Showing posts with label கத்தி. Show all posts
Showing posts with label கத்தி. Show all posts

Tuesday, October 28, 2014

- ஏங்க கத்தி பாத்தீங்களா...?

- ஏங்க கத்தி பாத்தீங்களா...?
- இல்லியே. நான் கத்தலையே...?
- நான் அதைக்கேக்கலே. கத்தி பாத்தீங்களான்னு கேட்டேன்.
- நான் ஏன் கத்திப் பாக்கணும். எனக்கு தொண்டை நல்லாத்தானே இருக்கு...?
- அய்யோ... நான் கேட்டது கத்தி பாத்தீங்களா...?
- கத்தி.... ஆமா. பார்த்தேனே!
- எங்கே பாத்தீங்க...?
- கிச்சன்லதான் இருந்துச்சு... ஸ்ட்வ் பக்கத்துல!
- அய்யோ... நான் கேட்டது விஜயோட கத்தி பாத்தீங்களா...?
- நம்ம வீட்டுலயே கத்தி இருக்கும்போது விஜயோட கத்தியை நான் எதுக்கு பாக்கணும்...?
- அய்யோ... நான் கேட்டது கத்தி சினிமா பாத்தீங்களா...?
- சினிமா பார்க்க எதுக்கு கத்தோணும்...?
ஆஆஆஆஆஆஆ.... என்கையில மட்டும் கத்தி கிடைச்சுது...
*
ஹிஹிஹி.... சும்
 
Shah Jahan(புதியவன்
**************************************
படித்ததில் (கேட்டதில்) பிடித்தது  
நன்றி 
Shah Jahan(புதியவன் ) அவர்களுக்கு

Thursday, December 27, 2012

வாழ்கைக்கே தகுதியான புத்தி வேண்டும்.

கத்தியைக் கொண்டு காய்கறி வெட்டினாள் தாய்
கத்தியைக் கையாள புத்தி வேண்டும்

தாயின் செயலைக் கண்ட குழந்தை
தானும் அச் செயலைச்  செய்ய
தனது விரலில் கத்தி கீற
தனது விரலில் குருதி கொட்ட
வலி தாளாமல் கதறியது

கதறல் ஒலி கேட்க
ஓடி வந்த தாய் பதறிப் போனாள்
புத்தியின்றி ஏன்  எடுததாய் கத்தியை?
குழந்தைக்கு ஓங்கி ஒரு அடியும் கொடுத்தாள்
அடியின் வலி காயத்தின் வலியோடு சேர
 குழந்தையின் கதறல் வேகமானது
கதறலை அடக்க மேலும் ஓர் அடி!

கத்தி யெடுத்து காய்கறி அறுக்க தெரிந்த புத்தி
புத்தியோடு பிள்ளையை வளர்க்கத் தெரியாமல் போனது
பாசம் புத்தியை கெடுத்தது.

கத்தியை யெடுக்க மட்டும் புத்தி தகுதியாகாது!
வாழ்கைக்கே தகுதியான புத்தி வேண்டும்.