எப்போதாவது ஒரு சித்தன் வருவான் எனக்குள். பித்தாக்கித்தான் போடுவான் அவன் என்னை நட்ட நடு வீதியில். மத்தளப் பிறப்பெடுப்பெதற்கு? மகராசன் அடித்து நொறுக்கத்தானே? ம்ம்ம்.... நடக்கட்டும்!
எல்லாமும் ஆனதுபோல்
இம்மண்ணில் பூத்த பின்னர்
முள்ளில் கால் நோகுதென்றே
முனகித்தான் பயனேது
சொல்லில் தினம் புண்ணாகிச்
சுரக்கும் விழி ஏனெதற்கு
உள்ளத்தில் உருக்கொள்ளும்
ஒப்பாரி தந்ததெது
ஒன்றுபோல வயிறுமனசு
உடலென்ற பெருந்தொடரோ
என்றென்றும் இயம்புகின்ற
ஒற்றைச்சொல் பசியன்றோ
வன்மையாக வாட்டுமிந்த
வளர்பசிக்கு நசிந்துபோக
மண்ணில் நீ மலர்ந்ததென்ன
எவரிடத்தோ யாசித்தா
கல்தாண்டி கடல்தாண்டி
காற்றெனவே பறந்தாலும்
எல்லைக்கு அப்பாலும்
இருளன்றி வேறேது
இல்லையொளி எங்குமென
எண்ணிமட்டும் ஓயாதே
உள்ளத்தில் தேடிப்பார்
உள்ளேதான் ஒளியுண்டு
பெண்ணுக்குள் உதயமாகும்
பிறப்புக்கள் விபத்துக்கள்
மண்ணுக்குள் அமைதிதரும்
மரணங்கள் பாக்கியங்கள்
Showing posts with label விபத்து. Show all posts
Showing posts with label விபத்து. Show all posts
Sunday, December 16, 2012
Saturday, March 17, 2012
போகாதே! போய் விடாதே! ஏன் இந்த அவசரம்?
யார் செய்த தவறு! காலமெல்லாம் உன் மீது நான் கொண்ட அன்பை மறந்து என்னை விடுத்து மறைய உனக்கு இந்நிலையை உருவாக்கியது யார்?
உன்னை வழியில் விளையாடவைத்து என் விழியில் வெப்பத்தினை தந்து எரிமலையாய் நெருப்பினை கொட்டவைத்து விட்டாயே! இனி என் விழிக்கு ஏது குளிர்ச்சி! அன்பே நீ அணையாதே! அவசரத்தில் நாம் இந்த உலகத்தில் வந்ததால் வேகமாய் நாம் நம் வாழ்வை விளையாடி விட்டோமோ!
நில்! போகாதே! முடியாது யாராலும் நிறுத்த முடியாது . போவதற்குள்ள வழியை நாமே உருவாக்கி நாமே அதில் பயணம் செய்து விட்டோம்.
எதற்கும் பொறுமை தேவை ! இறப்பதற்கு வழி உண்டாக்கி வேதனை அடைவதால் இழந்ததை திரும்ப பெற முடியுமோ!
தனக்குத் தெரியாமல் தானே வரவைத்த தற்கொலையோ!
விபத்தின் வழி மரணம் வேகமாக நம்மை வந்தடைய நாம் ஏன் அந்த நிலையை உருவாக்கிக் கொள்கின்றோம்! அதனால் விளையும் வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் நாம் ஏன் தவிக்கின்றோம்!

Subscribe to:
Posts (Atom)