Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts
Sunday, February 9, 2014
என்றாள், என்றேன்..!! இப்படியாக தொடர்ந்தது ....!
நான் என்பது பொதுப்பெயர் என்றாள்,
பிரபஞ்சத்தின் துணுக்குகள் தன்னை பிரபஞ்சமாக நினைத்துக் கொள்ளும் மயக்கம் என்றேன்...!!
ஓவியம் என்பது வண்ணங்களின் கலவை என்றால்
இசை என்பது ஒலிகளின் முயக்கம் என்றாள்,
இவையிரண்டுமே புலன்களின் மயக்கம் என்றேன்..!!
கலை என்பது இச்சைகளின் புனிதப்போர்வை என்றாள்,
புனிதம் என்பது கற்பிதங்களின் உருவெளித்தோற்றம் என்றேன்..!!
ஓவியம் என்பது உணர்வுகளின் வர்ணம் என்றாள்,
வர்ணம் என்பது இசையதிர்வுகளின் கண்காட்சி என்றேன்..!!
Monday, March 19, 2012
கலை,ஓவியம்,கவிதை வீடியோ.Art Project
வாழ்நாள் சிறிது ! வளர்கலை பெரிது!! 'தமிழில் கலை என்பதற்கு கற்றற்கு உரியவை எல்லாம் கலை என்ற பொது வரையறையாற் தரப்படுகிறது'.கிடைத்த வாழ்வை பயனுள்ளதாய் செலவிடவேண்டும் . நம்மால் சாதனை செய்யமுடியவில்லை என்ற எண்ணம் மனதில் தோன்றும்பொழுது மற்றவர்கள் செய்த சாதனைகளைப் பார்க்கும் நம் மனதில் நம்மை அறியாமலேயே ஒரு ஆர்வம் நம்மை தூண்டிவிடும். உலகத்தினை முடிந்தவரை உங்களால் முடிந்தால் பார்க்க முயலுங்கள் .அது வேடிகைக்காவும் கேளிக்கைக்காகவும் இருந்துவிடாமல் நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் இருப்பது மிகவும் அவசியம் சீன தேசம் சென்றாயினும் சீர் கல்வியைத் தேடு என்பது நபிமொழி.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. அதனால் நம் எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும்
அவசியம்.மகிழ்வான வாழ்வு ஆரோகியத்தின் அடித்தளம். அப்படி நாம் பெற்ற அறிவினை மகிழ்வினை அடுத்தவரிடம் பகிர்ந்துக் கொள்ளும்பொழுது நமக்குள் ஓர் மகிழ்வு வருவதனை நாம் அறிவோம்.

Friday, June 3, 2011
Subscribe to:
Posts (Atom)