Showing posts with label புதுகை அப்துல்லா. Show all posts

Friday, June 13, 2014
புவியுள்ளவரை பொருளியல் -3 - புதுகை அப்துல்லா
லயோனல் ராபின்ஸின் பற்றாக்குறை இலக்கணம் (scarcity definition of Lionel Robbins) :
ஒருபய சொன்னதும் சரியில்லை,பேசாம நம்மளே ஒரு இலக்கணத்தைச் சொல்லிருவோம்னு முடிவு பண்ண ராபின்ஸ் 1932 ல ”பொருளியலின் இயல்பும்,முக்கியத்துவமும் பற்றியக் கட்டுரை” அப்படின்னு ஒரு நூலை வெளியிட்டாரு.இதில் அவர் சொன்ன இலக்கணம்தான் பற்றாக்குறை இலக்கணம் அப்படின்னு அழைக்கப்படுது.
ராபின்ஸின் இலக்கணம் – ”பொருளியல் என்பது மனிதனின் விருப்பத்திற்கும்,மேலும் பலவித பயன்களுக்குப் பயன்படுத்தக்கூடிய பற்றாக்குறையான பொருட்களுக்கும் இடையே இருக்கக்கூடிய மனித நடவடிக்கைகளைப் பற்றி கூறுகிறது”.
Monday, June 9, 2014
புவியுள்ளவரை பொருளியல் - 2
மார்ஷலின் பொருள்சார்ந்த நல இலக்கணம் (marshalls`s welfare definition) :
நம்ம அண்ணன் ஒருத்தரு எப்படியும் டாக்டராயிருவேன்னு பியூர் சயின்ஸ் குரூப் எடுக்குறாரு. ஆனா கொஞ்சூண்டு மார்க்ல அவருக்கு மெடிக்கல் சீட் கிடைக்கலை. ச்சேய்.. பேசாம மேக்ஸ், சயின்ஸ் எடுத்துருந்தா இன்ஜீனியரிங்காவது போயிருக்கலாம்னு வீட்ல பொலம்புறாங்க. இப்ப நம்ம என்ன செய்வோம்? +1 சேரும்போது கொஞ்சம் உஷாரா மேக்ஸ், சையின்ஸ் குரூப் எடுப்போம்.. இல்லையா? அதே மாதிரிதான் ஆடம் ஸ்மித்தின் இலக்கணம் பணத்தைப் பத்தி மட்டுமே பேசுது, மனுஷனப்பத்தி பேசலைன்னு எல்லாரும் குறை சொன்னதால திரு.மார்ஷல் பொருளியல் நடவடிக்கை பற்றிய தனது ஆய்வை பொருளோடு அதைத் தேடும் மனிதனின் நடவடிக்கையையும் சேர்த்தே ஆராய்ந்தார்.
19 ஆம் நூற்றாண்டோட இறுதியில ஆல்பிரட் மார்ஷல் தன்னோட பொருளியல் ஆய்வுகளை “பொருளாதாரக் கோட்பாடுகள்” என்ற நூலா வெளியிட்டாரு. இவர் பொருளைப்பற்றி மட்டுமில்லாம அது சார்ந்த நலனுக்கும் முக்கியம் தந்ததால இவரது இலக்கணம் “பொருள்சார் நல இலக்கணம்” அப்படின்னு சொல்லப்பட்டது. அதாவது பொருளை ஈட்டுவதால் சமூகத்துக்கு விளையும் நலன்களை என்று உணரலாம். இவரு “பொருளாதாரம் ஒருவகையில் செல்வத்தைப் பற்றிய இயல் என்றால் மற்றொரு பக்கம் அதை ஈட்டும் மனிதனைப் பற்றிய இயலுமாகும்” என்கிறார்.

Wednesday, June 4, 2014
புவியுள்ளவரை பொருளியல் - 1
ஒருத்தரைப் பத்தி நாம முழுசாத் தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி குறைந்தபட்சமா அவரோட பேரு என்ன? ஊரு என்ன? என்ன தொழில் செய்யிறாரு? இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் தெரிஞ்சுக்குவோமில்லையா? அதுமாதிரி பொருளாதார அறிவியலின் பல்வேறு பிரிவுகளை நாம பாக்குறதுக்கு முன்னாடி இதுக்கு முன்னோடியா இருந்த சில அறிஞர்கள், அவர்கள் சொன்ன கருத்துகள் இதையெல்லாம் பாத்துருவோம், பொண்ணை நேர்ல பாக்குறதுக்கு முன்னாடி ஃபோட்டோல பார்த்துட்டு போற மாதிரி.
ஆரம்ப காலத்துல பல பேரு பொருளாதாரத்துக்குப் பல்வேறு இலக்கணங்கள் தந்திருந்தாலும் ஒரு நாலு பெரிய மனுஷனுங்க சொன்ன இலக்கணம்தான் இன்னிக்கி வரைக்கும் ரொம்ப முக்கியமா கருதப்படுது. அப்பேர்ப்பட்ட மனுஷனுங்க யாராரு?

Subscribe to:
Posts (Atom)