Showing posts with label புத்தகம். Show all posts

Wednesday, December 10, 2014
வாசிப்பின் அவசியம் - பகிர்தலும், பெறுதலும் தொடர்ந்து நடந்துகொண்டேதானிருக்கும்.
வாசிப்புப் பழக்கம் குறைவதாக நான் நினைக்கவில்லை.
வாசிப்புக்கான தளங்களின் வடிவம்தான் காலம் தோறும் மாறிக் கொண்டிருக்கிறது.
புத்தகங்களை எழுதுபவர்கள் ஏன் எழுதுகிறார்கள்?
பணம், புகழ் இதையெல்லாம் தாண்டி தனக்குத் தெரிந்த, தன்னால் புனைய முடிந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்தல் என்பதுதான் அடிப்படை.
வாசிப்பு என்பதற்கான தேவை ஒரு வாசகருக்கு ஏன் ஏற்படுகிறது.
பிரதிகளின் ஊடாக எதையோ பெறுதல். இங்கே பெறுதல் என்பது உத்தியோகப் பூர்வமானதாகவோ, கல்வியறிவு தொடர்பானதாகவோ, கேளிக்கை கொள்ளக் கூடியதாகவோ, சோகம் கொள்ளக் கூடியதாகவோ எந்த உணர்வின் அடிப்படையிலான அறிவாகவும் இருக்கலாம். புனைவாகவும் இருக்கலாம். அபுனைவாகவும் இருக்கலாம்.
Sunday, December 8, 2013
புத்தகம் ! கவிஞர் இரா .இரவி !
அகம் புதிதாக உதவுவது புத்தகம் !
அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் !
அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் !
அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் !
ஆற்றல் பெருகிடக் காரணம் புத்தகம் !
அறிவு வளர்ந்திடக் காரணம் புத்தகம் !
இல்லம் நிறைந்திடத் தேவை புத்தகம் !
உள்ளம் புத்துணர்வுப் பெறப் புத்தகம் !
எடுத்த செயல் முடித்திடப் புத்தகம் !
ஏணியென உயர்த்துவது புத்தகம் !
மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகம் !
மண்ணில் உள்ள சொர்க்கம் புத்தகம் !
அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் !
அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் !
அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் !
ஆற்றல் பெருகிடக் காரணம் புத்தகம் !
அறிவு வளர்ந்திடக் காரணம் புத்தகம் !
இல்லம் நிறைந்திடத் தேவை புத்தகம் !
உள்ளம் புத்துணர்வுப் பெறப் புத்தகம் !
எடுத்த செயல் முடித்திடப் புத்தகம் !
ஏணியென உயர்த்துவது புத்தகம் !
மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகம் !
மண்ணில் உள்ள சொர்க்கம் புத்தகம் !
Saturday, March 30, 2013
நமது முதல் நூல்: “வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?” – வெளி வந்து விட்டது!
நமது இணைய தளத்தில் முஸ்லிம்களின் நம்பிக்கைகள் குறித்த 24 கட்டுரைகளை தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கின்றோம்.
மேற்கண்ட 24 கட்டுரைகளையும் இணைத்து “வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?” எனும் தலைப்பில் ஒரு நூல் அல்லாஹ்வின் பேரருளால் வெளி வந்து விட்டது!
இந்நூல் யாருக்காக?
இஸ்லாத்தை அறிந்து கொள்ள விரும்பும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு! முஸ்லிம்கள் எவற்றை நம்புகிறார்கள்? ஏன் நம்புகிறார்கள்? எந்த சான்றுகளின் அடிப்படையில் அவற்றை நம்புகிறார்கள்? – என்பதை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு!

Wednesday, March 6, 2013
எழுதுவது நான் படிப்பது ஒருவன்
நான் ஒரு புத்தகம் எழுதுகின்றேன் பக்கங்கள் புரள்கின்றன.
புரள்வது நிற்கும் அது என் மூச்சு நிற்கும்போது.
அதனை நானும் படிக்க முடியாது நீங்களும் படிக்க மாட்டீர்கள் .
படித்து அதற்கு உரிய தண்டனையோ அன்பளிப்போ கொடுக்க ஒருவன் உறுதியாக உண்டு .
இது உங்கள் நினைவுக்கும் எனது அறிமுகமாக. முன்னுரையாக

Thursday, June 7, 2012
படித்து பட்டம் வாங்குவது ஒரு பாஸ்போர்ட் மாதிரிதான் . அறிவுத் திறனோடு நன்றாக படித்து பட்டம் வாங்குவது விசா கிடைத்ததுபோல்.
நாம் ஒவ்வொரு நாளும் ஒரு புத்தகம் படிக்க நமக்கு ஒரு தனித்துவம்
வந்தடைகின்றது. அறிவைப் பெற படிக்கின்றோம் ஒரு நாளைக்கு ஒரு புத்தகமாவது
படிப்பது நல்லது. படிப்பதில் ஆற்வம் இருக்க வேண்டும்.படிப்பது
என்றால் புத்தகத்தைப் பக்கம் பக்கமாக பிரித்துப் பார்பதல்ல. அதிலுமொரு நன்மை கிடைக்கலாம். நம்மை அறியாமலேயே நம் சிந்தையில் அது வந்து அமர்ந்து விடலாம், படிப்பதில் ஒரு ஆர்வம் உண்டானாலே போதும் அது தொடர்ந்து நம் பழக்கதில் வந்து சேர்ந்து விடலாம் . தற்பொழுது டீவீ யும் மற்ற பொழுது போக்குகளும் நம்மை படிக்கவிடாமல் நம்மை விளக்கி வைக்கின்றது. அறிவு பெறுவதற்கு படிப்பதே சிறந்த சாதனம் .அறிவு மிகவும் சக்தி வாய்ந்தது . அது எந்த காலத்திலும் உதவலாம் .
படிப்பதில் பலவகையுண்டு.
“ Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”—Francis Bacon
சில புத்தகங்களை மேலோட்டமாக படிப்பது,சில புத்தகங்களைப் படித்து கருத்தை உள்வாங்கிக் கொள்வது மற்றும் சில புத்தகங்களைப் படித்து உள்வாங்கி காலமெல்லாம் நினைவில் நிறுத்திக் கொள்வது.
நான் தனித்துவமான கோடில் இருந்து நீங்கள் படிக்க - திட்டங்கள் தன்னிச்சையான - ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்
நாம் படிக்க தேர்ந்தெடுக்கும் புத்தகம் நல்லவைகளாக இருப்பது அவசியம் . கெட்டவைதான் சீக்கிரம் நம் மனதில் ஒட்டிக்கொள்ளும்.அதனால் நல்ல கருத்துடன் அறிவையும் மற்றும் பண்பையும் வளர்க்கக்கூயதாக இருக்க வேண்டும்.
நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் படிப்பவர்கள்தான் தற்போழுது அதிகமாக உள்ளனர். ஆனால் பொதுவான உலக விசயங்களில் அவர்களுக்கு நாட்டம் இல்லாமல் இருப்பதனை நாம் பார்க்கின்றோம். பொறியியர் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை படிக்கும் பொழுதே வேலைக்கு எடுத்து விடுகின்றார்கள். வேலைக்கு எடுக்கும் போது அவர்கள் எடுத்திருக்கும் மதிப்பெண்களை மட்டும் பார்க்காமல் மற்ற திறனையும் கண்காணித்தே வேலைக்கு தேர்ந்தெடுக்கின்றனர்.
சில கல்லூரிகளில் முக்கியமாக தேர்வில் வரக்கூடிய பாடங்களை அதிகமாக படிங்கள் என்பார்கள்.அதில் சில மாணவர்கள் அதனை மட்டும் படித்து தேர்வில் அது வரவில்லையென்றால் தோல்வியை தழுவுவார்கள். படிப்பது தேர்வுக்காக் மட்டுமில்லாமல் அறிவை வளர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு (ஔவையார்)
நன்றாக படித்து பட்டம் வாங்குவது ஒரு பாஸ்போர்ட் மாதிரிதான் . அறிவுத் திறனோடு நன்றாக படித்து பட்டம் வாங்குவது விசா கிடைத்ததுபோல்.
Why read a book to end in one day is a beautiful thing?
How to find a book per day?
More details in the post and the original
Read more L et us read a book every day

Subscribe to:
Posts (Atom)