவனை நாடி முழம் போனால்
நம்மை நாடி பாகம் வருவான்
கருணையால் நம்மை பிறக்க வைத்தான்
தொழுகையால் அவனை நேசிக்க வைத்தோம்
உன்னையல்லால் யாரைக் கேட்போம்
Saturday, October 6, 2012
Friday, October 5, 2012
சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மௌலானா சம்சுதீன் காசிமியுடன் சந்திப்பு:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய அவதூறு திரைப்படம் பற்றி கருத்து பரிமாரிக்கொள்வதற்காக சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மௌலானா சம்சுதீன் காசிமியுடன் 03 -10 -2012 அன்று காலை 11 .30 மணிக்கு மக்காப்பள்ளியில் நேரில் சந்தித்தனர். சந்திப்பில் கலந்து கொண்ட தூதரக அதிகாரிகள் ; டேவிட் .கே .கேய்னர் (பொது விவகாரத்துறை அதிகாரி),மத்தேயு .கே .பேஹ்(அரசியல் &பொருளாதார அதிகாரி ) , பின்னி ஜேகப் (மக்கள் தொடர்பு அதிகாரி). இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது .அப்போது நடைபெற்ற உரையாடலின் சுருக்கம்;

Wednesday, October 3, 2012
Tuesday, October 2, 2012
நீங்கள் நல்லவரா? அல்லது கெட்டவரா?
நீங்கள் நல்லவரா? அல்லது கெட்டவரா?
நான் மிகவும் நல்லவன் .அனைவருக்கும் உதவி செய்வேன் .
உனக்கு பாதகம் செய்தவனுக்கும் ,தொல்லை கொடுப்பவனுக்கும் உதவுவீரா?
அது எப்படி முடியும். எனக்கும் ஒரு மனம் ஒன்று உள்ளதே! பழி வாங்க மாட்டேன் ஆனால் உதவ மாட்டேன். துஷ்டனைக் கண்டால் காத தூர போய்விடுவேன்.
அப்படி என்றால் நீங்கள் எப்படி நல்லவராக இருக்க முடியும்?
நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு கெட்டவனில்லையே! அவனைக் கண்டு ஒதுங்கி விடுவேன்.
உங்கள் செயல் உயர்வாக ஆக அனைவருக்கும் நன்மையை நாடி உதவுவதுதான் உயர்வு. அவிதம் செய்தால் கெட்டவரும் நல்லவராகி விடுவார் அல்லவா!
நல்லவனுக்கு நல்லவனாக இருப்பது ஒன்றும் புதுமையில்லை . கெட்டவனுக்கும் நல்லவனாக இருப்பதுதான் உயர்வு.
அதைத்தானே திருவள்ளுவர், ''இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்' என்று கூறுகிறார்.
அதுதானே நபி காட்டிய வழியாக உள்ளது .
"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி
நாயகத்தின் மீது குப்பையை கொட்டிய மூதாட்டி
ஒரு யூத மூதாட்டி அல்லாஹ்வின் தூதர் அதிகாலை நேரங்களில் சுபஹ் தொழுகை முடித்து திரும்பி வரும்வேளைகளில் அவர் மீது தினமும் தவறாமல் குப்பையைக் கொட்டி மகிழ்ந்திருந்தாள் .ஆனால் அல்லாஹ்வின் தூதர் அதனை சகித்துக் கொண்டிருந்தார்கள் ஒருநாள் அந்த மூதாட்டியை காணாது போகவே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அந்த மூதாட்டியை தேடிச் சென்று பார்த்தார்கள் அந்தமூதாட்டி நலக்குறைவால் படுக்கையில் இருந்தால் அந்தப் பெண்மணிக்கு அல்லாஹ்வின் தூதர் ஆறுதல் கூறி திரும்பினார்கள் என்பது இஸ்லாமிய வரலாறு.

Adhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.
'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.
தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதலில் முழங்கியவர் பிலால் (ரலி). மதீனாவில் புகழ்பெற்ற மஸ்ஜிதுன் நபவியில் ஐந்து வேளை தொழுகைகளுக்கும் பாங்கு சொல்லும் பாக்கியம் பெற்றவர் பிலால் (ரலி). அதனால்தான் இன்றும் பள்ளி வாசல்களில் பாங்கு சொல்பவருக்கு பிலால் என்று பெயர்.
ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பதே இந்த வலைப்பூ
அ . ஆஷிக் அஹ்மத் அவர்களின் எதிர்க்குரல் தளத்தை பற்றி
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக...
இஸ்லாம் என்ற ஓரிறைக்கொள்கை தோன்றிய காலம் முதலே அது விமர்சனங்களையும், மாபெரும் எதிர்ப்புகளையும் சந்தித்து வந்துள்ளது. அந்த விமர்சனங்களே பலரையும் இஸ்லாம் என்றால் என்ன என்று அறிய செய்து அவர்களையும் இஸ்லாத்தின்பால் சேர்த்துள்ளது. இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. ஆக இஸ்லாத்தின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகிறது.
தமிழ் இணையதளங்களில், வலைப்பூக்களில் இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பதே இந்த வலைப்பூவின் முதன்மையான குறிக்கோள். இன்ஷா அல்லாஹ்...மேலும் நாத்திகர்களின் மதமான பரிணாம கோட்பாட்டின் அறிவியலுக்கு எதிரான நிலையை துறைவாரியாக அம்பலப்படுத்துவதும் இத்தளத்தின் நோக்கமாகும்
இவை தவிர, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பல இணையதளங்களில் வெளியான இஸ்லாம் தொடர்பான கட்டுரைகளின் தமிழாக்கமும் இடம்பெறும். இன்ஷா அல்லாஹ்...
பதிவுகளின் பட்டியல்:

Monday, October 1, 2012
இஸ்லாமிய பாடல்கள் - கலந்துரையாடல்
காடுகள் காற்றில் இசைக்கின்றன.
கடலின் அலைகள் இசைக்கின்றன
முகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன.
மழை ஒரு கச்சேரியே வைக்கிறது
பறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன
தாய் தன் மழலையைக் கொஞ்சும்போதுகூட தாளலயம் கூட்டித்தான் கொஞ்சுவாள். ம்ம்... ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்....... என்று இசைத்துத்தான் தாலாட்டித் தூங்க வைப்பாள்.
இப்படியாய் மனிதனின் எல்லா நிலைகளிலும் இசை நிறைந்து இருக்கிறது.
தொழுகையின் அழைப்பான ஆதான் நபிகளின் காலத்திலேயே சகோ பிலால் அவர்களால் இசைகூட்டி இனிமையாகப் பாடப்பட்டது. புல்புல் என்று நபிகளால் அவர் அழைக்கப்பட்டார்.
எங்கள் மீதொரு பௌர்ணமி பிரகாசிக்கிறது - அது மக்காவிலிருந்து விடைபெற்று வருகிறது என்று மதீனாவின் மக்கள் ஒன்றாய்க் கூடி மகிழ்ச்சியில் நபிகளை வரவேற்றுப் பாடினார்கள்.
எல்லாக் காரியங்களிலும் குலையிடுதல் இஸ்லாமிய வீடுகளில் வழக்கமான ஒன்றுதானே. அதை அதிரையில் மட்டுமல்ல, சவுதியிலும் நிறைய கேட்டிருக்கிறேன்.
இப்படி ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம்.
உங்கள் குழந்தை உங்களோடு மொழிவது இசை.
அதனோடு நீங்கள் குழைவது இசை.
குரான் ஓதுதல் இசை.
பாங்கு சொல்லுதல் இசை.
தாய் தன் பிள்ளையின் வயிற்றில் வாயை வைத்து முகத்தை ஆட்டி ஊதுவாள். அப்போது எழும் இசைகேட்டு குழந்தை இசை நயத்தோடு சிரிக்கும்.
நன்றி : {அன்புடன் இஸ்லாம்}அன்புடன் புகாரி

Subscribe to:
Posts (Atom)