நம் நாட்டு நீதிமன்றங்களின் நடைமுறைபற்றி வ.மு விடைப்பகுதியில் முன்னர் விளக்கப்பட்டுளதே?.
நித்தி வழக்குத் தொடர்பாக இதுபோன்ற ஒரு வினாவுக்கு முன்னர் அளிக்கப்பட்டுள்ள விடையையும் பார்க்கவும்.
இப்போது வந்துள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மட்டுமின்றிக் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் கம்யூனிஸ்ட் முன்னணிக்கு எதிராகவே அமைந்திருந்ததை வைத்துப் பார்க்கும்போது வரலாறு அதன் வழியே நடைபோடும் என அனுமானிக்கத் தோன்றுகிறது.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள இப்போது உள்ள இந்தத் திட்டம், பொதுவாக அடிக்கடி வரும் நோய்களுக்கானது;. ரூபாய் ஓரிலட்சம் வரை செலவு பிடிக்கும் சிகிச்சைக்கு அரசு உதவும் இத்திட்டத்தை, "ஏன் இந்தத் திட்டம்" என உதாசீனப்படுத்துவது அறிவுடைமை ஆகாது.
கலைஞர் காப்பீட்டு திட்டம் குறித்து முன்னர் அளித்த பதிலையும் காண்க.
வணங்குபவரா? - செபாஸ்டீன், சென்னை.
தாம் கிருத்துவன் என ஒபாமாவே சொன்ன பிறகு மற்றவர்கள் அதைத்தூண்டித் துருவி ஆராயத் தேவையென்ன?
அவரது மதம் அமெரிக்க அதிபர் பதவியின் அதிகாரத்தில் எவ்வித ஏற்றத்தாழ்வையும் ஏற்படுத்துவதில்லை எனும்போது உங்களுக்கு அதில் ஏன் இவ்வளவு அக்கறை?