கவிஞர் அஸ்மின்
--------------------------------------
எனது வாழ்க்கை பயணத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்த நிகழ்ச்சி சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசர்கள்.ஊரறிய இருந்த என் திறமைகளை உலகறியச் செய்ய அடிகோலியது இந்த நிகழ்ச்சி.இன்று நான் தென்னிந்திய சினிமாவில் பாடல் எழுதுவதற்கு ஆரம்ப விதை தூவியது இந்த நிகழ்ச்சிதான்.
இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இப்போது முகாமையாளராக பணிபுரியும் சகோதரர் ஷியா இருந்தார்.பின்னாளில் வந்த என் ஒவ்வொரு வெற்றியிலும் அவருக்கும் அதிகமான பங்கு இருக்கிறது.அவரை இந்த நிமிடத்திலும் நன்றியுடன் நினைவுகூறுகின்றேன்.
2008ம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்ச்சி ஒரு வருடகாலமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.இந்த நிகழ்ச்சியின்வாயிலாக பல புதிய கலைஞர்கள் இலங்கையில் உருவானார்கள்.போட்டியில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்கள் மத்தியில் இருந்து 3 சுற்றுத் திறந்த தேர்வுகளின் பின் 16 பாடலாசிரியர்கள், 16 இசையமைப்பாளர்கள், 16 பாடகர்கள், 16 பாடகிகள் 16 ராகங்களுக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டனர்.