Showing posts with label ஒபாமா. Show all posts
Showing posts with label ஒபாமா. Show all posts

Wednesday, November 7, 2012

ஒபாமா இரண்டாவது தடவையாக வெற்றி! நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஒபாமா உரை

ஒபாமாவின் நன்றி சொல்லும் பேச்சு அருவிபோல் குளிர்ச்சியாக கொட்டியது . அமெரிக்க கொள்கை நமக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமையைப் பாருங்கள் .அரசியல் அவர்களது நட்பை  பிரிப்பதில்லை .போட்டி இடுபவர் ஒரே மேடையில்  முறையான விளக்கம் தருகின்றனர் .இது நம் நாட்டுக்கும் வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் .
---------------------------------------------------------------------------------------------------------

Sunday, December 19, 2010

குழந்தைகள் டி.வி மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகம் பார்ப்பதால் மனஅழுத்த நோய்



மன அழுத்தம்லண்டன்: குழந்தைகள் டி.வி மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகம் பார்ப்பதால் மனஅழுத்தம் நோய் அதிகம் உண்டாகிறது என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளதாக ஜர்னல் பீடியாட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது.இது குறித்து இங்கிலாந்தின் பிரிஸ்டோல்ஸ் பல்கலை.,யின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 10-11 வயதுடைய ஆயிரம் குழந்தைகளை பரிசோதனை நடத்தினர். அவர்களை தினமும் இரண்டு மணிநேரம் டி.வி., மற்றும் கம்ப்யூட்டர்களை பார்க்கச் செய்தனர். அவர்களின் சிந்தனை மற்றும் யோசிக்கும் திறன்,பள்ளிகளில் சம மாணவர்களுடன் பழகும் தன்மை ஆகியவை குறைந்து காணப்பட்டது. அதே சமயம் டி.வி., பார்க்காத குழந்தைகளின் செயல்திறன் அனைத்து விஷயங்களிலும் அதிகரித்து உள்ளதையும் கண்டறிந்தனர்.
 (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=107068)
ஒபாமா மகள்களுடன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இருமகள்களான மாலிமா(12) மற்றும் சாஷா(9) ஆகிய இருவரும் பொழுது போக்கிற்காக கேபிள் டி.வி., பார்ப்பதில்லை என ஒபாமா அமெரிக்க டி.வி., சானல் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். ஆனால் இருவரும் நியூஸ் சானல்களை விரும்பி பார்ப்பதாக அவர் தெரிவித்தார். தற்போதை‌ய சூழலில் சிறுவ, சிறுமிகள் பெரும்பாலும் பொழுதுபோக்கிற்‌காக கேபிள் டி.வி., நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கின்ற சூழலில் அமெரிக்க அதிபரின் மகள்கள் இருவரும் நியூஸ் சானல்கள் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 (http://www.dinamalar.com/district_detail.asp?id=135434)

கனிமொழி
கனிமொழி எம்.பி., பேசியதாவது:பெண்கள் சீரியல் பார்ப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏதும் கற்றுக்கொள்ளும் விஷயமும் இருக்காது. பெண்கள் முன்னேற வேண்டுமானால் சுற்றி நடக்கும் விஷயங்களை காதுகொடுத்து கேட்கவேண்டும்.நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.சமூகத்தில் பெண்கள் உயர்வதற்கு மனபலம்,அறிவு பலம் வேண்டும்..............

 .............நிறைய படிக்க வேண்டும். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.நாம் சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள் என உலகத்திற்கு காட்ட வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.
(http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17223)
  
Byரபீக்  சுலைமான் 








ரபீக்  சுலைமான்  தலைவர் அப்துஸ்ஸமது அவர்களுடன்

Wednesday, November 24, 2010

பாண்டியர்கள் மட்டும்தான் ஜொள்ளு விடுவார்களா (வணங்காமுடி பதில்கள்)





பிரபஞ்சத்தை உருவாக்க கடவுள் தேவையில்லை என்கிறாரே ஸ்டீபன்ஹாகின்ஸ்? - மருதை குமார், கடலூர்
ஸ்டீபன் ஹாகின்ஸ் தன்பங்குக்கு ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கிவிட்டு சொன்னால் நல்லது.


மெக்சிகோ வளைகுடா எண்ணை கசிவு தற்போதைய கதி என்ன? - கோபால்
அமெரிக்க ராணுவ ரசசியங்கள் விக்கிலீக்ஸ் மூலம் 'கசிந்த' செய்தி வெளியான பிறகு மெக்சிகோ எண்ணைக் கசிவு பழைய செய்தியாகி விட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் மெக்ஸிகோ வளைகுடாவில், எண்ணெய்க் குழாயில் அடைபட்டிருந்த இயற்கை வாயுவினால் எண்ணெய் உறிந்து எடுக்கும் தளம் சேதமடைந்தது. எண்ணெய்க் குழாயிலிருந்து வெளியேறிய மீதேன் வாயு தீப்பற்றியதால் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள் இறந்தனர். எண்ணெய்க் கிணறும் வெடித்ததால் கடலில் எண்ணெய் பரவி விட்டது. இதனால் கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.கடலோர மக்களும் கடல்சார் தொழில் செய்வோரும் பாதிக்கப்பட்டனர்.அவர்கள் எண்ணெய் நிறுவனமான பி . பி . நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்கள் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காமல், 20 பில்லியன் அமெரிக்க டாலருக்குக் குறையாமல் இடைக்கால நிவாரணம் பெறுவது என்பதே தற்போதைய நிலை.இடைக்கால நிவாரணம் பெறுவதற்காக சுமார் நான்கு லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது.


தீயணைப்புத் துறையில் பெண்கள் ஏன் பணியாற்றுவதில்லை? -கார்த்திக் - தூத்துக்குடி

இந்தியாவில்தான் இல்லை.

காவல் துறையிலும் இப்போது ராணுவத்திலும் பெண்கள் சேவை செய்வதுபோல் விரைவில் தீயணைப்புத் துறையிலும் பெண்கள் சேவையாற்ற்வர். அது தேவையும் கூட.


மற்ற வாகனங்களைப்போல் நடுக்கடலில் கப்பல்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்படுவது கொஞ்சம் ஓவர்தானே? - சந்திரன்'விபத்து' என்பதே எதிர்பாராமல் நடப்பது தானே?

எல்லா விபத்துகளுமே 'ஓவர்'தான். எதுவுமே இயல்பில்லை.

ஒபாமாவின் இந்திய விஜயம் குறித்து வ.மு.வின் கருத்து? - ரவி, அட்லாண்டா
அமெரிக்காவுக்கு லாபம் தேடித்தரும் வணிகப்பயணம் அதன் நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டது.

ஒபாமாவுக்காக, ஒருசிலநாள் நிகழ்ச்சிகளுக்காக, இத்தனை கோடி செலவுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? - ஜான்சன் செபாஸ்டியன்
அமெரிக்காவின் அதிபரின் பாதுகாப்புக்காக அந்நாடு செலவிட்ட தொகையால் நமக்கென்ன இழப்பு?

"சங்கரராமன் கொலைவழக்கில் மேலும் சில சாட்சிகள் பல்டி" எனத் தலைப்பிட்டு செய்தி வருகிறது. சாட்சி, முதலில் சொன்னது அல்லது பின்னர் சொல்வது ஆகிய இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும். அல்லது இரண்டுமே பொய்யாக இருக்க வேண்டும். இது நீதிமன்றத்தில் பணியாற்றும் துப்புறவுத் தொழிலாளிக்கும் தெரியும். இவ்வாறு பிறழ் சாட்சி சொல்பவர்களைக் கடுமையாக தண்டிக்க நம் சட்டத்தில் இடம் உண்டா? - வசீகரன், பட்டுக்கோட்டை

உண்டு.

சாட்சியத்தை மாற்றியதற்காகக் குஜராத் பெஸ்ட்பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜகீரா ஷேக் குஜராத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.


காஷ்மீரிகளைக் கொன்று நிலத்திற்காக சண்டை போடுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? - அப்துல் ரஹ்மான்இன்று காஷ்மீரில் நடப்பது நிலத்திற்கான சண்டை இல்லை. காஷ்மீரிகளை அங்கிருந்து விரட்டும் திட்டமும் இந்தியாவிற்கு இல்லை. இந்தியாவின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டு இந்தியர்களாக வாழ விரும்பாதவர்கள் நடத்தும் போராட்டத்தை அடக்குவதற்காக அங்கு குவிக்கப்பட்டிருக்கும் ராணுவமும் துணை ராணுவப் படைகளும் செய்யும் அட்டூழியங்களை எதிர்க்கும் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

ஒரே மாதிரியான வினாக்களுக்கு விடையளிக்க நேரும்போது என்ன நினைப்பீர்கள் வ.மு ஐயா - சண்முகம், சேத்தியாத்தோப்புபுதிது புதிதாக வாசகர்கள் வருவதால் முன்னர் இதுபோன்ற வினாக்களுக்கு அளித்த விடைகளை அவர்கள் படித்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொள்வதால் அவ்வினாக் களுக்குச் சிறிய விடையளித்து, முன்னர் அளித்துள்ள விடைகள் பற்றியும் குறிப்பிட்டு விடுவேன்.

Wednesday, November 10, 2010

வணங்காமுடி பதில்கள் (07-11-2010)





காஞ்சி சங்கராச்சாரியார் மீதான கொலை வழக்கு தற்போது எந்நிலையில் உள்ளது? - ஜோஸஃப், முளகுமூடு.

குற்ற வழக்குகள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

ஆரம்ப வேகம் இருக்காது; ஆரம்ப விளம்பரமும் கிடைக்காது.

நம் நாட்டு நீதிமன்றங்களின் நடைமுறைபற்றி வ.மு விடைப்பகுதியில் முன்னர் விளக்கப்பட்டுளதே?.

நித்தி வழக்குத் தொடர்பாக இதுபோன்ற ஒரு வினாவுக்கு முன்னர் அளிக்கப்பட்டுள்ள விடையையும் பார்க்கவும். 

இங்கிலாந்திடம் அடிமைபட்டுக்கிடந்த நாடுகள் கலந்து கொள்ளும் பொதுநலவாய போட்டிகளில் அடிமையாக இருந்த அமெரிக்கா கலந்து கொள்வதில்லையே? - முகிலன், துபை.
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இங்கிலாந்து நுழைந்து, அவற்றை அடிமைப் படுத்தியது  போல அமெரிக்காவில் நுழைந்து அவர்களை அடிமைப் படுத்தவில்லை என்பது ஒரு புறமிருக்க, அமெரிக்கா இப்போது உலகின் ஸூப்பர் பவர். இங்கிலாந்து கூட அமெரிக்கா செல்லும் வழியில்தான் செல்ல வேண்டும். அதனால் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், அங்கிள்ஸாம்' கலந்து கொள்ளாமல் இருக்கலாம். அவருக்கு இந்த விளையாட்டுகளை விட மிகவும் பிடித்தது இராக், ஆப்கான் விளையாட்டுகள்தாம். அங்கிள்ஸாம்  அடுத்ததாக ஈரான் விளையாட்டுக்கு ஆயத்தப்படுகிறார்.


மனிதன் கேட்ட முதல் கேள்வி எதுவாக இருக்கும்? - சந்தியா-திருச்சி.

யாரிடம்?


கேரளா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளதே. அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு காங்கிரசுக்கு உள்ளதா? - ராஜ்மோகன், கோவை.கேரளச் சட்டசபைத் தேர்தல் வரலாற்றைப் பார்த்தால் ஐந்தாண்டுகளுக்குக் காங்கிரஸ் முன்னணி, அடுத்த ஐந்தாண்டுகளுக்குக் கம்யூனிஸ்ட் முன்னணி என மாறி மாறி இரு முன்னணிகளுக்கும் கேரள மக்கள் சம வாய்ப்பளித்து வந்துள்ளதைக் காணலாம்.

இப்போது வந்துள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மட்டுமின்றிக் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் கம்யூனிஸ்ட் முன்னணிக்கு எதிராகவே அமைந்திருந்ததை வைத்துப் பார்க்கும்போது வரலாறு அதன் வழியே நடைபோடும் என அனுமானிக்கத் தோன்றுகிறது.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அதிக செலவு வைக்கும் சில நோய்களுக்கு இடமில்லையாமே. பின்னர் எதுக்கு இந்த திட்டம்?  - முனியப்பன், முக்கூடல்.
தானம் கிடைத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள இப்போது உள்ள இந்தத் திட்டம்,  பொதுவாக அடிக்கடி வரும் நோய்களுக்கானது;. ரூபாய் ஓரிலட்சம் வரை செலவு பிடிக்கும் சிகிச்சைக்கு அரசு உதவும் இத்திட்டத்தை, "ஏன் இந்தத் திட்டம்" என உதாசீனப்படுத்துவது அறிவுடைமை ஆகாது.

கலைஞர் காப்பீட்டு திட்டம் குறித்து முன்னர் அளித்த பதிலையும் காண்க.

பல மத அடையாளங்களில் காட்சித்தரும் அதிபர் ஓபாமா உண்மையில் யார் கிறிஸ்தவரா, யூதரா, முஸ்லீமா அல்லது லூசிஃபரை(சைத்தான்)
வணங்குபவரா?
- செபாஸ்டீன், சென்னை.
முன்னர் இதுபோன்ற ஒரு வினாவுக்குக் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி விடை அளிக்கப்பட்டுள்ளது.

தாம் கிருத்துவன் என ஒபாமாவே சொன்ன பிறகு மற்றவர்கள் அதைத்தூண்டித் துருவி ஆராயத் தேவையென்ன?

அவரது மதம் அமெரிக்க அதிபர் பதவியின்  அதிகாரத்தில் எவ்வித ஏற்றத்தாழ்வையும் ஏற்படுத்துவதில்லை எனும்போது உங்களுக்கு அதில் ஏன் இவ்வளவு அக்கறை?

காஷ்மீர் மக்கள்  விரும்புவது இந்தியாவையா அல்லது பாகிஸ்தானையா அல்லது தனி நாடாக பிரிந்து போகவா? - அம்பிளி, பரைக்கோடு.

காஷ்மீரைப் பாகிஸ்தான் விரும்புகிறது; இந்தியாவும் விரும்புகிறது.

அதனால்தானே இரு நாடுகளும் குட்டி காஷ்மீரைப் பங்கு போட்டுள்ளன?