Showing posts with label உடல் நலம் -Health. Show all posts
Showing posts with label உடல் நலம் -Health. Show all posts
Thursday, February 12, 2015
வாழ்வு நலத்திற்கு வாழைப்பழம்!
எளிதில் கிடைக்கும் எந்த ஒன்றின் அருமையும் எளிதாய் புலப்படாது என்பார்கள். காசு பணத்திலிருந்து கீரைகள் வரை, பாச உறவுகளிலிருந்து பழங்கனிகள் வரை இந்த உண்மை அவ்வப்போது உறைக்கத் தான் செய்கிறது. அவற்றுள் ஒன்று வாழை.
வாழைப்பழம் வேண்டாத குரங்கும் உண்டோ என்று பழமொழி இருக்கிறது. "வாழை வாழவும் வைக்கும்; தாழவும் வைக்கும்" என்பதும் ஒரு பழமொழி. அம்பணம், அரம்பை, கதலி, பனசம், மடல், கோள் என்ற பெயர்களிலும் தமிழலக்கியத்தில் வாழை வாழ்ந்து கொண்டிருக்கிறது, வாழையடி வாழையாக.
தாம்பூலப் பொருளாவதிலிருந்து தமிழர் திருமணப் பந்தலின் முகப்புத் தூணாகி நிற்பது வரை வாழையின் பயன்கள் எண்ணில. ஏனைய பயன்களை விடவும் சிறந்த மருத்துவப் பயன்களை எளிமையாகத் தரவல்லது வாழை என்னும் அளவில்அந்த ‘எளிய’ உண்மைகளிலிருந்து ஒன்றை இங்கு உரைக்கப் பார்க்கிறேன்.
Wednesday, June 22, 2011
மருத்துவமனையால் ஏற்படும் தடுமாற்றம் !
உடல் நலம் சரியில்லை, வியாதி வந்து விட்டது. வைத்தியம் செய்தாக வேண்டும் . வீட்டில் இருந்தால் என்ன செய்வது! .மருத்துவரை அணுக வேண்டும் மருத்துவமனை போக வேண்டும் . பணம் செலவுதான் ஆகும் .மருத்துவர் சொல்லும் நியாயமான டெஸ்ட் செய்தாக வேண்டும். ஆனால் டாக்டர் எடுக்கச் சொல்லும் டெஸ்டிலேயே (எக்ஸ்ரே, CT scans,MRI scans, மற்றும் பல) புது வியாதியும் வந்து கடனாளியாகவும் ஆக வேண்டியதுதான் .
மருத்துவ தொழில் சேவை செய்யும் தொழிலாக இருந்தது போய் வியாபாரமாக மாறிவிட்டது .
இங்கு சுட்டிப் பாருங்கள் .Read more and know the real examples...
மருத்துவ தொழில் சேவை செய்யும் தொழிலாக இருந்தது போய் வியாபாரமாக மாறிவிட்டது .
இங்கு சுட்டிப் பாருங்கள் .Read more and know the real examples...
Saturday, October 16, 2010
தாய்க்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் : குழந்தைக்கு ரொம்ப நல்லது !
தாய்மைக் காலத்தின் முதல் பாகத்தில் இத்தகைய அசௌகரியங்களைச் சந்திக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என அறிவிக்கிறது இந்த ஆராய்ச்சி.
தலை சுற்றல், வாந்தி , மயக்கம் எல்லாமே ஆரோக்கியமான தாய்மையின் அடையாளங்கள் எனவும், இத்தகைய அறிகுறிகள் காணப்படும் பெண்களின் குழந்தைகள் இதயம் தொடர்பான நோய்கள் வருவதிலிருந்து தப்புகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
கூடவே இப்படிப்பட்ட சிக்கல்கள் அன்னைக்கு இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பும் பெருமளவில் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
121 தாய்மார்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு குழந்தைகளுடைய மூன்றாவது வயது மற்றும் ஏழாவது வயதில் சோதனைகளை நடத்தியது. இதில் தாய்மைக்காலத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்த தாய்மார்களின் குழந்தைகளை விட தாய்மைக்காலத்தில் கஷ்டப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் படு சுட்டிகளாக இருந்தார்களாம்.
சரளமாகப் பேசுவது, சிறு சிறு கணிதங்களைச் செய்வது என நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தாய்மைக் காலத்தில் நிகழும் ஹார்மோன் வெளியேற்றமே இந்த “மார்னிங் சிக்னெஸ்” எனப்படும் சிக்கல்களுக்குக் காரணம் எனவும், இது கருவையும், கருப்பையையும் பாதுகாக்கும் நிகழ்வு எனவும் மருத்துவ விளக்கம் அளிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
தாய்மைக் காலத்தில் சிக்கல்களைத் தாங்க வேண்டிய தாய்மார்களுக்கு இந்த தகவல் மிகவும் உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.
வாந்தி, மயக்கம் வரும்போதெல்லாம் தன் குழந்தையின் அறிவாற்றல் விருத்தியடைகிறது என நினைத்து அன்னையர் இனிமேல் மகிழ்ச்சி அடைவார்களாக.
சேவியர்
Source : https://sirippu.wordpress.com/2009/05/12/morning_sickness/
Sunday, October 10, 2010
பழம் பார்கலையோ பழம்! பார்த்து மகிழுங்கள்.
ஆரோய்கியமான அழகிய பழங்கள் பார்பதர்கும் அழகு, மனதிற்கும் இனிமை.
பழம்புதிய பழமாக இருக்க வேண்டும். உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நேரடியாக தரக்கூடியவை பழங்கள் மட்டுமே.
சில பழங்கள் பனி வெண்மையாகவும், சில மஞ்சள் நிறமாகவும், சில சிவப்பாகவும் ... பழம் இனிப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
பொதுவாக இயற்கை பானங்களை விரும்புவோர் அனைவருமே பழச்சாறுகளை (ஜூஸ்) அதிகம் விரும்பி அருந்துவார்கள்.
பார்த்து மகிழுங்கள்.
பழம்புதிய பழமாக இருக்க வேண்டும். உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நேரடியாக தரக்கூடியவை பழங்கள் மட்டுமே.
சில பழங்கள் பனி வெண்மையாகவும், சில மஞ்சள் நிறமாகவும், சில சிவப்பாகவும் ... பழம் இனிப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
பொதுவாக இயற்கை பானங்களை விரும்புவோர் அனைவருமே பழச்சாறுகளை (ஜூஸ்) அதிகம் விரும்பி அருந்துவார்கள்.
பார்த்து மகிழுங்கள்.
Wednesday, September 1, 2010
நடப்பதும் பாத மசாஜும் நல்லது--படம் ஒரு விளக்கம்
தினமும் முடிந்த வரை வேகமாக அதி காலையில் நடப்பது மிகவும் நல்லது.
இது உடல் எடை அதிகரிக்கமல் பாதுகாப்பதுடன் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.
இதய சம்பந்தமான நோய்கள் வருவதிலிருந்து பாதுகாக்கிறது. இதய சம்பந்தமான நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி செயல் படுவது நல்லது .
வெறும் காலால் நடப்பவரது பாதங்கள் நல்ல நிலையில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் காலில் செருப்பணியாமல் நடப்பது மிகவும் நல்லது ...இது ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும்,(பாத மசாஜும் நல்லது--படம் ஒரு விளக்கம்)
நடப்பது நல்லது மாலை மட்டுமல்ல எப்பொழுதுமே நடப்பது நல்லது.
தரையில் பதியும்படி காலை வைத்து அழுத்தமாக ஊன்றி நடக்க வேண்டும். .
காலையில் நடப்பது நல்ல பலன் தரும். தொப்பையை குறைக்கவும்
தினமும் உடற்பயிற்சியும் பாத மசாஜும் மிகவும் அவசியம் --
Tuesday, August 3, 2010
உற்சாகத்தில் உறட்டும் மனசு
by K.G.Rajendra Babu Courtesy: Dinamani Tamil Newspaper
Monday, August 2, 2010
தயிர் அருமையான மருந்தும் கூட
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி’யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.
அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.
மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.
சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில கட்டி வருவது சிறந்த மருந்தாகும்.தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது
http://muthupet.org/?p=5258
Thursday, June 24, 2010
ஈரல் வறுவல்
நளன்
தேவையான பொருட்கள்:
ஆட்டு ஈரல் - 500 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 4
இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன்
பட்டை, இலை - தாளிக்க
ஆட்டு ஈரல் - 500 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 4
இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன்
பட்டை, இலை - தாளிக்க
செய்முறை:
ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும்.
மிளக, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும். வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும்.
வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலை போட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி & பூண்டு விழுது, ம.பொடி, ஒரு டீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.
மிளக, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும். வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும்.
வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலை போட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி & பூண்டு விழுது, ம.பொடி, ஒரு டீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.
'நன்றி: www.keetru.com'
Source :http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2517:2010-01-25-07-33-42&catid=19:non-veg&Itemid=133Sunday, June 20, 2010
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் --நளன்
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க சீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு. முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, சீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.
சீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. சீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.
மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவியாக இருக்கும் :
1. உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.
2. சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
3. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
4. பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.
'நன்றி: www.keetru.com
சீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. சீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.
மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவியாக இருக்கும் :
1. உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.
2. சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
3. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
4. பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.
'நன்றி: www.keetru.com
Monday, June 14, 2010
மெகா பிரியாணி.....
இது தான் மெகா பிரியாணி....கின்னஸ் சாதனையில் இடம்பெறலாம்.....எப்படி எல்லாம் சாதனைப் படைக்கிறார்கள்....!
Posted by கிளியனூர் இஸ்மத்
Labels: http://lrismath.blogspot.com/அரபிகள், உணவு, பிரியாணி
Sunday, June 13, 2010
கப்ஸா.. [அரபி சாப்பாடு]
அரபிசாப்பாடு, ருசியோ ருசி. அசைவம்.
கோழி வெந்தததும் அதைஎடுத்து குங்குமப்பூ போட்டு இதேபோல் வைத்துக்கொள்ளவும்


தேவையானவைகள்
பாஸ்மதி அரிசி 4 கப்
ஃபிரஸ் கோழி 2
குங்குமப்பூ தேவையான அளவு
பட்டை. ஏலம். லவங்கம். பிரிஞ்சியிலை. கிராம்பு.
முந்திரி திராட்சை
காயவைத்த எழும்பிச்சை[இங்கு ரெடிமேடாக கிடைக்கும்]
உப்பு
நெய் கொஞ்சம்
முதலில் ஒருகோழியை நான்கு பீஸாக்கி நன்றாக சுத்தம் செய்து,அதை ஒரு பத்திரத்தில் [சிறிது வேண்டுமெனில்ஆயில்விட்டு]. பட்டை. ஏலம். லவங்கம். பிரிஞ்சியிலை.காய்ந்த எழும்பிச்சை போட்டு அதில் தேவையான தண்ணீர் விட்டு அதில் கோழியும் உப்பும்போட்டு வேகவைக்கவும்.
வேகும்போது அசடுபோல் மேல்வரும் அதை ஒரு கரண்டியால் எடுத்துவிடவும். [அது வேஸ்ட் கொழுப்பு]

ஒரு அகன்ற பாத்திரத்தில் சிறுநெய்விட்டு சூடானதும் அதில் கோழிவேகவைத்த தண்ணீர் இருக்குமல்லவா அதை அரிசி கணக்கின்படி அளந்து ஊற்றவும்
அந்த தண்ணீரில் கழுவிய அரிசியை போடவும். அதில் சிறு குங்குமப்பூவோ அல்லது கலரோ சேர்க்கலாம்.

அடுப்பை சிம்மில் வைத்து மூடிவைக்கவும்.
சிறுதுநேரம் கழித்து திறந்து சோறு உடைந்துவிடாதவாறு கிளறிவிட்டு.
அதன்மேல் கோழிகளை அலங்கரிக்கவும்.
அதன்மேல் முந்திரி திராட்சை வறுத்துக்கொட்டவும்.
இப்போது கமகமக்கும் கப்ஸா ரெடி. இது எவ்வித மசாலாக்களும் இல்லாத மிகுந்த சுவைதரக்கூடிய ஒரு அரபிசாப்பாட்டு. சாப்பிட சாப்பிட வாசமும் மணமும் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.[இந்த சாப்பாட்டின் ருசியே கோழிவேகவைத்த தண்ணீரில் செய்வதுதான்]
இதற்கு சைடிஸ். தக்காளி. பச்சைமிளகாய். பொதினா. உப்புசேர்த்து கொரகொரப்பாக அரைத்து சட்னி செய்துக்கொள்ளவும்
கூடவே எழும்பிச்சை வெள்ளரி கேரட். முள்ளங்கி இலை.
வெள்ளை வெங்காயம் இவைகளை பச்சை சாலட் செய்து
கடித்துக்கொள்ளவும் [அச்சோ நாக்கையல்ல பச்சை சாலடை]
இதை நாங்க சவுதி சென்றிருந்தபோது [உம்ரா செய்ய] அங்கே சாப்பிட்டோம். ஏனோ தெரியவில்லை ப்ரியமென்றால் ப்ரியம் அப்படியொரு ப்ரியம் இச்சாப்பாட்டின்மேல். அதேபோல் மச்சானும் அடிக்கடி செய்து தருவார்கள்.[நாங்க செய்யும் முறை இப்படிதான்]
இது ஜெய்லானி அண்ணாவுக்காக சென்ற வெள்ளியன்று செய்யச்சொல்லி. இரு குடும்பங்கள் சாப்பிட்டோம். அண்ணாத்தே உங்க புண்ணியத்தில் ஒரே வாரத்தில் இருமுறை இச்சாப்பட்டு கிடைத்தமைக்கு மிக்க நன்றிங்கண்ணா!
இது ரைஸ்குக்கரில் எனக்குமட்டும் செய்தது அதுவும் புழுங்கல் அரிசியில் எப்புடி

இதுக்கு சைடிஸ்
வெரும் வெள்ளரியும் தயிரும் மல்லியும் உப்பும்
காராமணி மிச்சரும் மிக்ஸிங் கூட வே பேரிச்சமழமும்
எப்படி...
இப்படி அடிக்கடி ஏதாவது புது டிஸ்ஸா கேளுங்க அந்த சாக்கில் நாம் வெளுத்து வாங்கிருவோம்...
அன்புடன் மலிக்கா
Source : http://kalaisaral.blogspot.comஅரபிசாப்பாடு, ருசியோ ருசி. அசைவம்.
Subscribe to:
Posts (Atom)















