Showing posts with label பார்வை. Show all posts
Showing posts with label பார்வை. Show all posts

Thursday, February 20, 2014

வண்ணப் பெண்புறாவை சின்னப் புறாக்கள் மொய்த்தும்....



வண்ணப் பெண்புறாவை
சின்னப் புறாக்கள் மொய்த்தும்
ஈயாடவில்லை
ஏக்கம்கொண்ட விழிகளில்
ஏனெனில்
ஏந்திலையின் நெஞ்சுக்குள்
ஏகந்தத்தின் நினைவுகள்
சூழ்ந்து சூரையாடிக்கொண்டிருந்தன
சுகந்தத்தின் கண்விழித்த
சொப்பனத்தில்
சொல்லடி என்னவென்று
செல்லக்கிளியே-உனை
சொக்கவைத்தது யாரென்று...

ஏறெடுத்துப் பார்க்கும் பார்வையில்
எட்டடுக்கு கேள்விகள்,
தொடுக்கிறாள் இவள்
துள்ளித் துவழ்கிறான் அவன்.

Wednesday, October 9, 2013

ஒழுக்கமும் பேணுதல் ஒருவகை வேலியே

ஒழுக்கமும் பேணுதல் ஒருவகை வேலியே
....உணர்ந்துதான் செயல்படுநீ - என்றும்
விழுப்பமே தந்திடும் பலன்களைப் பார்த்ததும்
...மேன்மையாய் உயர்ந்திடுநீ!


கண்களின் பார்வையைத் தாழ்த்தியே நடப்பதும்
.....கண்களின் வேலியாகும் - இஃதே
பெண்களின் உள்ளமும் உன்னிடம் மதிப்பினைப்
...பெற்றிடும் வேலையாகும்!

நாணமும் வேலியாம் மானமே காத்திட
…..நம்பினோர் நலம்பெறுவர் --அதனால்
காணலாம் நற்பயன் உள்ளமும் உடலுமே
….களிப்பினால் பலம்பெறுவர் !

 வறுமையும் வதைத்திடும் போதினில் இறையவன்
....வழிதனைப் பேணுவாய்நீ - அதற்குப்
பொறுமையாம் வேலியைப் பூட்டியே காத்திடு
....புலம்புதல் நாணுவாய்நீ!

உண்மையை வேலியாய்ப் பூட்டிட மவுனமாய்
....உதடுகள் காத்ததனால்-- என்றும்
திண்மையாய் உரம்பெறும் மனத்தினில் ஏற்படும்
...தெளிவிலா வார்த்தைகளும்!

மரபெனும் யாப்ப்பினை எழுதிட இலக்கண
.......வரம்புகள் முழுமையாகும்-- வேலியாய்
வரப்புகள் கட்டிய பாத்திகள் இடுவதால்
........வயல்களும் செழுமையாகும்!

மக்களைக் காத்திடும் வேலியாய் அரசியல்
......வளம்பெறல் மெய்தானா? -அந்த
மக்களை மறந்திட நினைப்பதும் மனத்தினில்
....மண்டிய பொய்தானா?

வேலியே பயிரையும் காப்பதாய் நினைப்பது
.. வேகமாய்ச் சுருட்டுகின்ற  - இவர்கள்
போலிகள் என்பதை உணர்ந்திடும் போதினில்
.. புரிந்திடும் திருட்டுகளும்!


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்,
அதிராம்பட்டினம் ( பாடசாலை),
வலைப்பூந் தோட்டம்:
http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com ,