Showing posts with label மகாராஷ்டிர தேர்தல். Show all posts
Showing posts with label மகாராஷ்டிர தேர்தல். Show all posts

Sunday, November 2, 2014

மத வேறுபாடுகளை குறைப்பதில் மத சார்பற்ற கட்சிகள் தோற்று விட்டன: ஒவைசி

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எம்ஐஎம் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது மற்ற கட்சிகளுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.

மஜ்லிஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் என்பது கட்சியின் முழு பெயர். ஹைதராபாதில் மட்டும் பிரபலமாக இருந்த கட்சி. இதன் தலைவர் அசாதுதீன் ஒவைசி. ஆவேசமான பேச்சாளர். கூட்டத்தினரின் உணர்வுகளை எளிதில் தூண்டி விடும் ஆற்றல் பெற்றவர்.

இன்று டைம்ஸ் நாளிதழில் வெளியான அவரது பேட்டியை வாசித்தபோது ஆள் ரொம்பதான் மாறிவிட்டார் என தோன்றியது.

• உங்கள் கட்சி போட்டியிட்டதால் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும்தான் லாபம் என்று மகாராஷ்டிர கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. என்ன பதில்?