Showing posts with label தொய்வு. Show all posts
Showing posts with label தொய்வு. Show all posts

Thursday, January 10, 2013

தொட்டால் சுருங்கி செடிபோல் தொட்டால் சிணுங்குகிறாய்

பாவையின் வருகையால் கண்கள் குளிர்ந்திட
பாதையோர் வருகையால் பார்வை குனிந்தது
முகிலின் வருகை நிலாவை மறைத்தது
செவ்வாய் உதடுகள் பற்களை மறைத்தன

தொட்டால் சுருங்கி  செடிபோல் தொட்டால்  சிணுங்குகிறாய்
சூரிய ஒளி காணாமல் சூரியகாந்திப் போல் தொய்வாகிறாய்
மூங்கில் தோளைக் கொண்டவளே உன் தோளில் தாடை  வைப்பேன்
முல்லை அரும்பின் கோர்வைப்  பற்கள் காண குலுங்கிச் சிரித்திடு

ஓடி ஒலிவதால் உள்ளம் துவண்டிடுமோ
தேடிப்  படித்து தேர்வில் தோற்றதால் தொய்வு வந்திடுமோ
திரும்பத் திரும்ப படித்து தேர்வில் வெற்றி பெறுவேன்
தேடி வந்து உன்னை உயர்வாக்கி வைப்பேன்


தோல்வியைக் கண்டு  துவளவுமில்லை துறவரமுமில்லை 
தோல்வியில்  தவறியது திரும்பக் கிடைக்க திமிர் கொண்டேழுவேன் 
தோல்வி துவண்டுவிடுவதால்  வந்ததல்ல
தோல்வி திரும்பவும் எழ முடியாமையால் வருவது