சிலநாட்களுக்கு முன்பு “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற நாகூர் ஹனிபாவின் பாடலைப் புகழ்ந்து அந்த பாட்டின் மகிமையை, அப்பாடல் மக்கள் மனதில் ஏற்படுத்திய பாதிப்பை சிலாகித்து என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். இணையதளத்தில் – குறிப்பாக குழுமங்களிலும், பிற வலைப்பதிவுகளிலும், முகநூல்பக்கங்களிலும் அந்த பதிவுக்கு பெருத்த வரவேற்பு கிடைத்தது.
இதோ அந்த சுட்டி : அப்படி என்னதான் இருக்கிறது நாகூர் ஹனிபாவின் பாடலில்?
அப்பாடலுக்கு மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அவர்கள் ஆத்மார்த்த ரசிகர் என்ற விஷயத்தையும் நாம் அப்பதிவில் கண்டோம். ஓய்வு நேரங்களிலும், காரில் பயணம் செல்லுகையிலும் அப்பாடலைக் கேட்க அவர் தவறுவதே இல்லை.
வயதின் முதிர்ச்சியால் உடல் சோர்வுற்றிருக்கும் நாகூர் ஹனீபா அவர்களை அண்மையில் நோன்பு காலமான ரமலான் மாதத்தில் நேரில் கண்டு அளவளாவுவதற்கு மதுரை ஆதீனம், நாகூர் சென்றிருந்தார். பழைய நண்பரைக் கண்டதும் நாகூர் ஹனிபா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
Showing posts with label நாகூர் ஹனிபா. Show all posts

Sunday, October 14, 2012
Saturday, July 21, 2012
நாகூர் ஹனிபாவின் வாரிசு யார்?
நாகூர் ஹனிபாவின் வாரிசு
பள்ளிக்கூடம் தொடங்கி கல்லூரிவரை – ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடிக்கும்வரை -ஒன்றாகவே வளர்ந்து, ஒன்றாகவே படித்து இன்று நான்யாரோ, அவன் யாரோ என்று, தகவல் பரிமாற்றம் கூட இன்றி பிரிந்து வாழும் என் நண்பன் E.M.நெளசாத் அலி பற்றி தினகரன் வாரமஞ்சரியில் வெளிவந்த பேட்டியை என் வலைப்பதிவில் வெளியிடாமல் போனால் உண்மையில் நான் ஒரு நட்புக்கு துரோகம் செய்தவானாகி விடுவேன்.
இதற்கு ஒரு பிளாஷ்பேக் தேவைப்படுகிறது.
எல்லா பெற்றோர்களைப்போல் தன் பிள்ளையும் “டாஸ்… பூஸ்” என்று இங்கிலீசில் பேச வேண்டும் என்ற ஆங்கில மோகத்தில் என்னையும் நாகை பீச் ரோட்டில் இருந்த “Little Flower Kinder Garten” ஸ்கூலில் LKG வகுப்பில் சேர்த்தார்கள். படகு போன்ற ஸ்டுடி பெக்கர் வண்டி என்னையும் என் தம்பி தங்கைகளையும் சுமந்துச் செல்லும். “Born with Siver spoon in mouth” என்பார்களே – அது ஒரு நிலாக்காலம்.
LKGயும் படிச்சு, UKGயும் படிச்சு ரைம்ஸ் எல்லாம் தலை கீழாக மனப்பாடம் பண்ணியாச்சு. அப்புறம்….. மகன் மேலும் இங்கிலீசில் பிச்சு உதற வேண்டுமே..!
நாகூருக்கு அக்கம் பக்கத்து ஊரில் அப்போது கான்வென்ட் எதுவும் இல்லை. தஞ்சாவூரில் இருக்கும் Sacred Heart Convent-ல் கொண்டு போய் தள்ளி விட்டார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஹாஸ்டல் வாழ்க்கை. உப்புமாவில் புழு நெளியும். பூரிக்கு தொட்டுக்கொள்ள ரசம். (அது என்ன காம்பினேஷனோ தெரியாது). கோ-எஜுகேஷன் வேறு. கிறுஸ்துமஸ் தினத்தன்று பாலே டான்ஸுக்கு ஆங்கிலோ இந்திய ‘பம்பளிமாஸ்’ Joanna-தான் எனக்கு ஜோடி. அவளுடைய இடுப்பை பிடித்துக்கொண்டு நான்தான் ஆட வேண்டுமாம் மேரி சிஸ்டர் சொன்னார்கள்.

Wednesday, December 28, 2011
அனைவரும் விரும்பி கேட்கும் பாடல்! + நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்
அனைவரும் விரும்பி கேட்கும் பாடல் - இறைவனிடம் கையேந்துங்கள்...
Iraivanidam Kaiyenthungal.mp3 Download
"இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்" மர்ஹும் கிளியனூர் அப்துல் சலாம் அவர்கள் எழுதிய அல்ஹாஜ் இசைமுரசு E.M.ஹனீபா பாடிய பாடலைப் பற்றி தேரிழந்தூர் தாஜுதீனின் மூன் டிவி பேட்டி
தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய காவியக் குரலோன் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.
பாடலை எழுதிய கவிஞர் அவர்களுக்கும் Moon T. V க்கும்,பேட்டி எடுப்பவருக்கும் மிக்க நன்றி.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி
----------------------------------------------------------------------------------------

Subscribe to:
Posts (Atom)