Showing posts with label முதல் பரிசு பெற்ற கவிதை. Show all posts
Showing posts with label முதல் பரிசு பெற்ற கவிதை. Show all posts

Friday, August 22, 2014

சூரியன் பண்பலை நடத்திய வைரத்தின் நிழல்கள் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி
என்ன சொல்லி விழுகிறது
ஏன்
ஆயிரம் கண்களால் அழுகிறது ?

கருக்கொண்ட முகிலின்
கதவுடைத்த
குறைப் பிரசவக் குழந்தையா ?

மேகத் தொட்டிலில்
புரண்டு படுக்கையில்
தவறி விழுந்த மழலையா ?

ஒருவேளை,
புகுந்தவீட்டுப் பயத்தில்
தாவித் தவிக்கும்
தளிர் பருவக் குமரியோ ?

ஈரம் கசியக் கசிய
என்னதான் சொல்கிறது மழை ?